சனிபகவான் உங்களை சோதிக்க காரணம் அவர் மனைவி சனிபகவானுக்கு கொடுத்த சாபம்தான் தெரியுமா?

சனிபகவானின் பார்வை ஒருவர் மேல் விழுந்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் படும் துன்பங்களுக்கு எல்லையே இருக்காது என்று காலம் காலமாக கூறப்பட்டு வருகிறது.

இந்து மதத்தினர் பார்த்து பயப்படும் ஒரு கடவுள் என்றால் அது சனிகவன்தான். ஏனெனில் சனிபகவானின் பார்வை ஒருவர் மேல் விழுந்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் படும் துன்பங்களுக்கு எல்லையே இருக்காது என்று காலம் காலமாக கூறப்பட்டு வருகிறது. இதனால்தான் பெரும்பாலான மக்கள் சனிபகவானை நினைத்து பயம் கொள்கின்றனர். ஆனால் உண்மையில் சனிபகவானை பற்றி நன்கு அறிந்தவர்கள் அவரை நினைத்து பயம் கொள்ள மாட்டார்கள்.

Why Was Shani Dev Cursed By His Wife

ஒருவர் செய்த பாவங்களின் தண்டனையாக மட்டுமே சனிபகவான் சோதனைகளை அளிக்கிறார். சொல்லப்போனால் சனிபகவான் சோதிக்கவில்லை எனில் ஒருவரின் வாழ்க்கை முழுமையே அடையாது என்று புராணங்கள் கூறுகிறது. தவறுகளுக்கு தண்டனை வழங்கும் சனிபகவானுக்கு அவரது மனைவியே ஏன் சாபமிட்டார் என்பதை இந்த பதிவில் இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சனிபகவானின் மனைவிகள்

சனிபகவானின் மனைவிகள்

சனிபகவானின் அருளை பெறுவதற்கு சுலபமான வழிகளில் ஒன்று அவரது மனைவிகளை வழிபடுவதாகும். சனிபகவானுக்கு துவாஜினி, தமீனி, கங்கலி, காலாப்பிரியா, காந்தாகி, துர்கண்டி, மஹிஷி மற்றும் அஜா என மொத்தம் எட்டு மனைவிகள் உல்;உள்ளதாக வேதங்கள் கூறுகிறது. சனிபகவானை வழிபடும் போது அவரின் மனைவிகளின் பெயரை கூறியும் வழிபடலாம். சனிக்கிழமைகளில் இவ்வாறு வழிபடுவது உங்களுக்கு சிறந்த பலன்களை அளிக்கும். அவ்வாறு வணங்கும்போது சனிபகவானின் கோபப்பார்வை குறையுமாம்.

சனிபகவானின் சிவபக்தி

சனிபகவானின் சிவபக்தி

சனிபகவான் சூரியதேவ் மற்றும் அவர் மனைவி சயாவின் மகனாவார். சிறுவயது முதலே சனிபகவான் சிவபெருமானின் பக்தராக இருந்தார். பெரும்பாலான நேரத்தை சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதிலேயே சனிபகவான் கழித்தார், இந்த பக்தி அவர் வளர்ந்த பின்னும் தொடர்ந்தது. வளர்ந்த பின்னர் சனிபகவான் சித்திராதன் மகள் தாமினி என்னும் அழகும், அறிவும், அற்புத சக்திகளும் உள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

தாமினியின் ஆசை

தாமினியின் ஆசை

திருமணம் ஆகி சில வருடங்களுக்கு பின்னர் தாமினிக்கு ஒரு ஆண் குழந்தைக்கு அம்மாவாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இந்த ஆசையால் சிவபெருமானை நினைத்து தியானம் செய்து கொண்டிருந்த சனிபகவானை எழுப்பினார் தாமினி. அந்த நேரத்தில் தொந்தரவு செய்வது சனிபகவானுக்கு பிடிக்காத ஒன்றாகும். ஆனால் குழந்தை ஆசையில் சனிபகவானை எழுப்பிய தாமினியின் முயற்சிகள் பயனற்றதாக போனது.

தாமினியின் சாபம்

தாமினியின் சாபம்

சனிபகவானின் செயலால் கோபமுற்ற தாமினி அவருக்கு சாபத்தை அளித்தார். அதன்படி தான் விரும்பிய போது தன்னை பார்க்காத சனிபகவான் இனி யாரை பார்த்தாலும் அவர்கள் அழிவை அடைவார்கள் என்று சாபமிட்டார். தாமினியின் வேண்டுதல்களை புறக்கணித்ததால் சனிபகவானின் பார்வை எப்பொழுதும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். சனிபகவான் உங்களை பார்க்கும் போது உங்களுக்கு சோதனைகள் ஏற்பட காரணம் சனிபகவான் அல்ல அவர் மனைவி வழங்கிய சாபம்தான்.

சனிபகவானின் வருத்தம்

சனிபகவானின் வருத்தம்

சனிபகவான் தன் தியானத்தை முடிந்து கொண்டு கண்களை திறந்த போது அவர் கண்கள் கோபத்தில் கலங்கியிருந்ததை பார்த்த சனிபகவான் தன் செயலுக்காக வருந்தி மன்னிப்பு கேட்டார். அவரின் நிலையை உணர்ந்த தாமினி அவசரப்பட்டு சாபமிட்டதை நினைத்து வருந்தினார். சாபத்தை திரும்ப பெறும் சக்திகளை தாமினி பெற்றிருக்கவில்லை. எனவே தாமினியால் சாபத்தை திரும்ப பெற இயலவில்லை. எனவே சனிபகவான் தன் பக்தர்களை நேரிடையாக பார்ப்பதை தவிர்க்க தொடங்கினார். பக்தர்களை பார்த்தாலும் நேரடியாக பார்க்காமல் தலையை கீழ்நோக்கியபடியே இருக்கும்படி செய்துகொண்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, January 18, 2019, 15:50 [IST]
Desktop Bottom Promotion