Latest Updates
-
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பொருட்களை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம் -
சாக்லேட் கொழுக்கட்டை ரெசிபி - விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத உலகின் சந்தோஷமான நாடு - இந்த நாட்ல பிறக்க கொடுத்த வைச்சிருக்கணும் -
சிக்கன் ஷோலே கபாப் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
செப்டம்பர் 13, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (13 செப்டம்பர் 2026- 19 செப்டம்பர் 2026) - இந்த வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க.. இல்ல அவர் கோபத்துக்கு ஆளாவீங்க! -
ராகு-கேது பெயர்ச்சி 2026: துலாம் முதல் மீனம் வரை யாருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும்?- விளக்கும் ஜோதிடர்! -
விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாட்டி இந்த அம்மிணி கொழுக்கட்டையை ட்ரை பண்ணி பாருங்க..
புதன் கிழமையன்று பிள்ளையாரை வழிபடுவது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது தெரியுமா?
வேத குறிப்புகளின் படி புதன் கிழமை விநாயகரை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். புதன்கிழமை விநாயகரை வழிபடுவது முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்து மதத்தின் மிகவும் முக்கியமான கடவுள் என்றால் அது விநாயகர்தான். வினைதீர்க்கும் விநாயகரை வழிபடுவது உங்களுக்கு வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் கொடுக்கும். வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கடவுளும், குருவும் உள்ளார்கள்.

வேத குறிப்புகளின் படி புதன் கிழமை விநாயகரை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். புதன்கிழமை விநாயகரை வழிபடுவது முக்கியத்துவம் வாய்ந்தது. தந்திர சாஸ்திரங்களின் படி விநாயகரை தனிப்பட்ட நன்மைக்காகவும், வியாபார நன்மைக்காகவும் பல்வேறு வடிவங்களில் வழிபடலாம். புதன் கிழமையில் இந்த வடிவங்களில் ஒரு பிள்ளையாரை வழிபடுவது பல நன்மைகளை வழங்கும்.

வெள்ளை பிள்ளையார்
குறிப்பிட்ட தாவரத்தின் வேரிலிருந்து தயாரிக்கப்படும் வெள்ளை நிற விநாயகர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது கணபதி ஸ்வேதர்க் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விநாயகரை வீட்டில் வைத்து, சரியான சடங்குகளுடன் வழிபடுவது வீட்டிலிருந்து எதிர்மறை ஆற்றல்களை விரட்ட உதவுகிறது.

சிவப்பு விநாயகர்
வாழ்க்கையில் எதிரிகள் இல்லாமல் வாழ வேண்டும் என்று அனைவர்க்கும் ஆசை இருக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சிவப்பு விநாயகரை புதன் கிழமையில் வழிபட வேண்டும். இது உங்களை அனைத்து எதிரிகளின் தொல்லைகளில் இருந்தும் பாதுகாக்கும்.

வெள்ளி பிள்ளையார்
வெள்ளி பிள்ளையாரை வழிபடுவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் புதன் கிழமையில் வெள்ளி பிள்ளையாரை சரியான முறையில் வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பணக்கஷ்டத்தையும் போக்கும். வெள்ளி பிள்ளையார் வழிபாடு வீட்டில் செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.

சந்தன பிள்ளையார்
குடும்ப உறவுகளை பொறுத்த வரை கடவுள் வழிபாடு என்பது மிகவும் முக்கியமானது. விநாயகரின் வழிபாடு குடும்ப உறவுகளை இணைக்க உதவுகிறது. சந்தன பிள்ளையாரை புதன் கிழமையன்று வழிபடுவது குடும்பத்தில் பிணைப்பை ஏற்படுத்தி குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

மெர்குரி விநாயகர்
மெர்குரி விநாயகர் வழிபாடு மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பிள்ளையாரை புதன் கிழமை வழிபடுவது உங்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவதோடு உங்களின் தனிப்பட்ட மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
