For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே நொடியில் 60 பறவைகள் பறந்து கொண்டே இறந்து பூமியில் விழுந்தது?... ஏன் இப்படி நடந்தது?

60 பறவைகள் ஒரே நொடியில் பறந்து விழுந்து இறந்த கொடுமை? அப்படி என்ன தான் நடக்கிறது என்பதை தான் உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறோம்.

|

தற்போது எல்லாம் காலநிலை மாற்றம் என்பது மிகக் கொடூரமாக தன் உருவத்தை காட்டி வருகிறது. இந்த காலநிலை மாற்றத்தால் இரத்த மழை, மீன்களின் இறப்பு போன்ற ஏராளமான மர்மங்களையும் நாம் பார்த்து உள்ளோம். ஆனால் பறவைகள் ஒட்டுமொத்தமாக இறக்க கண்டீரா?

 60 Birds Fall To Death From Sky

ஒரே நொடியில் 60 பறவைகள் பறந்து கொண்டே இறந்து பூமியில் விழுந்தது?... ஏன் இப்படி நடந்தது? வாங்க பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலியா

இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்து இருக்கிறது. தெற்கு ஆசியாவில் கிட்டத்தட்ட 60 பறவைகள் ஒரே நேரத்தில் வானத்தில் இருந்து இறந்து விழுந்துள்ளன. இந்த பயங்கரமான சம்பவம் அடிலெய்டில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் நடந்துள்ளது. பறவையின் உடம்பில் எதாவது விஷம் ஏறியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஒரே நேரத்தில் 60 பறவைகளும் விழுந்தது பார்ப்பவரை " ஒரு திகில் படத்திற்கு அழைத்துச் சென்றது போல்" இருந்தது என்று பலரும் கூறுகின்றனர்.

பறவை மீட்பு

பறவை மீட்பு

காஸ்பர்ஸ் பறவை மீட்பு (அடிலெய்டை தளமாகக் கொண்ட ஒரு தொண்டு நிறுவனம், பறவைகளின் நலனைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட) நிறுவனர் சாரா கிங் இதை நேரில் பார்த்து தன்னுடைய பதிவை பதிவு செய்துள்ளார்.

MOST READ:உடலுறவுக்குப் பின் நிறைய ஆண்கள் ஏன் தம் அடிக்கிறார்கள் தெரியுமா? இதுதான் மேட்டரு...

பறவைகளின் வலி

பறவைகளின் வலி

இதில் 2-3 பறவைகள் தரையில் விழுந்து வலியால் துடிதுடித்து இறந்தன என்று அங்குள்ள உள்ளூர் வாசிகள் கூறியுள்ளனர். பறவைகளின் கண்களில் இருந்தும், வாய்ப்பகுதியில் இருந்தும் இரத்தம் வருவதால் அவற்றால் பறக்க முடியவில்லை. இதில் குறைந்தது 57 பறவைகள் கோர்லாக்கள் என்ற அரிய வகை பாதுகாக்கப்பட வேண்டிய இனத்தை சார்ந்தது என்று பிபிசி செய்தி தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி பறவைகள் இறக்க காரணம் அதற்கு கொடுக்கப்பட்ட விஷம் என்று ரிப்போர்ட் கூறுகிறது. இந்த விஷம் பறவைகளை மெது மெதுவாக கொல்லும் என்று ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நச்சுயியல் அறிக்கை

நச்சுயியல் அறிக்கை

இந்த பயங்கரமான சம்பவம் குறித்து நச்சியல் அறிக்கை ஒன்று திரட்டப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் முடிவுகள் முடிக்கப்படவில்லை. இந்த பறவைகள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் காணப்படுகின்றன. கட்டடங்கள், இரண்டு எஃகு ஜோயிஸ்ட்களால் செய்யப்பட்ட மின் இணைப்பு கம்பம், கான்கிரீட், விளக்குகள், மர அமைப்புகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றிற்கு சேதத்தை விளைவிக்கின்றன. அதே மாதிரி தாவரங்கள் மற்றும் பயிர்களுக்கும் சேதத்தை விளைவிக்கும் என்று அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். இதனால் கூட மனிதர்கள் இதற்கு விஷம் வைத்து கொன்று இருக்கலாம் என்று வதந்தி பரவியுள்ளது.

எது எப்படி இருந்தாலும் இயற்கையை பாதுகாக்க வேண்டிய கடமை மனிதர்களுக்கு உண்டு. இயற்கையின் கொடையின் கீழ் வாழும் ஒவ்வொரு உயிர்களையும் பாதுகாப்பது தான் நாம் வாழ ஏற்ற சூழ்நிலையை உருவாக்கும்.

MOST READ:வெறும் பொம்மைகள் மட்டும் வாழும் அமானுஷ்ய கிராமத்தை பாருங்க... பார்க்கவே பீதியா இருக்கு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

60 Birds Fall To Death From Sky; Mass Poisoning Suspected

This concern, was once again, raised after people witnessed a sudden death of over 60 native birds of South Australia. Check out more details of this incident.
Desktop Bottom Promotion