Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
உங்கள் கையில் தங்கச்சி கோடு எங்கு இருக்கிறது தெரியுமா? அது கையில் இருப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?
நமது கையில் இருக்கும் ரேகைகள் மட்டுமின்றி நமது கையில் இருக்கும் சில அடையாளங்களும் நமது எதிர்காலத்தை பற்றியும், நமது குணநலன்கள் பற்றியும் கூறும்.
நமது கைகளில் இருக்கும் ரேகைகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் இருப்பதாக நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள். நமது கடந்த காலம், எதிர்காலம், நமது வாழ்க்கையில் நிகழப்போகும் மாற்றங்கள் என அனைத்தையும் நமது கையில் இருக்கும் ரேகைகளை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.

நமது கையில் இருக்கும் ரேகைகள் மட்டுமின்றி நமது கையில் இருக்கும் சில அடையாளங்களும் நமது எதிர்காலத்தை பற்றியும், நமது குணநலன்கள் பற்றியும் கூறும். இந்த பதிவில் நமது கைகளில் இருக்கும் வெவேறு சின்னங்கள் கூறவருவது என்னவென்பதை தெரிந்து கொள்ளலாம்.

குறுக்கு கோடுகள்
உங்கள் கைகளில் இருக்கும் குறுக்கு கோடுகள் துரதிர்ஷ்டவசமாக தீமை மற்றும் தந்திரங்களின் அடையாளமாகும். அதன்படி இந்த சின்னம் கைகளில் இருப்பவர்கள் புத்திசாலியாக இருந்தாலும் அவர்களின் புத்திக்கூர்மையை தவறான விஷயங்களுக்கு பயன்படுத்துவார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து விலகியே இருங்கள்.

செங்குத்து கோடுகள்
உங்கள் விரல்களின் மேடுகளில் செங்குத்து கோடுகள் இருந்தால் அது மிகவும் அதிர்ஷ்டமான அறிகுறியாகும். இந்த அடையாளம் கைகளில் இருப்பவர்கள் எப்பொழுதும் நேர்மறையாக சிந்திப்பவர்களாகவும், அனைத்தயும் நல்லதாக செய்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்.

கூட்டல் சின்னம்
இந்த சின்னம் பெரும்பாலும் அபசகுணத்தின் அடையாளமாகும். இதனால் இவர்கள் பல பிரச்சினைகள், ஏமாற்றங்கள் மற்றும் ஆபத்தை சந்திக்க நேரிடும். மேலும் இவர்களின் பழக்கவழக்கங்களும் மோசமானதாக இருக்கும். இவர்கள் மற்றவர்களை தங்களின் சுயலாபத்திற்காக பயன்படுத்தி கொள்வதில் வல்லவர்களாக இருப்பார்கள்.

நட்சத்திரம்
பொதுவாக இது நேர்மறை சின்னமாகும். இது ஒருவரின் வாழ்க்கையில் இருக்கும் மகிழ்ச்சியையும், புத்திசாலித்தனத்தையும் குறிக்கும். புத்திசாலித்தனம் இருக்குமிடத்தில் செல்வமும் வந்து சேரும். கையின் மேட்டில் இந்த சின்னம் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் சிறிய வயதிலேயே வெற்றியை அடைபவர்களாக இருப்பார்கள்.

சதுரம்
சதுரம் இலாபத்தை வழங்கும் சின்னமாகும். இந்த சின்னம் முற்று பெறாமல் சிதைந்து இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் சில இன்னல்களை சந்திப்பார்கள். ஆனால் அவற்றை சமாளித்து வெளியே வந்து விடுவார்கள். எதிர்நீச்சல் அடிப்பது இவர்களுக்கு கைவந்த கலையாகும்.

வட்டம்
கைரேகையில் வட்டம் இருப்பது மிகவும் அபூர்வமானதாகும். இது மிகவும் தீய சகுனமாகும், மேட்டில் இருப்பதை தவிர. இது மற்ற ரேகைகளுடன் தொடர்பில் இருந்தால் இது பெரிய துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். இந்த சின்னம் மேட்டில் இருந்தால் அது பெரிய அதிர்ஷ்டமாகும்.

முக்கோணம்
இந்த சின்னம் உங்கள் கையில் எங்கு இருக்கிறதோ அதனை பொறுத்து அதன் பலன்கள் மாறுபடும். இந்த சின்னம் கையில் இருப்பவர்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் சமநிலை இருக்கும். இவர்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் நீண்ட காலம் இருக்காது.

சூலம்
கையில் சூலம் சின்னம் இருப்பது சக்திவாய்ந்த அறிகுறியாகும். இது மற்ற எல்லா சின்னங்களையும் விட சக்தி வாய்ந்தது மற்ற சின்னங்களின் பலன்களையும் இது தடுக்கக்கூடியது. இந்த சின்னம் கையில் இருப்பவர்கள் மற்றவர்களை கட்டுப்படுத்தும் இடத்தில் இருப்பார்கள்.

இடைவெளி கோடுகள்
இந்த கோடுகள் உங்கள் வாழ்க்கையில் ஏமாற்றத்தை குறிக்கிறது. இந்த சின்னம் கையில் இருப்பவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை சமாளிக்க முடியாமல் திணறுவார்கள்.

இலை
உங்கள் கையில் இலை போன்ற சின்னம் இருப்பது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் உத்வேகம் மற்றும் மகிழ்ச்சியை குறிக்கிறது. இந்த சின்னம் கையில் இருப்பவர்கள் வசீகரமானவர்களாகவும், வார்த்தை ஜாலத்தில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள்.

தங்கச்சி கோடு
தங்கச்சி கோடு என்பது உங்களின் ஆயுள் ரேகைக்கும், தலைமை ரேகைக்கும் இடையில் இருக்கும் சிறிய கோடாகும். இந்த கோடு மிகவும் சக்திவாய்ந்த சின்னமாகும். இவர்கள் நீண்ட ஆயுளுடனும் எப்பொழுதும் தலைமை பண்பிலும் இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications