Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
புஷ்கலா தேவியின் காதல்... கை பிடித்து ஏற்றுக்கொண்ட ஆரியங்காவு தர்மசாஸ்தா!
ஐயப்பனின் ஆறுபடை வீடுகளாக கருதப்படும் முக்கியமான ஆறு ஐயப்பன் தலங்களில் முதலாவதாக இருப்பது இந்த ஆரியங்காவு ஐயப்பன் கோவில் தான். முருகப் பெருமானுக்கு ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடாக திருப்பரங்குன்றம் உள
சபரிமலையில் தர்மசாஸ்தாவான வீற்றிருக்கும் ஐயப்பனை பிரம்மச்சாரியாகவே நாம் அனைவரும் பூஜித்து கும்பிட்டு வருகிறோம். பந்தளத்தில் பச்சிளம் குழந்தையாகவும், குளத்துப் புழாவில் பாலகனாகவும், அச்சன்கோவிலில் அரசனாகவும், எரிமேலியில் கையில் வில் அம்புகளை ஏந்திகொண்டு வேட்டைக்காரனாகவும் காட்சியளிக்கும் ஐயப்பன் ஒர் இடத்தில் மட்டும் குடும்பஸ்தனாக காட்சி கொடுக்கிறார். அது தான் ஆரியங்காவு ஐயப்பன் கோவில்.

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் தர்மசாஸ்தாவான ஐயப்பனுக்கும் புஷ்கலா தேவிக்கும் கல்யாண உற்சவ விழா நடத்தப்படுகிறது. இந்த கல்யாண உற்சவ விழாவிற்காக, திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர், சபரிமலை ஐயப்பன் தேவசம் போர்டு உறுப்பினர்கள், சம்பந்தி என்ற முறைப்படி, சவுராஷ்டிர மக்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி கவுரவப்படுத்துகின்றனர்.
ஐயப்பனின் ஆறுபடை வீடுகளாக கருதப்படும் முக்கியமான ஆறு ஐயப்பன் தலங்களில் முதலாவதாக இருப்பது இந்த ஆரியங்காவு ஐயப்பன் கோவில் தான். முருகப் பெருமானுக்கு ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடாக திருப்பரங்குன்றம் உள்ளது போலவே, ஐயப்பனுக்கு முதலும் முக்கியமான தலமாக இந்த ஆரியங்காவு கோவில் விளங்குகிறது.

ஆரியங்காவு ஐயப்பன் திருமணம்
சுவாமி ஐயப்பன் சபரிமலையில் பிரம்மச்சாரியாகவும் குளத்துப்புழையில் பாலகனாகவும் இளைஞராக புஷ்கலா தேவியுடன் ஆரியங்காவிலும், பூர்ணா, புஷ்கலா தேவியருடன் அச்சன்கோவிலிலும் காட்சி தருகிறார். கோவில் கேரளா பாணியில் இருந்தாலும் அங்கு நடைபெறும் உற்சவங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் நடைபெறுவது போலவே கொண்டாடப்படுகிறது. அதற்குக் காரணம் ஆரியங்காவு ஐயப்பன் திருமணம் முடித்தது மதுரையைச் சேர்ந்த சவுராஷ்டிரா பெண்ணான புஷ்கலா தேவியை.

தம்பதியாக தரிசனம்
ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் தர்மசாஸ்தாவான ஐயப்பன், புஷ்கலா தேவியுடன் தம்பதி சமேதராக காட்சி கொடுக்கிறார். பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வரும் வழியில் தரிசிக்கும் முதல் ஆலயமும் இந்த ஆரியங்காவு ஐயப்பன் கோவில் தான். இங்கும் ஆண்கள் மட்டுமே நுழைய அனுமதியுண்டு. அதேபோல், 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்களுக்கு அனுமதி கிடையாது. அதே சமயம் தம்பதி சமேதராக வந்து தரிசனம் செய்வதற்கு அனுமதியுண்டு.

பரசுராமர் உருவாக்கிய ஆலயம்
பரசுராமர் பூமி என்றழைக்கப்படும் கேரளாவில், பரசுராமரால் உருவாக்கப்பட்ட ஐந்து ஐயப்பன் ஆலங்களில் ஆரியங்காவு தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலும் ஒன்று. இங்கு தான், ஐயப்பன் புஷ்கலை என்னும் சவுராஷ்டிர குலப் பெண்ணுடன் தம்பதியாக அரச கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்துக்கொண்டு உள்ளார். இக்கோவிலில், ஆண்டுதோறும், மார்கழி மாதத்தில் (தனுர் மாதம்) தர்மசாஸ்தாவான ஐயப்பனுக்கும், புஷ்கலைக்கும் கல்யாண உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கல்யாண உற்சவத்தின் போது, மலையாள ஆச்சார அனுஷ்டானங்களோடு, தமிழ்நாட்டு கலாச்சாரமும் பின்பற்றப்படுகிறது.

