Latest Updates
-
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது!
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் ஷாப்பிங் செய்தே சொத்தை அழித்து விடுவார்களாம் தெரியுமா?
சிலர் பொழுதுபோக்கிற்காக ஷாப்பிங் செல்வார்கள், சிலருக்கோ ஷாப்பிங் போவதுதான் வேலையாகவே இருக்கும்.
இந்த உலகில் அனைவருக்குமே பிடித்த ஒரு விஷயம் இருக்கிறதென்றால் அது ஷாப்பிங் செல்வதுதான். ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு ஷாப்பிங் செல்வது என்பது மிகவும் பிடித்ததாக இருக்கிறது என்று ஆய்வுகள் சொல்கிறது. ஆண்களும் ஷாப்பிங் செல்வதில் பெண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல.

சிலர் பொழுதுபோக்கிற்காக ஷாப்பிங் செல்வார்கள், சிலருக்கோ ஷாப்பிங் போவதுதான் வேலையாகவே இருக்கும். வாங்குகிறோமோ? இல்லையோ? ஆனால் ஷாப்பிங் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இப்போது பெரும்பாலானோருக்கு உள்ளது. இப்படி ஷாப்பிங் மோகம் பிடிக்க காரணம் அவர்களின் ராசியாக கூட இருக்கலாம். இந்த பதிவில் அதிக ஷாப்பிங் செய்ய விரும்பும் ராசிகள் யார் யாரென பார்க்கலாம்.

தனுசு
நீங்கள் ஒரு பொருளை வாங்க ஷாப்பிங் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் எந்த சக்தியாலும் உங்களை தடுக்க முடியாது. அது மிகவும் ஸ்பெஷலான ஒன்றாகவும் இருக்கலாம், சாதாரண ஒன்றாகவும் இருக்கலாம் ஆனால் உங்களுக்கு ஷாப்பிங் சென்றே ஆக வேண்டும். எந்த வழியிலாவது நீங்கள் அதனை பெற்றுவிடுவீர்கள். நீங்கள் எப்பொழுதும் தனியாக ஷாப்பிங் செய்யவே விரும்புவீர்கள். ஷாப்பிங் செய்து வாங்கிய பைகளுடன் சாலையில் நடப்பதை விட உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் எதுவும் இருக்காது.

சிம்மம்
நீங்கள் உங்களுக்காக பொருட்கள் வாங்கும்போது எப்படி மகிழ்கிறீர்களோ அதேபோல மற்றவர்களுக்காக வாங்கும்போதும் மகிழ்ச்சி அடைவீர்கள். பொதுவாகவே உங்களுக்கு மற்றவர்களுக்கு பரிசு கொடுப்பது பிடித்தமான ஒன்றாகும். பிறருக்கு பிடித்த பொருளை வாங்கி கொடுத்து அவர்களின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் த்ரில் உங்களுக்கு மிகவும் பிடித்தாகும். பிறருக்கு அன்பளிப்பு கொடுப்பதில் நீங்கள் எப்பொழுதும் தாராளமாக இருப்பீர்கள், ஆனால் அதற்கான பணத்தை எப்படி சம்பாரிக்க வேண்டும் என்பதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். பணம் இருந்தால்தான் நீங்கள் விருப்பபடி அதனை செலவழிக்க முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.

மேஷம்
ஷாப்பிங் செல்ல கிளம்ப வேண்டுமென்றால் முதலில் ரெடியாகி தயாராக இருப்பது இவர்களாகத்தான் இருக்கும். நல்ல விலை, தள்ளுபடி பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலையே இல்லை, இவர்களின் ஆசைகளையும், கற்பனைகளையும் பூர்த்தி செய்ய தங்கள் முழு வருமானத்தையும் செலவழிக்க இவர்கள் தயங்க மாட்டார்கள். அது உணவு, உடை, விளையாட்டு பொருட்கள் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். இவர்கள் கையில் பணம் கிடைத்து விட்டால் அதனை வைத்து எந்த ஆசையை நிறைவேற்றலாம் என்ற யோசனைதான் இவர்களுக்கு முதலில் வரும். ஆசைகள் பூர்த்தி அடையும் வரை இவர்கள் ஓயமாட்டார்கள்.

கடகம்
பணத்தை விரும்பிய உணவு, உடை, பொழுதுபோக்கு போன்றவற்றிற்காக செலவழிக்கும் மகிழ்ச்சியை விட சிறந்த மகிழ்ச்சி இவர்களுக்கு எதுவும் இருக்காது. சொல்லபோனால் இவர்கள் தங்களுக்காக செலவு செய்து கொள்வதில்தான் அதிக ஆர்வம் செலுத்துவார்கள். பேரம் பேசுவது இவர்களுக்கு பிடிக்காது உண்மையில் வராது அதனால் தான் விரும்புவது எந்த விலையாக இருந்தாலும் அதனை கொடுத்து வாங்கிவிடுவார்கள். நினைத்ததை வாங்கிய பின்னர்தான் இவர்களின் முகத்தில் மகிழ்ச்சியையே பார்க்க முடியும்.

துலாம்
உங்களின் பேராசை மிக்க சிறிய கைகள் எத்தனை பொருட்களை தாங்க முடியுமோ அத்தனை பொருட்களையும் வாங்க நீங்கள் விரும்புவீர்கள். ஏனெனில் உங்கள் கைகளும், உங்கள் கண்களும் உங்களுக்கான பொருட்களை தேடிக்கொண்டே இருக்கும். நீங்கள் கொஞ்சம் கஞ்சத்தனமானவர்தான் அனைவரும் இதனை நன்கு அறிவார்கள் ஆனால் உங்களுக்கு தேவையானவற்றை கொண்டு உங்களை தினமும் கவனித்து கொள்ளும்போது அதைப்பற்றி கவலைப்பட என்ன இருக்கிறது. உங்கள் பணம் உங்களுக்கும் உங்களின் நெருக்கமானவர்களுக்கு மட்டும்தான் என்ற எண்ணம் உங்களுக்குள் எப்பொழுதும் இருக்கும்.

ரிஷபம்
உங்களுக்கு தேவையென்றால் நீங்கள் அதனை வாங்கிவிடுவீர்கள். யாருடைய ஒப்புதலுக்காகவோ, அனுமதிக்காகவோ அல்லது விலைக்காகவே நீங்கள் காத்திருக்க மாட்டிர்கள். உங்கள் பணத்தை எதற்கு செலவழிக்கிறோம் என்ற கவலையே உங்களுக்கு இருக்காது. பணம் பற்றிய அழுத்தம் உங்களுக்கு எப்பொழுதும் இருக்காது. உங்களின் தேவையெல்லாம் உங்களுடைய மகிழ்ச்சியும் அதற்கு தேவையான பொருட்களும்தான், அதற்காக என்ன விலை கொடுக்கவும் நீங்கள் தயாராக இருப்பீர்கள்



Click it and Unblock the Notifications
