Latest Updates
-
ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: மே 10 முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
வெயிலால் எரியும் சருமத்தை கூலாக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் போடுங்க.. -
இன்ஸ்டாகிராம் 'போலி லவ் குரு' கும்பல் வேட்டை: தம்பதிகளுக்கு போலீஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை! -
Mothers Day 2026: வேலைக்கு செல்லும் அம்மாக்களுக்கான சில ஆரோக்கிய டிப்ஸ்! -
இன்ஸ்டாகிராம் ஜோதிடர் பெயரில் பகீர் மோசடி! ஆன்மீக வலை விரித்து பெண்களை மிரட்டிய கொடூரம்! -
மொறுமொறுப்பான.. சோயா பாப்கார்ன் - எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
குரு-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: மே 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும்! -
கொளுத்தும் கோடையில் கற்றாழை வெச்சு.. இப்படி ஒருவாட்டி குழம்பு செய்யுங்க.. மீன் குழம்பு மாதிரி இருக்கும்.. -
மே 8 கிரகப்பிரவேசம்: உங்கள் புதிய வீட்டில் செல்வம் கொழிக்க இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க! -
World Asthma Day 2026: ஆஸ்துமா குணமாக இந்த கசாயத்தை 30 நாட்கள் குடிங்க..- கூறும் ஆயுர்வேத டாக்டர்!
மாலை நேரத்தில் நகம் வெட்டக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா?
நகங்களை வெட்டுவது ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான பழக்கமாகும். நகங்கள் மற்றும் விரல்களுக்கு இடையில் உள்ள இடத்தில் அழுக்கு மற்றும் கிருமிகள் குவிவதைத் தடுக்க இது உதவுகிறது.
நமது உடலின் வலிமையான இடங்களில் ஒன்று நகங்களாகும். அதேசமயம் நமது உடலுக்கும் பாக்டீரியாக்கள் நுழைய பெரும்பாலும் நுழைவாயிலாக இருப்பது நகம்தான். எனவே நகங்களை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

நகங்களை வெட்டுவது ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான பழக்கமாகும். நகங்கள் மற்றும் விரல்களுக்கு இடையில் உள்ள இடத்தில் அழுக்கு மற்றும் கிருமிகள் குவிவதைத் தடுக்க இது உதவுகிறது. ஏனெனில் இதனால் நாம் சாப்பிடும் உணவில் இவை கலந்துவிடும் வாய்ப்புள்ளது. மாலை நேரத்தில் நகம் வெட்டக்கூடாது என்பது பல நூற்றாண்டுகளாக இருக்கும் ஒரு நம்பிக்கையாகும். இதற்கான காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இது மூடநம்பிக்கையா?
இது புராணகாலங்களில் இருந்து வரும் ஒரு நம்பிக்கையாகும். ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இப்படிப்பட்ட பல மூடநம்பிக்கைகள் இருக்கிறது. ஆனால் இவை அனைத்தையும் மூடநம்பிக்கை என்று ஒதுக்கி விடமுடியாது. ஏனெனில் நமது முன்னோர்கள் ஒவ்வொரு நம்பிக்கைக்கு பின்னாலும் காரணத்தை வைத்தே நம்மிடம் கொடுத்துள்ளனர். நகம் வெட்டுவதற்கு பின்னால் இருக்கும் அறிவியல்ரீதியான காரணங்கள் என்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

காரணம் 1
கடந்த காலங்களில் மின்சாரம் இல்லை. அந்த காலத்தில் இருளானது இப்போதிருப்பதை விட அதிக இருளாக இருந்தது. மாலை நேரத்தில் நகம் வெட்டும் போது அது கீழே விழும் சிறிய சிறிய நகத்துகள்களை அப்புறப்படுத்துவது மிகவும் கடினமானதாகும். இந்த நகங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல மேலும் இது ஒருவேளை உணவில் கலந்து விட்டால் அதனால் பல அலர்ஜிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

காரணம் 2
அந்த காலத்தில் நகவெட்டிகள் இல்லை. கத்திகளை கொண்டே நகங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள். இருள் நேரத்தில் கத்தியை கொண்டு நகம் வெட்டும்போது அதனால் காயங்களோ அல்லது இரத்தப்போக்கோ ஏற்பட வாய்ப்புள்ளது. மருத்துவ வசதி அதிகமில்லா அந்த காலத்தில் மருத்துவ உதவி பெறுவது மிகவும் கடினமாகும். அதனாலேயே நகம் வெட்டுவதை மாலை நேரத்தில் தவிர்க்கப்பட்டது.

காரணம் 3
இதற்கு பின்னால் சில மத காரணங்களும் உள்ளது. மாலை நேரம்தான் லக்ஷ்மி தேவி நமது வீட்டிற்கு வரும் நேரமாகும். இரவு நேரத்தில் லக்ஷ்மி தேவி நமது இல்லத்தில் தங்கி நமக்கு செல்வத்தை ஆசீர்வாதமாக வழங்குகிறார் என்பது நம்பிக்கையாகும். எனவே இந்த நேரத்தில் கழிவுகளை அப்புறப்படுத்துவது, பணம் கொடுப்பது, நகம் வெட்டுவது போன்ற செயல்களை செய்யக்கூடாது. இது லக்ஷ்மி தேவியை அவமதிக்கும் செயலாகும்.

காரணம் 4
ஒருவருக்கு செய்வினை வைப்பதற்கு அவர்களின் உடைந்த நகங்களே போதுமானது. எனவே மாலை நேரத்தில் உங்கள் நகங்கள் கீழே விழும்போது தீய சக்திகள் அதன் மூலம் உங்களை தாக்கலாம். அதேசமயம் நம்மை விரும்பாதவர்கள் கையில் இது கிடைத்தால் அவர்கள் அதனை நமக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதனால்தான் நகத்தை மாலை நேரத்தில் வெட்டக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

செய்ய வேண்டியது
இந்த காலகட்டத்தில் நமக்கு மின்சார வசதிகள் இருந்தாலும் மாலை நேரத்தில் நகம் வெட்டுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் மாலை நேரத்தில் நம்மை கடவுள் ஆசீர்வதிப்பார் என்பது பரவலாக இருக்கும் நம்பிக்கையாகும். லக்ஷ்மி தேவியின் அருளை பெறுவதர்காகவாவது நகத்தை மாலை நேரத்தில் வெட்டாதீர்கள்.



Click it and Unblock the Notifications