ஐயப்பன்-புஷ்கலா தேவி கல்யாண உற்சவம்
ஆண்டு தோறும் நடைபெறும் ஐயப்பன்-புஷ்கலா தேவி கல்யாண உற்சவம் பற்றி தலபுராணமும் உள்ளது. அதாவது, திருவிதாங்கூர் அரச குடும்பத்தினருக்கு தேவையான ஆடைகளை நெசவு செய்வதற்காகவே சவுராஷ்டிர சமுதாயத்தை சேர்ந்த சிலர் மதுரையில் இருந்தனர். அவர்களில் ஒருவர், ஒரு சமயம் திருவிதாங்கூர் அரச குடும்பத்தினருக்கு தேவையான ஆடைகளை நெய்து எடுத்துக்கொண்டு, உடன் தன்னுடைய பருவ வயது மகளான புஷ்கலையையும் உடன் அழைத்துக்கொண்டு சென்றார். தான் போகும் வழியானது அடர்ந்த காட்டு வழிப்பாதை என்பதோடு, இரவு நேரம் என்பதால். அருகில் உள்ள ஆரியங்காவு தர்மசாஸ்தா கோவில் பூசாரியின் வீட்டில் தன் மகள் புஷ்கலையை ஒப்படைத்து, அரச குடும்பத்திற்கு தேவையான உடைகளை கொடுத்துவிட்டு, தான் வரும் வரையில் பாதுகாப்பாக கவனித்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு சென்றார்.

ஐயப்பன் மீது காதல்
புஷ்கலையும், தன்னுடைய தந்தை வரும் வரையில், தர்மசாஸ்தாவான ஐயப்பன் பூஜைக்கு தேவையான பணிவிடைகளை பக்தி சிரத்தையோடு செய்து வந்தார். ஒரு கட்டத்தில் பிரம்மச்சாரியான ஐயப்பன் மீது மையல் கொண்டாள். இந்நிலையில் திருவிதாங்கூர் அரண்மனைக்கு ஆடைகள் கொடுக்க சென்ற நெசவாளி, தான் வந்த வேலை முடிந்த திருப்தியோடு காட்டு வழியாக ஆரியங்காவு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மதம் கொண்ட யானை ஒன்று நெசவாளியை தாக்க ஓடி வந்தது.

பெண் கேட்ட தர்மசாஸ்தா
அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு தோன்றிய அழகான இளைஞன் ஒருவன், அந்த மதயானையை விரட்டியடித்து, நெசவாளியை காப்பாற்றுகிறார். அதைப் பார்த்து நெகிழ்ந்த நெசவாளி, தான் இதற்கு என்ன கைமாறு செய்வேன் என்று ஐயனே என்று புலம்பினார். உடனே அந்த இளைஞன், ஐயா, உங்கள் மகள் புஷ்கலையை எனக்கு மணம் முடித்து தாருங்கள் என்று சொல்லி ஆசீர்வதித்துவிட்டு மறைந்து போனான். பின்னர், அங்கிருந்து ஆரியங்காவு திரும்பி வந்த நெசவாளிக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

திருமணத்திற்கு சம்மதம்
யானையிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிய இளைஞன் எந்த ரூபத்தில் இருந்தானோ, அதே ரூபத்தில் தர்மசாஸ்தா காட்சியளித்துக் கொண்டிருந்தார். உடனே நெசவாளிக்கு புரிந்துவிட்டது, தன்னை காப்பாற்றியதும், தன்னுடைய மகளை கரம்பற்ற நினைத்ததும் அந்த ஐயப்பன் தான் என்று. நடந்த விஷயத்தை பூசாரியிடமும் தெரிவித்தார். அதே சமயத்தில் புஷ்கலையும் தான் ஐயப்பன் மீது வைத்துள்ள காதலை தெரிவிக்க, நெசவாளியும் தன் மகளை ஐயப்பனுக்கு மணம் முடித்துக் கொடுக்க சம்மதித்தார்.

திருவிதாங்கூர் அரசர்
இந்த விஷயம் உடனடியாக திருவிதாங்கூர் அரசருக்கு தெரிய வர, அவரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். உடனடியாக திருமண ஏற்பாடுகளை செய்த நெசவாளி, மதுரையில் இருக்கும் தன்னுடைய சொந்த பந்தங்களுக்கு தகவல் அனுப்பி அவர்களையும் ஆரியங்காவுக்கு வரச் செய்தார். குறித்த நாளில், தர்மசாஸ்தாவான ஐயப்பன் புஷ்கலைக்கு நேரில் தரிசனம் தந்து, அவளுடைய கரம் பற்றி தன்னுடன் ஆட்கொண்டார் என்று தலபுராணம் கூறுகிறது.

மார்கழியில் திருமணம்
இதன் காரணமாகவே, ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் தர்மசாஸ்தாவான ஐயப்பனுக்கும் புஷ்கலா தேவிக்கும் கல்யாண உற்சவ விழா நடத்தப்படுகிறது. இந்த கல்யாண உற்சவ விழாவிற்காக, திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர், சபரிமலை ஐயப்பன் தேவசம் போர்டு உறுப்பினர்கள், சம்பந்தி என்ற முறைப்படி, சவுராஷ்டிர மக்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி கவுரவப்படுத்துகின்றனர். அதே போல், சம்பந்தி என்ற முறையில், ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கம் மதுரை என்ற அமைப்பை நிருவி, திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று விழாவை சிறப்புற நடத்தி தருகின்றனர். மேலும், தங்கள் குலப்பெண்ணான புஷ்கலா தேவிக்கு சீதனமும் எடுத்துச் செல்கின்றனர்.

பூரண புஷ்கலா தேவி சமேத தர்மசாஸ்தா
ஆரியங்காவு தர்மசாஸ்தாவிற்கு புஷ்கலா போல பூரணி என்ற மற்றொரு மனைவியும், சத்யகா என்ற மகனும் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்த கோவில் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் செங்கோட்டையிலிருந்து சுமார் 23 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஆரியங்காவு கோயில் காலை 7 மணி முதல் 11 மணி வரை. மாலை 4 மணி முதல் 7 மணி வரை திறந்திருக்கும்.



Click it and Unblock the Notifications











