TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
இந்த ஒரு பொருளை தானம் கொடுப்பது உங்களின் வாழ்க்கையையே மாற்றக்கூடும் தெரியுமா?
பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கை என்பது யாருக்குமே கிடைக்காத ஒரு வரமாகும். ஏனெனில் பிரச்சினைகளே நம்மை வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல உதவியாக இருக்கும்.ஆனால் பிரச்சினைகள் வரும்போது சோர்ந்து விட்டால் நாம் அடுத்த இலக்கை நோக்கி நகரவே முடியாது. ஏனெனில் நமது வாழ்வில் ஏற்படும் அனைத்து தடைகளையும் கடந்து வரும் ஆற்றலுடன்தான் கடவுள் நம்மை படைத்திருக்கிறார்.
மத நம்பிக்கைகளின் படி நாம் செய்யும் சிறிய மாற்றங்கள் கூட நமது பிரச்சினைகளை நம்மிடம் இருந்து விலக்கி வைக்கும். அந்த வகையில் நீங்கள் வீட்டில் செய்யக்கூடிய இந்த எளிமையான செயல்கள் உங்கள் எதிர்காலத்தையும், இல்லறத்தையும் பாதுகாக்கும் என்று நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது. இந்த பதிவில் உங்கள் வாழ்க்கையை எளிமையாக்கக்கூடிய மாற்றங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
வேலை தொடர்பான பிரச்சினைகள்
உங்களின் கடுமையான முயற்சிகளுக்கு பின்னரும் வேலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் தடைகள் இருந்தால் புதன் கிழமையில் தேவைப்படும் ஏழை ஒருவருக்கு அரிசியை தானமாக கொடுங்கள். உங்கள் வேலை விரைவில் வெற்றிகரமாக முடியும்.
நிதி நெருக்கடி
வீட்டில் கடுமையான நிதி நெருக்கடி இருந்தால் சிவப்பு சந்தனத்துடன், சில சிவப்பு ரோஜா இதழ்களை 58 ருபாய் வைத்து அதனை ஒரு சிவப்பு துணியில் கட்டுங்கள். இந்த முடிப்பை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் உங்களின் பணப்பிரச்சினை விரைவில் காணாமல் போகும்.
வியாபார வெற்றி
வியாபாரத்தில் வெற்றியை நிலைநாட்ட, ஐந்து எலுமிச்சை பழங்களுடன் சில மிளகு மற்றும் கடுகுகளை சேர்த்து உங்கள் கடை அல்லது பணிசெய்யும் இடத்தில் உள்ள அனைத்து மூலைகளிலும் வைக்கவும். அடுத்தநாள் காலையில் அவற்றை ஒரு துணியில் மொத்தமாக கட்டி ஓடும் தண்ணீரில் விட்டுவிடவும். இது உங்களின் கெட்ட நேரத்தை உங்களை விட்டு போக வைக்கும்.
தம்பதிகளுக்கு இடையேயான சண்டை
தூங்குவதற்கு முன் மனைவியின் பக்கத்தில் சில கற்பூரத்தையும், கணவனின் பக்கத்தில் சிறிது குங்குமத்தையும் வைத்துக்கொண்டு தூங்கவும். இது உங்களுக்குள் இடையே இருக்கும் பிரச்சினைகளை விரைவில் தீர்க்கும் மேலும் அவர்களுக்கு இடையேயான நேசத்தை அதிகரிக்கும். உங்களுக்குள் இருக்கும் சச்சரவுகள் தீரும்வரை இதனை தொடர்ந்து செய்யவும்.
விவாகரத்தை தவிர்க்க
தம்பதிகள் பிரிய முடிவெடுத்து விட்டால் அதனை தவிர்க்க விரும்புபவர்கள் ஒரு ஆலமர இலையை எடுத்துக்கொண்டு அதில் கணவன், மனைவியின் பெயரை சந்தனத்தால் எழுதவும், பின்னர் இதனை புனித நீரில் நனைத்து தம்பதிகள் உறங்கும் அறையில் வைத்துவிடுங்கள். இது அவர்களுக்குள் இருக்கும் விவாகரத்து எண்ணத்தை விரைவில் போக்கும்.
செல்வத்தை பெற
செவ்வாய் கிழமையில் 22 அரசமர இலைகளை எடுத்துக்கொள்ளவும். கிழக்கு திசையில் அமர்ந்து அனைத்து இலைகளிலும் ராமநாமத்தை எழுதவும். பின்னர் இந்த இலைகளை ஆஞ்சநேயர் பாதத்தில் வைத்து வழிபடவும். அதன்பின்னர் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.
கடன் பிரச்சினை தீர
உங்களுக்கு அதிக கடன் பிரச்சினை இருந்தால், சுக்ல பக்ஷ தினத்தன்று அரிசி மாவுடன் வெல்லம் கலந்து அதனை அனுமனுக்கு வைத்து வழிபடவும். சில வாரங்களிலேயே உங்கள் கடன் பிரச்சினை தீர்ந்துவிடும், இதில் உங்களின் முயற்சியும் இருக்க வேண்டும். கடவுள் வழிதான் காட்டுவார் நாம்தான் அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
குடும்பத்தில் குழப்பம்
உங்கள் குடும்பத்தில் தொடர்ந்து குழப்பங்கள் இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், அரிசி மாவுடன் சிறிது கருப்பு எள்ளை சேர்த்து துர்கை அம்மனுக்கு வைத்து வியாழக்கிழமையில் வழிபடுங்கள். இது விரைவில் நீங்கள் இழந்த குடும்பத்தின் மகிழ்ச்சியை மீட்டுத்தரும்.