Latest Updates
-
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
பெண்கள் தங்கத்தை இப்படி அணிந்தால் அவர்கள் வாழ்வில் பல பிரச்சினைகளை உண்டாகுமாம்...!
பெண்களின் மூக்குத்தி, வளையல், கொலுசு. கழுத்தில் அணியும் செயின் என அனைத்தும் அதற்கென தனிப்பட்ட பலனை கொண்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை திருமணம் மற்றும் அது தொடர்பான விசேஷங்களுக்கு பெரும் தொகை செலவிடப்படுகிறது. திருமண செலவில் முக்கியப்பங்கு வகிப்பது பெண்களுக்கு வாங்கப்படும் நகைகளும், புடவைகளும்தான். பெண்களை பொறுத்தவரையில் அவர்கள் அணியும் ஒவ்வோர் பொருளும் அவர்களுக்கு ஒரு பலனை வழங்குவதாக இருக்கும்.

பெண்களின் மூக்குத்தி, வளையல், கொலுசு. கழுத்தில் அணியும் செயின் என அனைத்தும் அதற்கென தனிப்பட்ட பலனை கொண்டுள்ளது. ஆனால் அதனை உபயோகிக்கும் முன்னும், உபயோகிக்கும் பின்னும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் அவர்கள் செய்யும் சில தவறுகள் அவர்களின் வாழ்வில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். பெண்கள் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களின் வாஸ்து பற்றி தெரிந்து வைத்து கொள்வது நல்லது.

உடைந்த வளையல்கள்
உடைந்த வளையல்களை வளையல் பெட்டியில் ஒருபோதும் வைத்திருக்கக்கூடாது. வளையல் பெட்டியில் உடைந்த வளையல்கள் இருந்தால் உடனே அதை அப்புறப்படுத்தி விடவேண்டும். ஏனெனில் உடைந்த வளையல்களை வைத்திருப்பது பெண்களுக்கு துரதிஷ்டத்தை ஏற்படுத்தும்.

திருமண புடவை
சிலசமயங்களில் பெண்களுக்கு திருமண புடவை கனமானதாக இருக்கலாம் எனவே அதனை கத்தரித்துவேறு வடிவில் உபயோகப்படுத்த நினைப்பார்கள். ஆனால் அதனை ஒருபோதும் செய்யக்கூடாது. உங்கள் திருமண புடவையை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம், ஏனெனில் அதில் விழும் சிறுகீறல் கூட கெட்ட சகுனமாகும்.

மெகந்தி போடுவது புனிதமானது
திருமணமும் மெஹந்தி போடுவதும் பிரிக்க முடியாத ஒன்றாகும். இது கணவன், மனைவிக்கிடையேயானா நெருக்கத்தை அதிகரிக்கும். வெளியே சென்று அழகாக மெஹந்தி போட்டு கொள்ள நேரம் இல்லையென்றாலும் உங்களால் முடிந்த அளவிற்கு வீட்டிலேயேவாது மெஹந்தி அணிந்து கொள்ளுங்கள். இது மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமாகும்.

பொட்டை பகிர்ந்து கொள்ளாதீர்கள்
நீங்கள் பயன்படுத்திய பொட்டை ஒருபோதும் மற்றவர்களுக்கு கொடுக்காதீர்கள். நீங்கள் பயன்படுத்திய பொட்டை மீண்டும் மீண்டும் நீங்களே உபயோகிக்கலாம் ஆனால் அதனை ஒருபோதும் மற்றவர்களுக்கு கொடுத்து விடாதீர்கள். இது உங்கள் அதிர்ஷ்டத்தை நீங்களே அவர்களுக்கு கொடுப்பது போன்றதாகும்.

திருமண ஆபரணங்கள்
உங்கள் திருமண நகைகளை ஒருபோதும் மற்றவர்களுக்கு இரவல் கொடுக்காதீர்கள். இது உங்கள் மீது அதிக அன்புடனும், பாசத்துடனும் வாங்கி கொடுத்தது. எனவே அதனை மற்றவர்களுக்கு ஒருபோதும் கொடுக்காதீர்கள்.

தங்க கொலுசு அணியாதீர்கள்
தங்கத்தின் மீது இருக்கும் மோகம் எப்பொழுதும் பெண்களுக்கு குறையாது. ஆனால் அந்த மோகத்தில் எப்பொழுதும் தங்க கொலுசை அணிந்து விடாதீர்கள். ஏனெனில் தங்கம் என்பது மிகவும் லட்சுமி தேவி வசிக்கும் இடமாக கருதப்படுகிறது, அதனை காலில் அணிவது லட்சுமியை அவமதிக்கும் செயலாகும். இது லட்சுமியின் கோபத்தை உங்களுக்கு பெற்றுத்தரும்.

அலங்கார பொருட்களை பூஜைக்கு பயன்படுத்துதல்
பெண்கள் சிலசமயம் தாங்கள் பயன்படுத்தும் சில அலங்கார பொருட்களை பூஜைக்கு பயன்படுத்துவார்கள். அவ்வாறு பயன்படுத்தப்படும் பொருட்கள் ஒருபோதும் தூக்கி எறியப்படக்கூடாது.இதனை உங்கள் தோட்டத்திலேயோ அல்லது பூஜையறையிலேயோ வைத்துவிட வேண்டும்.

வைரம் அணிவது
வைரம் உங்களுக்கு பொருத்தமாகிறதா இல்லையா என்பதை சோதித்து பார்த்து கொண்டு அணியவும். ஒவ்வொரு உலோகமும் ஒரு ஆற்றலை வெளிப்படுத்தும். வைரம் அனைவர்க்கும் பொருத்தமானதாக இருக்காது. குறிப்பாக மூக்குத்தியில் வைரம் பதித்து போடுவதற்கு முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.



Click it and Unblock the Notifications