Latest Updates
-
2 மாம்பழமும் 6 பிரட்டும் இருந்தா.. ஸ்கூல் விட்டு வர பிள்ளைகளுக்கு 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட் செஞ்சு குடுங்க... -
International Yoga Day 2026: சர்வதேச யோகா தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? இந்த வருட யோகா தினத்தின் சிறப்பு என் -
சனி பகவான் நிலையால் இனி 2027 வரை இந்த 3 ராசிக்காரங்க நல்ல வளர்ச்சியை காண்பார்களாம்! -
ஆந்திரா மெஸ் ஸ்டைல் கோவைக்காய் துவையல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க -
International Yoga Day 2026: முதுகு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த 4 யோகாசனங்களை தினமும் செய்யுங்க.. -
சூரியன் மிதுன ராசி செல்வதால் உருவாகும் ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் கொடுக்கப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 வகை ஆண்களுடன் நட்போ, காதலோ வைத்துக் கொள்ளக்கூடாதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 15-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்கு நிதி, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது! -
துவரம் பருப்பு தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
தற்கொலை செய்துகொண்ட ஆத்மா சொர்க்கத்திற்கும் போகாது, நரகத்திற்கும் போகாது... எங்கு போகும் தெரியுமா?
இயற்கையாக மரணம் ஏற்படுபவர்களின் மரணத்திற்கு பிறகான வாழ்க்கையை விட துர்மரணங்களில் இறப்பவர்களின் மரணத்திற்கு பிறகான வாழ்க்கையானது அதிக துன்பங்கள் நிறைந்ததாக இருக்கும்.
இந்த உலகில் பிறந்த அனைவருமே ஒருநாள் இறக்கத்தான் போகிறோம். ஆனால் அந்த மரணத்தை நாமாக ஏற்படுத்தி கொள்ளக்கூடாது. மரணம்தான் நம்மை நோக்கி வர வேண்டுமே தவிர நாம் அதனை நோக்கி செல்லக்கூடாது. ஏனெனில் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளிடம் இருந்து தப்பிக்க தற்கொலை செய்துகொள்வது மரணத்திற்கு பிறகும் உங்கள் ஆன்மாவிற்கு துன்பங்களை ஏற்படுத்தும்.

உண்மைதான், இயற்கையாக மரணம் ஏற்படுபவர்களின் மரணத்திற்கு பிறகான வாழ்க்கையை விட துர்மரணங்களில் இறப்பவர்களின் மரணத்திற்கு பிறகான வாழ்க்கையானது அதிக துன்பங்கள் நிறைந்ததாக இருக்கும். சொல்லப்போனால் தற்கொலை செய்து கொள்வது கடவுளுக்கு உங்களின் மீதான கோபத்தை அதிகரிக்கும். இந்த பதிவில் தற்கொலை செய்துகொண்ட பிறகு உங்கள் ஆன்மாவிற்கு என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.

தற்கொலை
தற்கொலை செய்து கொள்வது உங்களின் அனைத்து துன்பங்களுக்கும் முடிவை கொண்டு வருகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அது நீங்கள் உங்கள் சிறிய வாழ்க்கையில் செய்த அனைத்து பாவங்களையும் சரி செய்துவிடும் என்று நம்புகிறீர்களா? அல்லது தற்கொலை உங்களுடைய மறுபிறவியை வளமாக்கும் என்று நினைக்கிறீர்களா? தற்கொலையால் இது எதுவுமே நடக்கப்போவதில்லை என்பது மட்டுமே உண்மை. கடவுள் உங்களுக்கு கொடுத்த இந்த அற்புத வாழ்க்கையை உங்கள் அவசரத்தால் முடித்துக் கொள்வது உங்களுக்கு எந்த பலனையும் தராது மாறாக பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்தும்.

தற்கொலை முடிவல்ல
நீங்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அனைத்தும் உங்கள் கடந்த ஜென்மத்தின் பாவபுண்ணியங்களை பொறுத்ததுதான். ஒருவேளை நீங்கள் துன்பங்களில் இருந்து தப்பிக்க தற்கொலை செய்து கொண்டாலும் நீங்கள் அனுபவிக்க வேண்டிய துன்பங்கள் இருமடங்காக உங்கள் ஆன்மாவிற்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

வாழ்க்கைச்சக்கரம்
இயற்கைக்கு முரணான வழியில் உங்கள் வாழ்க்கையை முடித்து கொள்வது என்பது ஆன்மீகரீதியாக சட்டவிரோதமாகும். எந்த மதமும் தற்கொலை செய்து கொள்வதை அங்கீகரிக்காது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் மிகப்பெரிய பாவம் தற்கொலை செய்து கொள்வதுதான். இதற்கான தண்டனையை உங்கள் நீங்கள் அடுத்தபிறவியில் அனுபவிப்பீர்கள்.

கர்மலோகம்
தற்கொலை செய்து கொண்ட ஆன்மாக்கள் பூமியை விட்டு மேலே செல்ல இயலாது. அவை கர்மலோகத்தில் சிக்கிக்கொள்ளும். அங்கிருந்து அவற்றால் பூமியில் நடக்கும் அனைத்தையும் பார்க்க இயலும். அவர்கள் எந்த துன்பத்திலிருந்தும், சூழ்நிலையில் இருந்தும் தன்னை காத்துக்கொள்ள தற்கொலை செய்து கொண்டார்களோ அவை அனைத்தையும் அவர்களின் வாழ்நாள் முடியும் வரை பார்த்துக்கொண்டுதான் இருக்க வேண்டும். ஒருவேளை உங்கள் ஆயுள் முடிய 10 ஆண்டுகள் இருக்கும்போதே நீங்கள் தற்கொலை செய்துகொண்டால் அந்த 10 ஆண்டுகளும் நீங்கள் கர்மலோகத்தில் துன்பங்களை அனுபவிப்பீர்கள், அதற்குப்பிறகே மேலோகத்திற்கு செல்ல இயலும்.

தப்பிக்க இயலாது
கர்மலோகத்திலிருந்து உங்கள் ஆன்மாவால் எங்கும் தப்பித்து செல்ல இயலாது, பூமிக்கும் திரும்ப இயலாது, சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ செல்லவும் இயலாது. தற்கொலை என்பது உங்கள் ஆன்மாவை நீங்களே சிக்கவைத்து கொள்ளும் ஒரு சூழ்ச்சி வலையாகும்.

இயற்கை மரணம்
இயற்கையான மரணத்தை எதிர்கொள்பவர்கள் இயற்கையின் நியதிகளையும், கோட்பாடுகளையும் மீறாதவர்கள். அவர்களின் ஆன்மா மரணத்திற்கு பிறகு சீரான சுழற்சியை அடையும். அவர்களின் பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்வார்கள். ஆனால் தனது வாழ்க்கையை தானே முடித்து கொண்டவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது.

முடிவின் தொடக்கம்
தற்கொலை செய்து கொள்பவர்கள் அவர்களின் உன்மையான ஆயுட்காலம் முடிந்த பிறகு அவர்களின் ஆன்மாவை நிரந்தரமாக இழக்க நேரிடும் என்று புராணங்கள் கூறுகிறது. ஒவ்வொவருவரின் இருண்ட விதியும் இயற்கையில் எப்பொழுதும் தயாராகவே இருக்கும், அதனை நாமாக தற்கொலை என்னும் வாசல் வழியாக சென்று அடையக்கூடாது.

சொர்க்கமா? நரகமா?
தற்கொலை செய்துகொள்வதால் ஏற்படும் மிகப்பெரிய பாதிப்பு என்னவெனில் தற்கொலை செய்துகொள்ளும் எந்த ஆத்மாவும் சொர்க்கதிற்கு செல்ல இயலாது. ஏனெனில் அனைத்து பாவங்களையும் விட கொடிய பாவம் தன்னுடைய உயிரை தானே கொல்வது என்று வேதங்கள் கூறுகிறது. எனவே தற்கொலை செய்துகொள்பவர்கள் நரக வாசலில்தான் சென்று நிற்பார்கள்.



Click it and Unblock the Notifications