For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துரியோதனின் காதலை சேர்த்து வைக்க கர்ணன் என்னவெல்லாம் செய்தார் தெரியுமா?

ஒவ்வொரு முறை மகாபாரதத்தை படிக்கும் போதும் அது நமக்குள் ஒரு பரவசத்தையும், வாழ்க்கையை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தும்.

|

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். மகாபாரதம் பிடிக்காதவர்கள் என்று கூறுபவர்கள் மிக மிக குறைவே. ஏனெனில் ஒவ்வொரு முறை மகாபாரதத்தை படிக்கும் போதும் அது நமக்குள் ஒரு பரவசத்தையும், வாழ்க்கையை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தும். வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக்கூடாது என இரண்டையுமே மகாபாரதத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.

Unknown Love Story of Duryodhana and Bhanumati

தர்மன், பீஷ்மர், அர்ஜுனன், கர்ணன் போன்று எப்படி வாழவேண்டும் என்று உணர்த்த பலர் இருப்பது போல எப்படி வாழக்கூடாது என்பதை உணர்த்த துரியோதனன், துச்சாதனன், ஜெயத்ரதன், அசுவத்தாமன் போன்றோர் இருக்கத்தான் செய்கிறார்கள். மகாபாரதம் யுகங்கள் கடந்தும் நிலைத்திருக்க காரணம் அதில் கூறும் வாழ்க்கை நெறிகளும் அதனை கிருஷ்ணா பரமாத்மா கூறிய முறையும்தான். இந்த பதிவில் மகாபாரதத்தில் இருக்கும் உங்களுக்கு தெரியாத சில கதைகளை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துரியோதனன்

துரியோதனன்

குருசேத்திர போர் என்னும் பேரழிவிற்கு காரணமாக இருந்தது துரியோதனன் என்னும் தனியொருவனின் பதவி வெறிதான். துரியோதனன் பாண்டவர்களுக்கு எதிரானவனாக இருந்தாலும் தன் சகோதரர்கள் மீதும், நண்பன் கர்ணன் மீதும், மனைவி மீதும், குழந்தைகள் மீதும் உண்மையான அன்பு கொண்டவனாகத்தான் இருந்தான். தனிப்பட்ட முறையில் துரியோதனன் கெட்டவனாக இருந்தாலும் ஒரு நண்பனாக, கணவனாக, சகோதரனாக எப்பொழுதும் அவன் நல்லவனாகவே இருந்தான்.

துரியோதனின் காதல்

துரியோதனின் காதல்

மகாபாரதம் முழுவதும் துரியோதனன் பற்றி கூறப்பட்டிருந்தாலும் அவனின் குடும்ப வாழ்க்கை பற்றிய குறிப்புகள் பெரிய அளவில் இல்லை என்பதுதான் உண்மை. துரியோதனின் மனைவியின் பெயர் பானுமதி ஆகும். துரியோதனனின் திருமணம் கிட்டதட்ட ஒரு காதல் திருமணமாகும். அதற்கு உதவி புரிந்தது துரியோதனனின் ஆருயிர் நண்பன் மாவீரன் கர்ணன் ஆவான்.

பானுமதி

பானுமதி

துரியோதனின் மனைவியான பானுமதி பிராஜ்யோதிஷ்பூரை ஆண்ட பகதத்தன் என்னும் மன்னனின் மகள் ஆவார். இவர் பருவ வயதை எட்டியவுடன் இவருக்கு சுயம்வர நிகழ்த்த இவரின் தந்தை முடிவு செய்திருந்தார். இளவரசனாக முடிசூட்டப்பட்டிருந்த துரியோதனன் சகுனியின் அறிவுரையின் படி பானுமதியின் சுயம்வரத்தில் கலந்துகொள்ள தன் நண்பன் கர்ணனுடன் சென்றான். அந்த சுயம்வரத்தில் சிசுபாலன், ஜராசந்தன், பிக்ஷமகன், வக்ரன் போன்ற மாவீரர்களும் கலந்து கொள்ள வந்திருந்தனர்.

சுயம்வர விதிகள்

சுயம்வர விதிகள்

பகதத்தன் ஏற்பாடு செய்திருந்த சுயம்வர விதிகளின் படி இளவரசரகள் அனைவரும் வரிசையா நிற்க வேண்டும். பானுமதி ஒவ்வொருவரின் முன்னும் வந்து நிற்கும்போது அவர்கள் தங்களின் வீரத்தை பற்றியும், திறமைகளை பற்றியும் கூற வேண்டும். அதில் பானுமதிக்கு பிடித்தவரை அவர் தேர்வு செய்து கொள்வார் என்று விதி நிர்ணயிக்கப்பட்டது. சுயம்வரத்தில் பங்கேற்கும் அனைவரும் பானுமதியின் வருகைக்காக காத்திருந்தனர்.

MOST READ:உங்கள் பிறந்த தேதியின் படி ஆப்பிரிக்க ஜோதிடம் உங்கள் எதிர்காலத்தை பற்றி துல்லியமாக கூறுவது என்ன?

துரியோதனன் நிராகரிப்பு

துரியோதனன் நிராகரிப்பு

அரங்கிற்குள் நுழைந்த பானுமதியை பார்த்து அனைவரும் வியந்தனர். தேவர்களே பொறாமைப்படும் அளவிற்கு சொர்ண விக்கிரகம் போல அழகில் மின்னினார் பானுமதி. ஒவ்வொரு இளவரசராக பார்த்த பானுமதி துரியோதனனை மட்டும் பார்க்காமல் எதிர்திசையில் தன் திரும்பி கொண்டார். இந்த நிராகரிப்பு துரியோதனனுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது.

பானுமதி கடத்தல்

பானுமதி கடத்தல்

பானுமதி நிராகரிப்பால் கோபமடைந்த துரியோதனன் பானுமதியை கடத்தி செல்ல முடிவெடுத்தான். இதனை தன் நண்பன் கர்ணனிடமும் கூறினான். நண்பனின் சொல்லை தட்ட இயலாத கர்ணன் அதற்கு ஒப்புக்கொண்டான். இருவரும் அங்கிருந்த மற்ற இளவரசர்களுடன் போர் புரிய தொடங்கினர். சிசுபாலன், ஜராசந்தன் போன்ற மாவீரர்கள் கூட கர்ணன் மற்றும் துரியோதனனின் வீரத்தின் முன் எதிர்த்து நிற்க முடியாமல் திணறினர்.

அஸ்தினாபுர வருகை

அஸ்தினாபுர வருகை

அங்கிருந்த இளவரசர்கள் அனைவரையும் எளிதில் தோற்கடித்த துரியோதனனன் பானுமதியுடன் அஸ்தினாபுர கோட்டையை வந்தடைந்தார். இதற்கிடையில் துரியோதனனின் வீரம் பானுமதியை வெகுவாக கவர்ந்தது. அஸ்தினாபுர கோட்டையில் பிதாமகர் பீஷ்மர் துரியோதனனின் இந்த செயலை ஏற்றுக்கொள்ளாமல் அவனை கடுமையாக திட்டினார். மேலும் இந்த செயலால் கர்ணன் மீதான அவரின் வெறுப்பு அதிகமானது.

துரியோதனன் - பானுமதி திருமணம்

துரியோதனன் - பானுமதி திருமணம்

பீஷ்மரின் கொடுஞ்சொற்கள் துரியோதனனை எதுவும் செய்யவில்லை." தாங்களும் விசித்திர வீரியனுக்காக அம்பை உட்பட மூன்று பெண்களை காசியிலிருந்து கடத்தி வந்தவர் தானே " என்று கூறி அவரின் வாயை அடைந்துவிட்டான். காந்தாரியும் தன்னைப்போலவே பானுமதியும் சிவபக்தியில் சிறந்து விளங்குபவர் என்று அறிந்ததால் பானுமதியை மிகவும் பிடித்து போய்விட்டது. இறுதியில் பீஷ்மரின் சம்மதத்துடன் பானுமதியை மணந்தான் துரியோதனன்.

MOST READ:இந்த 5 ராசிக்காரர்கள் தங்கள் முன்னாள் காதலர்களை பழிவாங்காமல் விடமாட்டார்களாம்... ஜாக்கிரதை...!

குழந்தைகள்

குழந்தைகள்

துரியோதனன் மற்றும் பானுமதியின் காதலின் அடையாளமாக அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். பெண் குழந்தைக்கு லக்ஷமன் என்றும் ஆண் குழந்தைக்கு லக்ஷமண் குமாரன் என்றும் பெயர் வைத்தனர். துரியோதனனின் மகள் கிருஷ்ணரின் மகன் சம்பாவை திருமணம் செய்து கொண்டார். மகன் லக்ஷமண குமாரனோ குருஷேத்திர போரில் அர்ஜுனனின் மகன் மாவீரன் அபிமன்யு கையால் கொல்லப்பட்டான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: love காதல்
English summary

Unknown Love Story of Duryodhana and Bhanumati

Check out the interesting love story of the epic villain Duryodhana and his wife Bhanumati.
Desktop Bottom Promotion