இறந்தவர்கள் உடல் எரிக்கப்படுவதற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான காரணம் என்ன தெரியுமா?

மனித உயிர்களுக்கு பூமியில் இருந்து விடுதலை கொடுப்பது என்றால் மரணம்தான். நமது உடலுக்கு விடுதலை கொடுப்பது மரணம் என்றால் நமது ஆன்மாவிற்கு விடுதலை கொடுப்பது தகனமாகும்.

மனித உயிர்களுக்கு பூமியில் இருந்து விடுதலை கொடுப்பது என்றால் மரணம்தான். நமது உடலுக்கு விடுதலை கொடுப்பது மரணம் என்றால் நமது ஆன்மாவிற்கு விடுதலை கொடுப்பது தகனமாகும். முறையாக தகனம் செய்யப்பட்ட ஆன்மா மட்டுமே மரணத்திற்க்கு பிறகு நிம்மதியான வாழ்க்கையை வாழமுடியும்.ஒவ்வொரு மதத்திற்கும் இறந்தவர்களின் உடலை தகனம் செய்யும் முறை மாறுபடும். ஆனால் அவர்களின் நோக்கமா பொதுவானதுதான். இறந்தவர்களின் ஆன்மா அமைதியாக மறுஉலகத்தில் வாழ வேண்டும்.

Why Do Hindus Burn Their Dead Bodies?

இந்தியாவில் பெரும்பாலும் இறந்தவர்களின் உடல் எரிக்கத்தான் படுகிறது. உடலை எரித்து அவர்களின் அஸ்தியை புனித நீரில் கரைப்பது என்பது பெரும்பாலனவர்கள் செய்யும் காரியமாகும். இதற்கு பின்னால் ஆன்மீக காரணங்களும் உள்ளது, அறிவியல் காரணங்களும் உள்ளது. இந்த பதிவில் இறந்தவர்களின் உடல் ஏன் எரிக்கப்படுகிறது என்பதற்கான காரணத்தை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அந்திம காரியங்கள்

அந்திம காரியங்கள்

இறப்பிற்கு பின்னால் செய்யப்படும் இந்த சடங்குகள் மிகவும் முக்கியமானவை, ஏனெனில் இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு முக்கியமோ அதே அளவு மறுவுலக வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மனிதர்கள். புராணங்களின் படி குழந்தை ஒருவர் பிறந்தவுடன் செய்யப்படும் சடங்குகள் அவர்களின் பூமி வாழ்க்கையை சிறப்பிக்க, அதேபோல இறந்தபின் செய்யப்படும் சடங்குகள் அவர்களின் ஆன்மா சொர்க்கத்தை சென்றடைய உதவும் என்று கூறப்படுகிறது.

மகாபாரதம் என்ன கூறுகிறது?

மகாபாரதம் என்ன கூறுகிறது?

மகாபாரதத்தில் எமதர்மர் தர்மனிடம் உலகிலேயே பெரிய அதிசயம் எது என்று கேட்டபோது தினமும் பலர் இறக்கிறார்கள் ஆனால் மனிதர்களுக்கு வாழும் ஆசை மட்டும் குறைவதே இல்லை. மரணம் எப்பொழுதுமே ஒரு புதிரானது. மனிதர்களின் மனம் எப்பொழுதும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதில்லை. அனைத்து மதத்தினருமே மரணத்திற்கு பிறகும் ஒரு வாழ்க்கை உள்ளது என்பதை நம்புகிறார்கள்.

இந்துக்களின் நம்பிக்கை

இந்துக்களின் நம்பிக்கை

இந்து மக்களை பொறுத்தவரையில் ஆன்மாவிற்கு அழிவு என்பதே இல்லை. மரணம் என்பது ஒருவரின் உடலுக்கு மட்டுமே ஏற்படுவது என்று நம்புகிறார்கள், ஆனால் மரணம் என்பது ஆன்மாவின் புதிய பயணம் என்று கூறப்படுகிறது. இறக்கும் இந்த ஆன்மா மீண்டும் வேறொரு உயிராக பிறந்து மீண்டும் அது தன் பயணத்தை தொடரும்.

உடல் எரிக்கப்பட காரணம்

உடல் எரிக்கப்பட காரணம்

இந்து மதத்தில் நெருப்பானது புனிதமான பொருளாக கருதப்படுகிறது. இது அனைத்தையும் மிச்சமின்றி அழித்துவிடும். மற்றொரு புறத்தில் எரிப்பது என்பது மிகவும் பொறுமையான வேலையாகும். இது உடலின் இண்டு உறுப்புகளுக்குள் நுழைந்து வெளியே சென்று மீண்டும் அண்டவெளியின் ஐந்து பூதங்களுடனும் இணைந்து விடும். இறந்த உடலை எரிப்பதன் மூலம் அவர்களின் உடல் முழுவதுமாக பூமியிலிருந்து துடைக்கப்படுகிறது. இதன் மூலம் இறந்த ஆன்மா 11 நாட்களுக்கு பிறகு தன் பயணத்தை தொடர முடியும்.

நெருப்பிடம் சரணடையுங்கள்

நெருப்பிடம் சரணடையுங்கள்

நெருப்பானது உடலை சதை, எலும்புகள் என அனைத்தையும் முழுமையாக தன்னுள் எடுத்து கொள்கிறது. உடல் எரிக்கப்படும் போது ஆன்மா தன் முன்னோர்களுடன் இணைந்துவிடும். அக்னிதேவன் மனிதர்களுக்கும், கடவுளுக்கும் இடையே ஒரு பாலமாக இருக்கிறார் என்று புராணங்கள் கூறுகிறது. உடல் எரிக்கப்படும்போது அது கடவுளை உடனடியாக சென்றடையும் என்று கூறப்படுகிறது.

ஆன்மா சுத்திகரிப்பு

ஆன்மா சுத்திகரிப்பு

உடலை எரிக்கும்போது அது உங்கள் ஆன்மாவை சுத்திகரித்து அதன் மறுவாழ்வு அமைதியாக இருக்க உதவுகிறது. மற்றொரு காரணம் இறந்த உடலுக்கும் இந்த பிறப்பிற்குமான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்கும் ஒன்றாக நெருப்பு உள்ளது. அப்போதுதான் அவர்களின் அடுத்த பிறவி நிம்மதியானதாக இருக்கும். அதுமட்டுமின்றி ஒரு எதார்த்த காரணம் தங்கள் விரும்புபர்களின் உடலை புழுக்களோ, மிருகங்களோ சிதைப்பதை விரும்புவதில்லை.

ஆன்மாவின் வெளிப்பாடு

ஆன்மாவின் வெளிப்பாடு

உடலை எரிக்கும் போது அதில் வெளிப்படும் ஆவியானது ஆன்மாவின் வெளிப்பாடாக கருதப்படுகிறது. இவ்வாறு வெளிப்படும் ஆன்மா படைப்பின் கடவுளான பிரம்மாவை சென்று அடையும். அதேசமயம் எரிப்பது என்பது எளிதாகவும், செலவு குறைவானதாகவும் இருக்கிறது.

யாரை எல்லாம் எரிக்கக்கூடாது

யாரை எல்லாம் எரிக்கக்கூடாது

சிலரை எரிக்கக்கூடாது என்று வேதங்கள் கூறுகிறது. முனிவர்கள், புனித ஆண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளை எரிக்கக்கூடாதாம். முனிவர்களை பொறுத்த வரை அவர்களுக்கு எப்பொழுதுமே உடல் மீது பற்று இருக்காது, எனவே அவர்களை எரிக்க தேவையில்லை. குழந்தைகளுக்கும் இதேதான் அவர்களுக்கும் பூமியின் மீது அதிக பற்று இருக்காது.

சடங்கின் பின்னால் இருக்கும் எதார்த்தம்

சடங்கின் பின்னால் இருக்கும் எதார்த்தம்

பொதுவாக அனைவருமே வயதாகித்தான் இறப்பார்கள் என்று அர்த்தமல்ல, சிலர் நோய் தாக்கியும் கூட இறப்பார்கள். அவர்களை எரிக்கும்போது அவர்கள் உடலில் இருக்கும் நோய்க்கிருமிகள் எரித்து அழிக்கப்படும். ஒருவரின் உடல் எரிக்கப்படும் போது அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படுகிறது.

பஞ்சபூதங்கள்

பஞ்சபூதங்கள்

மனித வாழ்க்கையானது எப்போதும் பஞ்சபூதங்களுடன் சேர்ந்து வாழ்வதாகும். ஒருவரின் உடல் எரிக்கப்படும் போது அது அவர்களின் ஆன்மா மீண்டும் பஞ்சபூதங்களுடன் சேர்க்கப்படுகிறது. பூமியில் உடலை வைத்து வானத்தை சாட்சியாக கொண்டு உடலை நெருப்பில் எரித்து அதனால் ஏற்படும் ஆவி காற்றுடன் கலக்கிறது, இறந்த பின் கிடைக்கும் சாம்பல் புனித நீரில் கரைக்கப்படுகிறது. இதன்மூலம் ஆன்மா பஞ்சபூதங்களுடன் மீண்டும் இணைகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion