Latest Updates
-
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
காது கேட்காதவர்களுக்காக பேசிப் பேசியே கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்
காது கேட்காதவர்களிடம் பேசி பணம் சம்பாதிக்கும் பெண்ணின் சுவாரஸ்யம் பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம். ஆன்லைனில் காது கேளாதவர்களுடன் சைகை மொழியில் பேசுவது இவர் வேலை. இவரைப் பற்றி மேலும் அறி
நீங்கள் படைபாற்றலுடன் இருந்தால் பணம் சம்பாதிப்பது மிகவும் சுலபம். இதற்கு முக்கியமாகத் தேவைப்படுவது உங்கள் வலிமையை நீங்கள் உணர்ந்து கொள்வது, மற்றும் உங்கள் குறிக்கோளை நோக்கி நேர்மறையான பாதையில் செல்வது. இதையே ஒரு பெண் செய்திருக்கிறார்.

அந்தப் பெண் தனக்கு அமெரிக்கன் சைகை மொழி சரளமாக பேச வருவதை உணர்ந்துக் கொண்டு அதில் தனது முழு கவனத்தையும் செலுத்தி தற்போது ஒவ்வொரு மாதமும் £7000 சம்பாதிக்கிறார். ஆன்லைனில் காது கேளாதவர்களுடன் சைகை மொழியில் பேசுவது இவர் வேலை. இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

பாடமாக படித்தார்
இந்த மொழியை பள்ளியில் ஒரு பாடமாக இவர் படித்தார். ப்ளோரிடாவில் வசித்து வருபவர் கிறிஸ்டல் ரிவர்ஸ் . இவர் மாதம் £7000 சம்பாதிக்கிறார். இவர் அமெரிக்க சைகை மொழியை சரளமாகப் பேசக் கூடியவர். இந்த மொழியை அவர் பள்ளியில் பாடமாகப் பயின்றவர் தனது எட்டு வயது முதல் காது கேளாதவர்களிடம் சரியான முறையில் தொடர்பு கொள்வதற்காக இந்த மொழியை அவர் கற்று வந்துள்ளார்.

வெப் கேமரா மூலம்
வெப் கேமரா மூலம் ஆன்லைனில் தொடர்பு கொள்ளத் தொடங்கினார். டிஸ்னியில் அவர் பணியில் இருக்கும்போது இந்த ஆற்றலை அவர் பயன்படுத்திக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வெப் கேமராவில் அவரின் சைகை மொழியைப் பதிவு செய்யத் தொடங்கினார். சில மாதங்களுக்குப் பிறகு தனது வீடியோவை ஒளிபரப்பத் தொடங்கினார். இதனைக் கண்ட ஒரு காது கேளாதவர் இவருடைய மொழிப் புலைமை பற்றி கேட்டறிந்தார்.

தொடர்பு கொள்ளும் முயற்சி
அவர் தனது பார்வையாளர்களுடன் ஊடாடும் முயற்சியில் இறங்கினார். தன்னைப் பின்பற்றுகிறவர்கள் மற்றும் தனது விசிறிகளுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளள வேண்டும் என்று விரும்பினார்.
உட்கார்ந்தபடி டைப்பிங் மற்றும் சாட்டிங் செய்வதை விட நேரடி தொடர்பில் பேசுவது இன்னும் ஆர்வத்தை அதிகரிக்கும் என்று நம்பினார். கிறிஸ்டல் பெரும்பாலும் தனது சொந்த செயல்பாடுகளை கேமராவில் பதிவிட்டு வெளியிட்டார். சில நேரங்களில் தனது வாழ்க்கை பற்றி பேசுவது, தனக்கு பிடித்த பொழுதுபோக்கை செய்வது, விளையாடுவது, நடனமாடுவது, போன்றவற்றை ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செய்தார்.

தொடர்ந்த பணி
வெப் கேமரா பயன்படுத்துவதை நிறுத்த விரும்பவில்லை. அவர் தனது எதிர்கால திட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, வெப் கேமரா மூலம் தனது விசிறிகளைச் சந்திப்பதை நிறுத்தப் போவதில்லை என்று கூறினார். இதனால் அவருக்கு ஒவ்வொரு மாதமும் நல்ல வருமானம் கிடைப்பதாகவும் இதனை விட முக்கியமாக இந்த வேலை அவரை மிகவும் மகிழ்விப்பதாகவும் கூறினார். இருப்பினும் இந்த செயல்பாடுகளால் அவர் சில விமர்சனங்களை எதிர்கொண்ட போதும் இந்த வேலை அவருக்கு மன மகிழ்ச்சியைத் தருவதால் ஓருபோதும் இதனை விடப்போவதில்லை என்று கூறினார்.
இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம்.



Click it and Unblock the Notifications
