Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
இந்த ராசிக்காரர்கள் எப்படியும் தங்கள் முன்னாள் காதலர்களுடன் சேர்ந்து விடுவார்களாம் தெரியுமா?
சிலர் காதலில் முறிவு ஏற்பட்டவுடன் புதிய காதலுக்கு மாறிவிடுவார்கள், சிலர் அவர்களை மறந்து விட்டு வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற நினைப்பார்கள். ஆனால் சிலரோ காத்திருந்து மீண்டும் அதே காதலை தொடர
காதலும் சரி, காதல் தோல்வியும் சரி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். அதிலும் இப்போதுள்ள அவசர காலத்தில் காதல் ஏற்படும் காலத்தை விட காதலில் முறிவு ஏற்படும் காலம் மிகவும் குறைவாக மாறிவிட்டது. அனைவரின் வாழ்விலும் ஒரு காதல் தோல்வி நிச்சயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் வாழ்க்கை அங்கேயே நின்றுவிடுவதில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இல்லையெனில் காதலில் மட்டுமல்ல வாழக்கையில் தோற்றுவிடுவோம்.

சிலர் காதலில் முறிவு ஏற்பட்டவுடன் புதிய காதலுக்கு மாறிவிடுவார்கள், சிலர் அவர்களை மறந்து விட்டு வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற நினைப்பார்கள். ஆனால் சிலரோ காத்திருந்து மீண்டும் அதே காதலை தொடர நினைப்பார்கள். இதில் தவறில்லை என்றாலும் தங்கள் மீது தவறு இல்லாத பொது இப்படி பழைய காதலர்களுக்காக காத்திருப்பது என்பது முட்டாள்தனத்தின் உச்சம். சிலருக்கு இந்த குணம் அவர்கள் பிறந்த ராசியால் ஏற்படும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்கார்கள் தங்கள் பழைய காதலர்களிடம் மீண்டும் செல்வார்கள் என்று பார்க்கலாம்.

கடகம்
பன்னிரண்டு ராசிகளிலேயே மிகவும் உணர்ச்சிவசப்பட கூடிய கடக ராசிக்காரர்கள் மீண்டும் தங்கள் பழைய காதலை தேடி செல்வதில் ஆச்சரியம் எதுவுமில்லை. அவர்கள் காதலில் விழும்போது மிகவும் ஆழமாக விழுந்து விடுவார்கள், ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். அவர்கள் எவ்வளவு காயப்பட்டாலும் சரி தங்கள் பழைய காதலிடம் மீண்டும் ஸ்;செல்ல வாய்ப்பை எதிர்கொக்கியே காத்திருப்பார்கள். பழகிய நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைத்து பார்ப்பது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதனாலேயே எப்பொழுதும் தஙகள் பழைய காதலுக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்க தயாராய் இருப்பார்கள்.

மீனம்
இவர்கள் இரண்டாவது வாய்ப்பு மட்டுமல்ல அதற்கு மேற்பட்ட வாய்ப்புகள் கொடுக்க கூட தயங்க மாட்டார்கள், எனவே இவர்கள் எப்பொழுதும் தான் சரியான முடிவுதான் எடுக்கிறோம் என்பதில் நம்பிக்கை உள்ளவர்கள். இவர்களுக்கு காதல் முறிவு எப்படி ஏற்பட்டது என்பது கூட நினைவில் இருக்காது, இரண்டாவது வாய்ப்பில் அவர்கள் திருந்தி விடுவார்கள் என்று நம்புவார்கள். காதல் முறிவு மோசமான அனுபவமாக இருந்தாலும் அதனை நினைத்து வருந்தாமல் வருங்காலத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க நினைப்பார்கள். தனிமையில் இருப்பது இவர்களுக்கு பிடிக்காது எனவே எப்பொழுதும் துணைக்காக காத்துக்கொண்டே இருப்பார்கள்.

துலாம்
இவர்கள் எப்பொழுதும் தங்கள் முன்னாள் துணைக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்க தயாராய் இருப்பார்கள், ஆனால் அவர்கள் முன்பு போல் இல்லாமல் மாறியிருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஒருவேளை உங்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் காதல் முறிவு ஏற்பட்டால் நீங்கள் உங்களை மாற்றிக்கொண்டால் மட்டுமே அவர்களுடனான உறவை தொட முடியும். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் இருக்கும் எந்த உறவையும் இழக்க விரும்பமாட்டார்கள். இவர்கள் எளிதில் மற்றவர்களுடன் பழகிவிடுவார்கள், அவர்கள் இவர்களை காயப்படுத்தினாலும் இவர்கள் அவர்களை வெறுக்க மாட்டார்கள். அதனால்தான் எப்பொழுதும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு இவர்கள் இரண்டாம் வாய்ப்பு தர காத்திருப்பார்கள். எவ்வளவு காலமானாலும் சரி தங்களின் துணையை ஏற்றுக்கொள்ள இவர்கள் தயாராய் இருப்பார்கள்.

மேஷம்
மேஷ ராசிக்கார்கள் மீண்டும் தங்கள் முன்னாள் காதலர்களிடம் செல்ல காரணம் இவர்களால் நீண்ட காலத்திற்கு கஷ்டங்களை பொறுத்து கொள்ள முடியாது. காதல் முறிவு ஏற்பட்ட ஆரம்ப காலத்தில் இவர்கள் பைத்தியம் போல இருப்பார்கள், ஆனால் முன்னாள் காதலின் நினைவுகள், அவர்களின் ஸ்பரிசம், தீண்டல் என அனைத்தும் இவர்க்ளின் நிம்மதியை கெடுக்கும். இவர்களுக்கு தேவை சிறிது காலம்தான் அது முடிந்தவுடன் மீண்டும் காதலை புதியதாக தொடங்க தயாராகி விடுவார்கள். அனைவருக்கும் இரண்டாவது வாய்ப்பு என்பது அவசியம் என்பதில் தீவிர நம்பிக்கை உடையவர்கள் இவர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் தங்கள் காதலில் ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்ய முயலுவதில் முதலாவதாக இருப்பார்கள். ஏனெனில் இவர்கள் அந்த உறவில் மூழ்கியிருப்பார்கள். அவர்களின் காதலில் முறிவு ஏற்படும் போது அவர்கள் இந்த உலகத்தில் இருந்து தனித்து விடப்பட்டது போல உணருவார்கள். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் எப்படி பேச வேண்டும் என்பது பற்றிய எந்த தெளிவும் இருக்காது. அவர்கள் மீண்டும் கிடைக்கும் வரை அவர்களை தொந்தரவு செய்து கொண்டே இருப்பார்கள். எப்பொழுதும் பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்களின் விடா முயற்சியும், காத்திருப்பும் இவர்களின் காதலுக்கு மீண்டும் அழகிய தொடக்கத்தை தரும்.

விருச்சிகம்
தேவைப்பட்டால் உறவில் இருந்து வெளியேறும் தைரியம் உள்ளவர்கள் இவர்கள். ஆனால் மன்னிக்க முடியாத குற்றம் செய்யாத வரை உங்களால் அந்த முடிவிற்கு வரஇயலாது. அதுவரை எவ்வளவு காயப்பட்டாலும் உங்களால் காதலை விட்டு வெளியேற இயலாது. மிகவும் ஆழமாகவும், அழகாகவும் காதலிக்கும் இவர்கள் எப்பொழுதும் தங்கள் துணையும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள், அப்படி ஒருவர் காதலித்தால் அவர்களுடனான உறவை இவர்கள் ஒருபோதும் முறித்து கொள்ள மாட்டார்கள். ஒருவேளை முறிந்தாலும் மீண்டும் புதுப்பிக்க எப்பொழுதும் தயாராய் இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications