Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
சிவபெருமான் கூறும் நீங்கள் செய்யும் மன்னிக்க முடியாத மிகப்பெரிய பாவம் எது தெரியுமா?
இந்து மதத்தின் மிக முக்கியமான கடவுள் சிவபெருமான் ஆவார். மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான் அழிக்கும் பணியை செய்யும் பரம்பொருளாக இருக்கிறார்.
இந்து மதத்தின் மிக முக்கியமான கடவுள் சிவபெருமான் ஆவார். மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான் அழிக்கும் பணியை செய்யும் பரம்பொருளாக இருக்கிறார். நாம் செய்யும் பாவங்களுக்கு ஏற்ப நமக்கு வாழும் போதும், இறந்த பிறகும் தண்டனைகளை கொடுப்பதும் இவர்தான். சிவபெருமானுக்கும் தேவி பார்வதிக்கும் திருமணம் நடந்ததே ஒரு சுவாரசியமான நிகழ்வாகும்.

தேவி பார்வதி சிவபெருமானை மணந்து கொண்டு கைலாயத்திற்கு வந்த பிறகு அந்த இடத்தின் சூழ்நிலையை புரிந்து கொள்ளவும், தன்னுடைய கடமைகளை தெரிந்து கொள்ளவும் மிகவும் சிரமப்பட்டார். அப்போது சிவபெருமான் உயிரினங்களை பற்றிய அனைத்து தகவல்களையும், புவி வாழ்வில் அடங்கியுள்ள ரகசியங்களையும் தேவி பார்வதிக்கு எடுத்துரைத்தார் என்று சிவபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபெருமான் பார்வதி தேவிக்கு கூறிய வாழ்க்கை பற்றிய ரகசியங்கள் என்னென்ன என்று இடஙக பதிவில் பார்க்கலாம்.

சிவபெருமான்
முன்பே கூறியது போல சிவபெருமான்தான் இந்த உலகை இயக்கும் பரம்பொருளாவார். அவரின்றி உலகில் ஓர் அணுவும் அசையாது. பிறப்பு, இறப்பு என எதுவும் இல்லாத சிவபெருமான் இயற்கைக்கு அப்பாற்பட்டவர். நாம் வாழும்போது செய்யும் தவறுகளுக்கு தண்டனை வழங்க சனிபகவானையும், நாம் இறந்த பின் நமது பாவங்களுக்கு தண்டனை வழங்க எமதர்மனையும் நியமித்தது ஈசன்தான். இவ்வுலகின் சமநிலையை பாதுகாக்கு அழிப்பதை தன் தொழிலாக கொண்டு தர்மத்தை நிலைநாட்டுவதும் ஈசன்தான்.

தேவி பார்வதி
பார்வதி தேவிதான் சக்தியின் மூல ஆதாரம். சிவபெருமானின் சக்திக்கு காரணமே தேவி பார்வதிதான். சிவன் மற்றும் பார்வதி இருவரின் வாழ்க்கையுமே ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டது. பார்வதி ஆதிசக்தியாக இருந்தாலும் பூமியில் மகாராஜா ஹிமவாத் மற்றும் ராணி மைனாவிற்கு மகளாக பிறந்தார். சிறுவயது முதலே சிவபெருமான் மீது ஈர்ப்பு கொண்ட பார்வதி சிவபெருமானை அடைய கடுந்தவம் மேற்கொண்டார். இறுதியில் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சிவபெருமான் பார்வதி தேவியை மணந்து கொண்டு கைலாயத்திற்கு அழைத்து சென்றார். சிவபெருமான் பார்வதிக்கு கூறிய வாழ்க்கை ரகசியங்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

மிகப்பெரிய புண்ணியம் மற்றும் பாவம்
மிகபெரிய பாவம் எது மிகப்பெரிய புண்ணியம் எது என்று சிவபெருமானிடம் பார்வதி வினவியபோது சிவபெருமான் அதற்கு மிகப்பெரும் புண்ணியம் என்பது மற்றவர்களை மதித்து நடப்பதும், நன்றியுணர்வுடன் இருப்பதும் தான் என்று கூறினார். மிகப்பெரும் பாவம் என்னும்போது நேர்மியின்மையும், அதுபோன்ற நிகழ்வுகளை ஆதரிப்பதும்தான் என்று கூறினார். வாழ்க்கையில் நேர்மையாகவும், நன்றியுணர்வுடனும் இருப்பவர்கள் வாழ்க்கையில் சரியான திசையில் செல்பவர்கள்.

சுயமதிப்பீடு
ஒழுக்கமான வாழ்விற்கு சிவபெருமான் கூறிய இரண்டாவது வழி என்னவெனில் ஒருவர் எப்போதும் சுயசாட்சியம் செய்துகொள்பவராய் இருக்க வேண்டும். அதன் அர்த்தம் என்னவெனில் தான் செய்யும் அனைத்து செயல்களிலும் உள்ள நியாய, தர்மங்களை ஆராய்ந்து தனக்கு தானே சாட்சியாக இருக்க வேண்டும். இவ்வாறு வாழ்வது அவர்களை ஒருபோதும் தவறான காரியங்களையோ அல்லது பாவச்செயல்களையோ செய்ய அனுமதிக்காது.

செய்யக்கூடாத மூன்று செயல்கள்
மேலும், ஒருவர் சொல்லாலோ, செயல்களாலோ அல்லது மனதாலோ ஒருபோதும் பாவகாரியங்ளை செய்யக்கூடாது. ஒரு மனிதனுக்கு நடக்கும் அனைத்து கெடுதல்களும் அவர்கள் முன்னால் செய்த வினைகளின் விளைவுதான். எனவே மனிதன் தன் வாழ்வில் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும், செய்யும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

வெற்றிக்கான ஒரே மந்திரம்
ஆசைதான் அனைத்து பிரச்சினைகளுக்குமே ஆணிவேராய் அமைகிறது. ஆசையும், பற்றும்தான் உங்களை வெற்றியை நோக்கி முன்னேற விடாமல் தடுப்பதாகும். உலகின் அனைத்து ஆசைகளில் இருந்தும், மோகங்களில் இருந்தும் நீங்கள் விடுபட்டுவிட்டால் அதற்குப்பின் உங்கள் வெற்றியை எவராலும் தடுக்கமுடியாது. உலகின் ஆசைகளை துறக்க ஒரே வழி இந்த வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என்று நம் மனதிற்கு புரியவைப்பதுதான்.

வாழ்க்கையை மாற்றும் அதிசயம்
தனது அறிவுரைகளில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு கூறிய இறுதி செய்தி என்னவெனில் நமக்குள் எழும் தூண்டுதல்களே நமக்கான பிரசினைகளை உருவாக்குகிறது. ஒரு பொருளை அடைந்த பின் அதில் அமைதி கொள்ளாமல் மனிதன் அடுத்த பொருளை தேடி மீண்டும் அலைகிறான். இப்படி அலைந்து அலைந்தே தன் வாழ்க்கையின் நிம்மதியை மனிதன் இழந்துவிடுகிறான். இறைநம்பிக்கை, தியானம் போன்றவற்றின் மூலம் இந்த தூண்டுதல்களை நாம் கட்டுப்படுத்த வேண்டும்.



Click it and Unblock the Notifications