Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
மகாபாரதத்தில் கிருஷ்ணரை 17 முறை தாக்கிய ஜரசந்தரை 18 முறை மட்டும் ஏன் கொன்றார்? என்ன கணக்கு அது?
மகாபாரதத்தில் கிருஷ்ணரை 17 முறை ஜராசந்தர் தாக்கியும் அவரை கொல்லாமல் இருந்தது ஏன் என்பது பற்றிய கதையை இங்கே விரிவாகக் கொடுத்துள்ளோம். அது பற்றிய விரிவான கதையைத் தான் இங்கு பார்க்கவிருக்கிறோம்.
ஒவ்வொரு முறை பூமியில் அதர்மம் தலை தூக்கும்போது அதனை அழிக்க விஷ்ணு பகவான் பூமியில் அவதாரமாகத் தோன்றுவார். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவார் என்று இதிகாசங்களும் புராணங்களும் கூறுகின்றன. கௌரவர்களுக்கு பாடம் புகட்டவும், தனது தாய்மாமனாகிய கம்சனைக் கொல்லவும் விஷ்ணு பகவான் கிருஷ்ண அவதாரம் எடுத்தார். இந்த இரண்டு குறிகோளையும் அவர் அடைவதற்கு தனது முக்கிய உறவினர்களைப் பயன்படுத்திக் கொண்டார்.

உணர்ச்சிகளை ஒரு புறம் வைத்துவிட்டு, தந்திரமும் புத்திசாலித்தனமும் கொண்டு அவர் சில முடிவுகளை எடுத்தது காலத்தின் கட்டாயம். இந்த புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் மூலம் இதுவே கிருஷ்ணர் நமக்கு சொல்ல விரும்பும் பாடமும் ஆகும். சோகமான சூழ்நிலையிலும் பாதுகாப்பாகவும், சாமர்த்தியமாகவும் செயல்படுவதால் நம்மால் வெற்றி அடைய முடியும் என்பதற்கு ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஒரு உதாரண புருஷராய் வாழ்ந்து காட்டினார்..

ஜராசந்தர் கிருஷ்ணரை 17 முறை தாக்கினார்
கிருஷ்ணரை ஜராசந்தர் 17 முறை தாக்கினாலும் அதுவரை பொறுமை காத்து பின் ஜராசந்தரை கிருஷ்ணர் கொன்றதாக ஒரு கதை உண்டு. முதன்முறை தாக்கியவுடன் ஜராசந்தரைக் கொல்லும் சக்தி கிருஷ்ணருக்கு இருந்தபோதும் வேண்டுமென்றே இவ்வளவு காலம் தாழ்த்தி அவனைக் கொன்றதன் நோக்கம் என்ன ? ஏன் அவர் இவ்வளவு நாட்கள் அமைதி காத்தார்? என்ற கேள்விகள் இங்கே எழுகின்றன. அதனைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்..

ஜராசந்தர் என்பவன் யார்?
ஜராசந்தர் கம்சனின் மாமனார் ஆகும். கம்சன் கிருஷ்ணரின் தாய் தேவகியின் அண்ணன் , அதாவது கிருஷ்ணருக்கு கம்சன் தாய் மாமன். ஆனால் கம்சனை கிருஷ்ணர் கொன்றுவிட்டதால் கோபம் கொண்ட ஜராசந்தர் கிருஷ்ணரை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று துடித்தார்.

ஜராசந்தர் கிருஷ்ணரைக் கொல்லத் தயாராக இருந்தான்
கிருஷ்ணரை கொல்வதை தனது முக்கிய குறிக்கோளாகக் கொண்ட ஜராசந்தர், அதற்காக தனது பெரும்படையை திரட்டினான். கிருஷ்ணருக்கு விரோதமாக இருந்த மற்ற அரசர்களையும் திரட்டி ஜராசந்தர் அவனுடைய குறிக்கோளைப் பற்றி பகிர்ந்து கொண்டான்.

ஜராசந்தரின் முயற்சி பயனற்று போனது
கிருஷ்ண பகவானின் ராஜ்யமாகிய துவாரகையை நோக்கி ஜராசந்தரின் படைகள் திரண்டபோது அவனுக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே. கிருஷ்ணரைக் கொல்ல வேண்டும் என்று நினைத்தால் இதை விட வேறு எந்த முடிவு அவனுக்கு கிடைக்கும்? ஆனால் ஒரு முறை மட்டுமல்ல, தொடர்ந்து பல முறை, ஒவ்வொரு முறையும் முன்பை விட சிறந்த திட்டங்கள் வகுத்து மேலும் மேலும் சக்தி மிகுந்த அரசர்களுடன் கைக்கோர்த்து அவர்களின் படைகளுடன் பகவான கிருஷ்ணருடன் மோதினான்.
கிருஷ்ணரை வெல்வதற்கு ஜராசந்தர் அவனுடைய பகை நாட்டு அரசர்களையும் இணைத்து கொண்டு போராடினான். ஆனால் அவனுடைய எல்லா முயற்சிகளும் பயனற்றுப் போனது. ஆனால் அவனுடைய ஒவ்வொரு தோல்வியும் அவனை பலவீனப்படுத்தாமல் மாற்றாக அவனுடைய தன்னம்பிக்கை மேலும் உயர்ந்தது. இப்படி ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 17முறை கிருஷ்ணருடன் போரிட்டான் ஜராசந்தர். ஒவ்வொரு முறை போரிலும், கிருஷ்ண பகவான் அவனுடைய படைகளை அழித்து, பகை நாட்டு அரசர்களைக் கொன்று அவனை மட்டும் உயிருடன் திருப்பி அனுப்புவார்.

