Latest Updates
-
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க -
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க..
அருண் ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி... விரைந்தார் பிரதமர் மோடி
அருண் ஜேட்லி திடீரென எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் என்ன நடந்தது என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.
முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒருமுறை உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதனாலேயே பாராளுமன்ற தேர்தலில் எனக்கு எந்தவித அமைச்சர் பதவியும் வேண்டாம்.

உடல் நிலை சீராக இல்லாமல் என்று ஒரு கடிதத்தை எழுதியிருந்தது நமக்கு நன்றாகத் தெரிந்த விஷயம் தான். ஆனால் தேர்தலுக்குப் பின்பாக, அவருடைய உடல்நிலை சீராகவும் நல்ல முன்னேற்றத்துடனும் தான் இருந்தது. இந்த நிலையில் தான் இப்படி ஒரு விஷயம் வெள்ளிக்கிழமை காலையில் நடந்திருக்கிறது.

மூச்சுத்திணறல்
அருண் ஜேட்வலி அவர்களுக்கு வெள்ளிக்கிழமை காலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. உடனே எய்ம்ஸ் மருத்துவமனையில் காலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்

கார்டியாலஜி
எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் கார்டியாலஜி துறைக்கு மாற்றப்பட்டு, மருத்துவப் பரிசோதனை செய்த பின்பு, அவருக்கு மூச்சுத் திணறல் தான் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவித்தனர்.

தொடர் கண்காணிப்பு
இதயம் மற்றும் நெப்ராலிஸ்ட் துறையில் அனுமதிக்கப்பட்ட அருண் ஜேட்லிக்கு 66 வயது. வயதின் காரணமான மூச்சுத்திணறல் ஏற்பட்டு வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு அனுமதிக்கப்பட்டதும், தற்போது வரை தொடர்ந்து அவருடைய உடல் நலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி
அருண் ஜேட்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அருண் ஜேட்லியின் உடல்நிலையை விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றார்.

அமைச்சர்கள்
மருத்துவமனைக்கு பழரதமர் செல்லும் முன்பாகவே மத்திய அமைச்சர் அமித்ஷா, ஹர்ஷவர்தன் மற்றும் ஸ்பீக்கர் ஓம் பிர்லா ஆகியோரும் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்திருக்கிறார்கள். சனிக்கிழமை காலையிலேயே வெங்கைய்யா நாயுடு மருத்துவமனைக்கு நலம் விசாரிக்கச் சென்றிருக்கிறார்.

சிகிச்சை
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அருண் ஜேட்லிக்கு அவ்வப்போது உடல்நலக் கோளாறு ஏற்பட்டு வந்தது. கடந்த ஆண்டு அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் நடந்தது. இவருக்கு நீரிழிவு நோய் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த முறை பயப்படும்படி எதுவும் இல்லை. வெறுமனே மூச்சுத்திணறல் தான். இயல்பு நிலையில் உள்ளார் எனவும் தொடர்ந்து அவருடைய உடல்நலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமநிலை
உடல்நிலை ஸ்டேபிளாக இருப்பதாகவும் கொடுக்கப்படும் சிகிச்சையை அவருடைய ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications