Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
ஹனிமூன் செல்லும்போது இந்த தவறுகளை தெரியாமல் கூட செய்துவிடாதீர்கள்...!
திருமணம் ஆன புதிதில் தம்பதிகள் செய்யும் சில தவறுகள் அவர்களின் மணவாழ்க்கையை பாதிக்கக்கூடும்.
திருமணம் என்பது மிகவும் புனிதமான உறவாக அனைத்து மத மக்களாலும் கருதப்படுகிறது. ஒருவருக்கொருவர் இறுதி வரை துணையாய் இருப்போம் என்ற உறுதிமொழியுடனேயே ஆணும், பெண்ணும் திருமண பந்தத்தில் இணைகிறார்கள். திருமணம் என்பது காதல் மற்றும் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு கட்டப்படும் உறவுக்கோட்டை ஆகும். கணவனும், மனைவியும்தான் அதனை இறுதிவரை காப்பாற்ற வேண்டும்.

இவை மட்டுமின்றி திருமண வாழ்க்கை வெற்றிகரமானதாக அமைய ஆண், பெண் இருவருமே பல தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும். திருமணம் ஆன புதிதில் அவர்களுக்கு என்ன செய்கிறோம் என்பதே புரியாது, அந்த சூழ்நிலையில் அவர்கள் செய்யும் சில தவறுகள் அவர்களின் மணவாழ்க்கையை பாதிக்கக்கூடும். குறிப்பாக தேனிலவு செல்லும்போது அவர்கள் இருக்கும் உற்சாகத்தில் அவர்கள் சில புனிதமற்ற காரியங்களை செய்யக்கூடும். அவ்வாறு அவர்கள் செய்யும் செயல்கள் மிகப்பெரிய பாவங்களென இந்து சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த பதிவில் திருமணமான புதிதில் தம்பதியர்கள் என்னென்ன செய்யக்கூடாது என்பதை பார்க்கலாம்.

தேனிலவு
திருமணம் ஆன குறுகிய காலத்தில் கணவன், மனைவி ஒருவரையொருவர் புரிந்துகொள்ள தேனிலவு செல்வார்கள். இது அவர்களுக்கு இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கும். ஆனால் அவர்கள் தேனிலவு செல்லும் இடம் புனிதஸ்தலமாக இருக்கக்கூடாது என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

சிவபெருமான்
ஒருவேளை நீங்கள் ஏதாவது பக்தி ஸ்தலத்திற்கு சென்று விட்டால் கூட சிவேபெருமான் இருக்கும் இடத்திற்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது சாஸ்திரங்களின் படி புனிதமற்ற செயலாக கருதப்படுகிறது.

காரணம்
சிவபெருமான் பார்வதிதேவியை திருமணம் செய்திருந்தால் கூட உலகின் ஆசைகள் மற்றும் மாயாவில் இருந்து விலகி இருக்கவே எண்ணினார். எனவே தேனிலவிலோ ஆழ்ந்து திருமணமான முதல் வருடத்திலோ பெண்கள் சிவன் இருக்கும் இடத்திற்கு சென்று விட்டு வந்த பின் ஒருவேளையோ கர்ப்பமடைந்தால் பிறக்கும் குழந்தை உலகின் ஆசைகளில் இருந்து விலகி என்று கூறப்படுகிறது. இதனால்தான் பெண்கள் திருமணமான முதல் வருடத்தில் சிவபெருமானை வழிபட வேண்டாம் என்ரூ அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேவி பார்வதி
சிவபெருமானை வழிபடுவதற்கு பதிலாக பெண்கள் திருமணமான முதல் வருடத்தில் பார்வதி தேவியை வழிபடலாம். பார்வதியை வழிபடுவது பெண்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், அவர்களின் குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும் வழங்கும்.

சிவ வழிபாடு
தம்பதிகள் சிவன் கோவிலுக்கு செல்ல நேர்ந்துவிட்டால் சில நாட்களுக்கு உறவில் ஈடுபடுவதையோ, கர்ப்பம் தரிக்க முயலுவதையோ நிறுத்த வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. சிவபெருமானை வணங்கிவிட்டு உறவில் ஈடுபடுவது சிவபெருமானின் கோபத்தை தூண்டும்.

இறுதிச்சடங்கு
தேனிலவில் இருக்கும் போதோ அல்லது திருமணம் ஆன புதிதிலோ ஆணோ, பெண்ணோ இருவரும் இறுதிச்சடங்குகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இது அவர்கள் வாழ்வில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று வேதங்கள் கூறுகிறது.

படுக்கையறை
தம்பதிகளின் படுக்கையறை ஒருபோதும் தென்கிழக்கு திசையில் இருக்கக்கூடாது, அவ்வாறு இருந்தால் அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதங்களும், சண்டைகளும் எழ வாய்ப்புள்ளது. அதற்கு பதிலாக அவர்களின் படுக்கையறை தென்மேற்கு திசையில் இருந்தால் அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

படுக்கை
அதேபோல படுக்கையானது வடக்குபுறமோ அல்லது கிழக்கு புறமோ இருக்கவேக்கூடாது. அதற்கு பதில் தென்மேற்கு திசையில் படுக்கை விரிக்கிப்பட்டால் தம்பதிகளுக்குள் காதல் பெருகும். மரக்கட்டிலில் தூங்குவது கூடுதல் சிறப்பு.

படங்கள்
மரணத்தை பிரதிபலிக்கும் படங்களையோ, பொருட்களையோ ஒருபோதும் உங்கள் வீட்டிற்குள் வைக்க அனுமதிக்காதீர்கள். அது துர்சகுனமாக கருதப்படுவதுடன் உங்க வீட்டிற்குள் எதிர்மறை சக்திகளை ஈர்க்க காரணமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications