Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வாஸ்துப்படி, ஒரு வாளி தண்ணீரை இப்படி வெச்சா கடன் பிரச்சனை சீக்கிரம் சரியாயிடும்...
நீங்கள் கடன் பிரச்சனையால் அதிகம் கஷ்டப்பட்டு வந்தால், வாஸ்துப்படி ஒருசில விஷயங்களை செய்வதன் மூலம், கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதோடு, நிதி நிலைமை மேம்படும்.
வாஸ்துப்படி வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் வெவ்வெறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே நம் வீட்டில் உள்ள பொருட்களை கவனிக்க வேண்டியது அவசியம். இதனால் வீட்டுச்சூழல் இனிமையாகவும், வாழ்க்கை சீராகவும் செல்லும். வாழ்க்கை என்றால் அதில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். ஆனால் இந்த பிரச்சனைகள் ஒருவரது வீட்டில் திடீரென்று அதிகரிக்கிறது என்றால், அதற்கு வீட்டில் நாம் வைத்திருக்கும் சில பொருட்களும் முக்கிய காரணமாக இருக்கும் என வாஸ்து வாஸ்திரம் கூறுகிறது.

குறிப்பாக நீங்கள் கடன் பிரச்சனையால் அதிகம் கஷ்டப்பட்டு வந்தால், வாஸ்துப்படி ஒருசில விஷயங்களை செய்வதன் மூலம், கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதோடு, நிதி நிலைமை மேம்படும். இப்போது அந்த மாதிரியான ஒரு சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

குளியலறையில் நீல நிற வாளி
வாஸ்துப்படி, குளியலறையில் எப்போதும் நீல நிற வாளியைத் தான் வைத்திருக்க வேண்டும். மேலும் வாளியானது மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். இதனால் வீட்டில் மகிழ்ச்சி எப்போதும் நிலைத்திருக்கும்.

இந்நீரில் குளிக்கக்கூடாது
உங்களுக்கு கடன் இருந்தால், இரவு தூங்கும் முன் ஒரு நீல நிற வாளி முழுவதும் நீரை நிரப்பி, மறுநாள் காலையில் அந்நீரால் குளியலறையை சுத்தம் செய்ய வேண்டுமே தவிர, மறந்தும் அந்நீரில் குளிக்கக்கூடாது.

காலியான வாளியை வைத்திருக்கக்கூடாது
வாஸ்துப்படி, குளியலறையில் இருக்கும் வாளி காலியாக இருக்கக்கூடாது. இது வீட்டில் எதிர்மறை ஆற்றலை வரவழைக்கும். முக்கியமாக வாளியில் நீரை நிரப்பி அதை மூடி வைக்காமல், திறந்து வைத்திருங்கள். இதனால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

அழுக்கு பாத்திரங்கள்
இரவு நேரங்களில் சமையலறையில் அழுக்குப் பாத்திரங்களை வைத்திருக்கக்கூடாது. இரவு நேரத்தில் பாத்திரங்களை சுத்தம் செய்ய முடியாவிட்டால், நீரில் மட்டுமாவது கழுவி வைத்திருங்கள். இதனால் பண இழப்பு ஏற்படாமல் இருக்கும்.

குறிப்பு
வாஸ்து சாஸ்திரத்தின் பொருள், வீட்டின் நான்கு திசைகளில் இருந்தும் வரும் ஆற்றல்களை சமநிலைப்படுத்துவதாகும். இந்த ஆற்றல்கள சரியான முறையில் பெற்றால், வீட்டுச் சூழல் அமைதியாகவும், மகிழ்ச்சியுடனும் இருக்கும். சமநிலை இல்லாவிட்டால், வீட்டில் கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே வாஸ்துப்படி வீட்டில் வைத்திருக்கும் பொருட்களின் மீது சிறப்பு கவனம் செலுத்துங்கள்.



Click it and Unblock the Notifications