18 ஆவது முறை
17 முறை தாக்கியபின் கிருஷ்ண பகவான் ஜராசந்தரைக் கொன்றார். 17வது முறை ஜராசந்தர் கிருஷ்ணரைத் தாக்கியவுடன் அவன் இறப்பை பகவான் திட்டமிட்டார். ஜராசந்தர் பிறக்கும்போது இரண்டு பாதியாகப் பிறந்தான், அவன் உடலின் ஒவ்வொரு பாதியும் ஒவ்வொரு தாயிடம் இருந்து வந்தது. ஜரா என்ற அரக்கியால் இவன் உடலின் இரண்டு பகுதியும் இணைக்கப்பட்டது. அதனால் இவன் ஜராசந்தர் என்று அழைக்கபட்டான்.
ஒவ்வொரு முறை இவன் கொல்லப்பட்டாலும் மீண்டும் உயிருடன் எழும் ஒரு வரம் இவனுக்கு இருந்தது. இவனை நிரந்தரமாகக் கொல்வதற்கு ஒரே வழி, இவன் உடலை சரி பாதியாக வெட்டி, இரண்டு பாதியையும் பிரித்து விடுவது தான். இவன் பிறந்தபோது இருந்தது போல் மீண்டும் செய்வதால் அவனால் மறுமுறை உயிருடன் வர இயலாது. இதனை அறிந்த கிருஷ்ணர், இந்த திட்டத்தை செயல்படுத்தினார்.
அது எப்படி என்பதை இப்போது காணலாம்.

ஜராசந்தரைக் கொல்வதற்கு கிருஷ்ணரின் திட்டம்
பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தருமர், ஒருமுறை ராஜசூய யாகம் நடத்த வேண்டிய காலம் வந்தது. இந்த யாகம் நடத்தும் அரசர், ஒரு பேரரசராக அறிவிக்கப்பட வேண்டும். மற்ற அரசர்களும் இவரை பேரரசராக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஜராசந்தர் தன்னை பேரரசராக ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதை அறிந்த தருமர், கிருஷ்ணரிடம் சென்று உதவி கேட்டார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், பீமன் மற்றும் அர்ஜுனன் பிராமணர் போல் வேடம் தரித்து தன்னுடன் மகத நாட்டுக்கு வர வேண்டும் என்று கூறினார். மேலும் அங்கு வந்து ஜராசந்தரை மல்யுத்த போட்டிக்கு வருமாறு சவால் விட வேண்டும் என்று கூறினார்.
அதேபோல் பீமனும் அர்ஜுனனும் ஜராசந்தரை மல்யுத்த போட்டிக்கு அழைத்தனர். அவர்கள் சவாலை ஏற்றுக் கொண்ட ஜராசந்தர் பீமனுடன் போட்டியிட்டான். நான்கு நாட்கள் தொடர்ந்து போட்டி நடந்தபோதும் பீமனால் ஜராசந்தரை வெற்றி கொள்ள இயலவில்லை. பகவான் கிருஷ்ணர், ஜராசந்தரை எப்படி கொல்ல வேண்டும் என்று ஒரு இலையை பயன்படுத்தி விளக்கினார். கிருஷ்ணர் அந்த இலையை இரண்டு பாதியாக கிழித்து இரண்டு பகுதியையும் வெவ்வேறு இடங்களில் தூக்கி வீசினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வழிகாட்டுதல் படி, ஜராசந்தரின் உடலை பாதியாக கிழித்து இரண்டு பகுதிகளையும் வேறு வேறு திசைகளில் வீசி, மறுமுறை இரண்டு பாதியும் சேர முடியாதவாறு செய்து போட்டியில் பீமன் வெற்றி கண்டான்.

கிருஷ்ணரின் அண்ணன் பாலராமரின் கேள்வி
பொல்லாத அரசனும், கம்சனின் மிகப்பெரிய ஆதரவாளனுமாக இருந்த ஜராசந்தர் இறந்த சில நாட்கள் கழித்து பலராமரும் கிருஷ்ணரும் பேசிக் கொண்டிருந்தனர். பலராமர், ஸ்ரீ கிருஷ்ணரின் தமையன் ஆவார். அவர்களின் உரையாடலில் கிருஷ்ணர் மிக நீண்ட நாட்கள் கழித்து ஜராசந்தரைக் கொன்ற காரணத்தைக் கூறினார். ஒவ்வொரு முறை ஜராசந்தரை கிருஷ்ணர் தாக்கியபோது, மறுமுறை ஒரு புதிய படையுடன் ஜராசந்தர் மீண்டும் வந்தான். இந்த படையில் மேலும் புதிய சக்திமிக்க அரசர்கள் மற்றும் பூமியின் மோசமான மனிதர்கள் இருந்தனர்.
ஆகவே ஒவ்வொரு முறை போரிலும் ஒரே நேரத்தில் பல அரக்கர்களை கிருஷ்ணரால் அழிக்க முடிந்தது. ஒரு போரில் எல்லோரும் அழிக்கப்பட்டவுடன், மறுமுறை ஜராசந்தர் மீண்டும் அடுத்த குழுவை அழைத்து வர, மீண்டும் கிருஷ்ணர் அவர்களைக் கொன்றார். இப்படி, பல பொல்லாத அரசர்களும் மனிதர்களும் ஒரே நேரத்தில் அழிய ஜராசந்தரை அவர் பயன்படுத்திக் கொண்டார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாமர்த்தியத்தால் ஒரே நேரத்தில் பல அரக்கர்கள் அழிக்கப்பட்டனர். கிருஷ்ணரின் புத்திசாலித்தனம் கண்டு பலராமர் அவரைப் புகழ்ந்து பாராட்டினார்.



Click it and Unblock the Notifications