Latest Updates
-
புதன் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
காரசாரமான கேரளா ஸ்டைல் ஈஸி பெப்பர் சிக்கன் ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... வேற லெவல் சைடிஷா இருக்கும்...! -
கள்ளக்காதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ள 4 ராசிகள் இவங்கதான்... இவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...! -
காரசாரமான.. ஹைதராபாதி சிக்கன் கிரேவி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம் தேடிவருமாம்...! -
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்...
இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்க தான் டாப்... மத்தவங்க அடுத்தது தான்...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
வேலையில் உங்களுடைய பொறுப்புகள் கூடுதலாக அதிகரிக்கத் தொடங்கும். உடன் பணிபுரிகின்றவர்களைப் பற்றிய புரிதலும் அனுதாபமும் அதிகரிக்கும். வேகவேகமாக முடிதடத காரியங்களின் முடிவுகள் உங்களுக்குச் சாதகமான வர கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். வீட்டில் உள்ளவர்களுடன் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ளவும். எதிர் பாலினத்தவர்களால் சின்ன சின்ன மனக் கஷ்டங்கள் வந்து போகும். ஆடை ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

ரிஷபம்
தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். அதனால் உடலும் மனமும் சோர்வாகக் காணப்படும். மனதுக்குள் தோன்றுகின்ற தெளிவற்ற எண்ணங்களினால் உங்களுடைய காரியங்களில் கொஞ்சம் காலதாமதங்கள் ஏற்படும். அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொண்டால் சரியாக இருக்கும். வீட்டுக்கு உறவினர்களுடைய வருகையினால் உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உருவாகும். சேமிப்பை அதிகரிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

மிதுனம்
வீட்டில் கால்நடை வளர்ப்பவர்களாகவோ தொழில் ரீதியாக கால்நடைகளோடு சம்பந்தப்பட்டவர்களாகவோ இருந்தால் அதன் மூலம் பெரும் லாபம் அடைவீர்கள். வீட்டில் உள்ள பெரியோர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். நெருக்கமான உறவினர்களிடம் கொஞ்சம் கவனமாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ளுங்கள். தொழிலில் உங்களுக்கு இருக்கும் போட்டிகளைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில் ரீதியான அலைச்சல்கள் இருந்தாலும் அதன்மூலம் புதிய வாய்ப்புகளும் உருவாகும். மனதுக்குள்ளே புதுவகையான எண்ணங்கள் வந்து போகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

கடகம்
பரம்பரை சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு மிக எளிதாக தீர்வுகளைக் கண்டுபிடித்துவிடுவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட வேலைகளில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயங்கள் மிகச் சரியான நேரத்தில் உங்களுக்கு வந்து சேரும். தொழிலில் பங்கு தாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். தொழிலில் உங்களுக்கான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து கொள்வீர்கள். போட்டித் தேர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்
முக்கிய உத்தியோகத்தில் இருக்கின்றவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கத் தொடங்கும். வீட்டில் உள்ளவர்களிடம் கொஞசம் அனுசரணையோடும் பொறுமையுடனும் நடந்து கொள்ளுங்கள். மனதுக்குள் தோன்றுகின்ற தேவையில்லாத எண்ணங்களின் மூலம் மனம் மற்றும் உடலில் சிறிது சோர்வு உண்டாகும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சவாலான சூழல்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் கைக்கு வந்து சேருவதற்கு கொஞ்சம் காலதாமதமாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கன்னி
தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கின்ற அத்தனை முயற்சிகளும் மிகச் சிறந்த பலன்களைத் தரும். கல்வித் துறையில் மாணவர்களுக்கு அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கான மேன்மையான சூழல்கள் உருவாகும். நண்பர்களின் மூலமாக பொருளாதார முன்னேற்றங்கள் உண்டாகும். தொழிலில் புதிய முதலீடுகளின் மூலம் கொஞ்சம் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்
முக்கிய வேலைகளில் இருந்து வந்த தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி, அதன்மூலம் உங்களுக்குள் இருக்கின்ற ஒற்றுமை மேலோங்கும். இதுவரையில் கைக்கு வந்து சேராமல் இருந்த பண வரவுகள் உங்களுடைய கைக்கு வந்து சேரும். காதுகளுக்கு வரும் சுப செய்திகளின் மூலம் உங்களுக்கு மன மகிழ்ச்சியும் சின்ன சின்ன உடல் ரீதியான அலைச்சல்களும் ஏற்படலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும் வீட்டில் உள்ளவர்குளுடைய சின்ன சின்ன ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பீர்கள். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் உங்களுக்குத் திருப்தியான சூழல்கள் உண்டாகும். பதவி உயர்விற்கான முயற்சிகள் உங்களுக்குக் கைக்கொடுக்கும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் அதிகரிக்கும். பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது கொஞ்சம் கூடுதல் நிதானங்கள் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

தனுசு
தொழில் சம்பந்தமான உங்களுடைய சிந்தனைகள் அதிகரிக்கத் தொடங்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளின் மூலமாக உங்களுக்குச் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் உங்களுக்கு புதிய நபர்களுடைய அறிமுகங்கள் தொழிலில் நல்ல மாற்றங்களை உருவாக்கும். உங்களுடைய பொருளாதார மாற்றங்களுக்கான மேம்படுத்தலுக்கான முயுற்சிகள் அதிகரிக்கத் தொடங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மகரம்
நீங்கள் நினைத்த காரியங்கைள நினைத்தபடி மிகச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார வரவில் கொஞ்சம் கால தாமதம் ஏற்படலாம். வீட்டில் உள்ள பெரியோர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது, உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியிடங்களில் உங்களுக்கான செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கும்பம்
முக்கிய உத்தியோகத்தில் உள்ள உங்களுக்கு வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்களுடைய வேலையாட்களின் மூலமான நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வெளியூா பயணங்களின் மூலம் சில இடைஞ்சல்க்ள வந்து போகும். திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் உங்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். உங்களுடைய முயற்சிகளுக்கு ஏற்ற முன்னேற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மீனம்
வணிகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நீங்கள் எதிர்பார்த்த சுப செய்திகள் உங்களுக்கு வந்து சேரும். பயணங்களின் மூலம் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். உங்களுடைய தலைமை ஆதிகாரிகளுடைய முழு ஆதரவும் உங்களுக்கு இருக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை மிகவும் சிரத்தையுடன் மேற்கொள்வீர்கள். தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பதனால் உங்களுக்கு சாதகமான சூழல்க்ள உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











