Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது?
10 வருஷமா பொம்பளங்க ஓட்ற ஸ்கூட்டி மட்டும் திருடிய விநோத திருடன்... ஏன்னு தெரியுமா?
பத்து வருடங்களாக ஸ்கூட்டி மட்டும் திருடிய விநோத திருடன் சொன்ன காரணத்தை கேட்டு சிரிப்பதா இல்லை திருடியதற்கு தண்டனை கொடுப்பதா என்று நீங்களே பாருங்கள்.
திருடர்களில் பல ரகம் உண்டு. திருட்டைப் பொருத்தவரையில் எல்லோரும் ஒரே லாஜிக்கை பின்பற்றித் திருட முடியாது. அப்படி திருடினால் வுகமாக மாட்டிக் கொள்வார்கள். அதனாலேயே ஒவ்வொரு திருடனையும் நீங்கள் நன்கு கவனித்துப் பார்த்தால் தனித்தனி லாஜிக் வைத்திருப்பார்கள்.

சிலர் திருட்டில் கூட சில நேர்மையைக் கடைபிடிப்பார்கள். அதெல்லாம் கூட பரவாயில்லங்க. இப்ப ஒரு திருடனப் பத்தி பார்க்க போறோமே அந்த கதையைக் கேட்டா சிரிப்பு தாங்க வருது.

10 வருடங்கள்
கடந்த பத்து வருடங்களாக இந்த திருடன் ஒரு நூதன திருட்டை செய்து வருகிறான். இதுவரையிலும் போலீசுக்கு டிமிக்கி கொடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த அவன் போலீசில் சிக்கிக் கொண்டான். போலீசின் விசாரணையில் தான் இவனுடைய திருட்டின் நியாய தர்மமும் புத்திசாலித்தனமும் தெரிந்திருக்கிறது. அந்த சுவாரஸ்ய தகவல்கள் பற்றி பார்க்கலாம்.

விசித்திர கொள்ளை
பொதுவாக நிறைய கொள்னைச் சம்பவங்கள் விகாரமானதாக இருக்கும். ஆனால் இந்த கொள்ளைச் சம்பவம் மிகவும் விசித்திரமான ஒன்று. ஏனென்றால் இவர் கடந்த பத்து ஆண்டுகளாக திருடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பத்து வருடங்களாக ஒரே பொருளை திருடியிருக்கிறார். இப்படி எந்த திருடனாவது செய்வானா? அந்த வேடிக்கை தான் என்ன?

லேடிஸ் ஸ்கூட்டி
இந்த கொள்ளைக் காரன் வாகனங்களை மட்டுமே திருடியிருக்கிறார். குறிப்பாக, பெண்கள் மட்டுமே ஓட்டக்கூடிய வகையில் உள்ள இலகு ரக வாகனங்கள மட்டுமே திருடுகிறாராம். கடந்த பத்து வருடங்களாக இவர் திருடிய அனைத்து வாகனங்களும் கியர் இல்லாத பெண்கள் ஓட்டக்கூடிய வாகனங்கள் தான்.

எங்கே வைத்திருந்தார்?
பொதுவாக திருடர்கள் தான் திருடிய பொருள்களை குறைந்த விலைக்காவது விற்று உடனே காசாக்கி விடுவார்கள். ஆனால் இந்த திருடன் இதில் வித்தியாசமானவனாக இருக்கிறான். தான் திருடிய எந்த வாகனத்தையும் அவன் விற்கவில்லை. எல்லா வாகனங்களையும் வேறு வேறு இடங்களில் ஒளித்து வைத்திருக்கிறான்.
போலீசாருக்கோ அல்லது வேறு எவருக்கும் சந்தேகம் வராத வகையில், திருடிய வண்டிகளை ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் நிறுத்தி வைத்திருக்கிறார். அதேபோல் சிசிடிவி இல்லாத இடங்கள் ஏரியாக்களாக பார்த்து திருடியிருக்கிறார்.

ஏன் ஸ்கூட்டி மட்டும்
வாகனங்களைத் திருடும் மற்ற வாகனங்களை விட்டு விட்டு வெறும் கியர் இல்லாத ஸ்கூட்டியை மட்டும் ஏன் திருட வேண்டும்? அதற்கான காரணம் என்னவென்று விசாரித்த போது, அவர் தனக்கு கியர் வைத்த வண்டி ஓட்டத் தெரியாது என்றும், அதுபோன்ற பெரிய வண்டிகள் விற்கும்போது நிறைய பிரச்சினைகள் வரும் என்பதால் இந்த இலகு ரக வாகனங்கள் மட்டும் திருடியதாகக் கூறியிருக்கிறார்.

எவ்வளவு வாகனம்?
கடந்த பத்து வருடங்களாக எவ்வளவு வாகனங்கள் திருடியிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் போலீஸ் கையில் சிக்கிய போது 20 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. அவை இருபதுமே லேடிஸ் ஓட்டுகிற ஸ்கூட்டிக்கள் தான்.

எப்படி சிக்கினார்?
இப்படி திட்டமிட்டு படு உஷாராக திருடிய திருடன் எப்படி மாட்டினார் என்பது தான் சுவாரஸ்யமான கதை. இவ்வளவு உஷாரான திருடன் யாராவது ஒரே ஏரியாவில் தொடர்ந்து திருடுவார்களா?
இவர் ஒருமுறை திருடிய இடத்தில் சிசிடிவி இல்லை என்பதை அறிந்து கொண்டதோடு அந்த ஏரியாவில் வண்டிகளின் புழக்கம் அதிகமாக இருந்ததையும் கண்டு கொண்டார். தொடர்ந்து அந்த ஏரியாவிலேயே தொடர்ந்து சில வாகனங்களை திருடியிருக்கிறார். அந்த ஏரியா மக்கள் இப்படி தொடர்ச்சியாக வாகனங்கள் காணாமல் போவதை போலீசில் புகார் கொடுக்க, தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு திருடன் தேடப்பட்டு வந்தான்.
இந்நிலையில் ஜிபிஎஸ் உதவியோடு இந்த ஏரியாவில் சந்தேகப்படும்படி எந்த செல்போன்கள் புழக்கத்தில் இருந்தன என்பதை ஜிபிஎஸ் உதவியோடு தேடியதில் தான் இந்த விசித்தஜர திருடன் மாட்டிக்கொண்டான்.



Click it and Unblock the Notifications