Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
59 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில்உருவாகும் 5 ராஜ யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
2022 செப்டம்பர் மாதத்தில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களின் பெயர்ச்சிகளால் ஒரு அற்புதமான யோகம் சுமார் 59 ஆண்டுகளுக்கு பிறகு கூடிவருவதாக கூறப்படுகிறது.
ஜோதிடத்தின் படி, செப்டம்பர் மாதம் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றும் போது நிறைய யோகங்கள் உருவாகின்றன. அதுவும் ஒன்று, இரண்டு அல்ல, 5 சுப ராஜ யோகங்கள் ஒரே நாளில், 2022 செப்டம்பர் 24 ஆம் தேதி சேர்கின்றன. அதுவும் 59 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதிரியான 5 சுப யோகங்கள் ஒரே நாளில் வருகின்றன.
2022 செப்டம்பர் மாதத்தில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களின் பெயர்ச்சிகளால் ஒரு அற்புதமான யோகம் சுமார் 59 ஆண்டுகளுக்கு பிறகு கூடிவருவதாக கூறப்படுகிறது. 2022 செப்டம்பர் 24 ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு சென்ற பின் ஒரு அரிய ராஜ யோகம் உருவாவதாகவும் கூறப்படுகிறது.

ஜோதிடத்தின் படி, நீச்ச பங்க ராஜயோகம், புதாதித்ய ராஜயோகம், பத்ர ராஜயோகம் மற்றும் ஹன்ச ராஜயோகம் உருவாகிறது. அதில் நீச்ச பங்க ராஜயோகம் இரண்டு வடிவங்களில் உருவாகிறது. இது தவிர, சூரியன், புதன் மற்றும் சுக்கிரனால் திரிகிரக ராஜயோகம் கன்னியில் உருவாகிறது. எனவே இந்த 5 ராஜயோகங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது தவிர, செப்டம்பர் மாதத்தில் குரு, சனி மற்றும் புதன் ஆகிய மூன்று கிரகங்களும் வக்ர நிலையில் உள்ளன. இப்போது 59 ஆண்டுகளுக்கு பிறகு 5 ராஜயோகங்கள் செப்டம்பரில் உருவாவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

ரிஷபம்
இந்த அரிய யோகங்களால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். எதிர்காலத்தில் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. சுக்கிரன் தாழ்வான நிலையில் இருப்பதால் பலவீனமான ராஜயோகம் உருவாகும். குரு சாதகமான நிலையில் இருப்பதால், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதே வேளையில் சனி அதிர்ஷ்ட வீட்டில் இருப்பதால், இரும்பு, பெட்ரோலிய பொருட்களை தொழிலாக கொணடவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதோடு, நவபஞ்சம் மற்றும் சமசப்தம யோகமும் பொருந்தி வருவதால், திடீரென்று நிதி நிலைமை மேம்படும். இருப்பினும், வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு வெற்றிகரமான காலமாக இருக்கும். ஹன்ச ராஜயோகம் தொழில் மற்றும் வியாபாரத்தில் விரும்பிய வெற்றியைத் தரும். வாழ்க்கைத் துணையினால் செல்வம் அதிகரிக்கும். மாணவர்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இக்காலத்தில் பெரிய பதவியைப் பெற வாய்ப்புள்ளது. மேலும் இந்த ராசிக்காரர்களின் புகழும் அதிகரிக்கும். மூன்று சுப கிரகங்கள் மையத்தில் இருப்பதால், விதியின் ஆதரவைப் பெறுவதாக கூறப்படுகிறது.

கன்னி
இந்த அரிய ராஜயோகங்களால் கன்னி ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் நிறைந்த காலமாக இருக்கும். புதன் நல்ல நிலையில் இருப்பதால், வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். மறுபுறம், செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தின் அதிபதியான சுக்கிரனால் உருவாகும் ராஜயோகத்தால், திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும். மீடியா, திரைப்பட துறைகளுடன் தொடர்புடையவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். மேலும் உங்களின் தடைப்பட்ட வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். மொத்தத்தில், இக்காலம் அதிர்ஷ்டகரமான காலமாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான காலமாக இருக்கு. இக்காலத்தில் ஹன்ச, நீசபங்க மற்றும் பத்ர ராஜயோகங்கள் உருவாவதால், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் புதிதாக கிடைக்கும் ஒப்பந்தம் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். வியாபாரிகளுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல பலனை அளிப்பதாக இருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் பொன்னான காலமாக இருக்கும். சனி சுப நிலையில் உள்ளார். இதனால் நீசபங்க மற்றும் பத்ர என்ற ராஜயோகம் உருவாவதால், வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கு இது சாதகமான காலமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications