Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
தற்கொலை செய்ய போன பொண்ணு மூஞ்சி வெடிச்சு செத்த கொடூரத்த நீங்களே பாருங்க...
தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு வாய் மட்டும் வெடித்த கொடுமையைப் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். அந்த கொடூரக் கதை பற்றிய தொகுப்பு தான் இது.
செய்தி இணையதளங்கள், தொலைக்காட்சிகள், நாளிதழ்கள் எல்லாவற்றிலும் தற்கொலை செய்திகள் நிறைந்துள்ளன. நோய் கொடுமை, கடன்பாரம், குடும்ப பிரச்னை என்று பல காரணிகள் தற்கொலை முடிவை நோக்கித் தள்ளுகின்றன.

ஏதோ ஒரு பிரச்னையால் தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒரு பெண்ணுக்கு யாரும் எதிர்பார்க்காத பரிதாபம் நேர்ந்துள்ளது.

விஷம் குடித்த ஷீலா
உத்திர பிரதேசத்தில் ஷீலா தேவி என்ற பெண் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து விஷம் அருந்தியுள்ளார். அப்பெண் அருந்திய நச்சுப் பொருளில் ஏற்பட்ட வேதிவினை காரணமாக அவரது முகம் வெடித்து தீப்பற்றியுள்ளது.

காமிராவில் பதிவான சிகிச்சை
அவரை அலிகாரிலுள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் வயிற்றிலிருந்து விஷத்தை வெளியேற்றுவதற்காக ஷீலா தேவியின் வாய் வழியாக குழாயை செலுத்தியுள்ளனர். எதிர்பாராத விதமாக ஷீலா தேவியின் வாய் வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது.
தங்கள் அனுபவத்தில் இப்படி ஒரு நிகழ்வை கண்டிராத மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஷீலா தேவியின் வயிற்றில் இருந்ம சல்பியூரிக் ஆஸிட் எனப்படும் கந்தக அமிலம் தீப்பற்றுவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதினர். ஷீலா தேவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மருத்துவமனை கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.

வேதனையான முடிவு
ஷீலா தேவி அருந்திய மர்ம மருந்து காற்றுடனோ, அவரது வயிற்றிலுள்ள அமிலத்துடனோ வினை புரிந்து தீப்பற்றியிருக்கக்கூடும் என்ற நோக்கில் மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். அதில் ஷீலா தேவி அலுமினியம் பாஸ்பேட் என்ற பொருளை உட்கொண்டுள்ளார் என்றும் அது பாஸ்பின் என்ற வாயுவுடன் அலுமினியம் ஆக்ஸைடு மற்றும் பிற வாயுக்களையும் வெளியிட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. மருத்துவ உலகில் முதன்முறை இச்சம்பவம் நடந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
வாழ்க்கை வெறுத்து தற்கொலை செய்வதற்காக நஞ்சு உண்ட ஷீலா தேவி வாயில் தீப்பற்றி முகம் வெடித்ததினால் ஏற்பட்ட வேதனையின் மத்தியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.



Click it and Unblock the Notifications
