Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இது நெஜமாவே பேயாம்... அந்த கண்ணாடியில இருக்கற திகில் உருவத்த நல்லா பாருங்க...
கண்ணாடியில் ஒரு சிறுவனின் பிரதிபலிப்பைக் கண்டு பயந்து போன நெட்டிசன்கள் போட்ட வைரல் பதிவுகள் பற்றி இந்த கட்டுரையில் காணலாம். அந்த திகில் சம்பவம் பற்றி தான் இந்த கட்டுரை பேசவிருக்கிறது.
மனிதர்களின் கண்கள் காண முடியாத சில நுண்ணிய விஷயங்களும் கேமரா கண்களுக்கு புலப்படும். இதனை வீடியோவாக எடுத்து மகிழ்வது ஒரு சிலரின் பழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக சில அமானுஷ்ய விஷயங்கள் அவ்வபோது சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு, விவாதத்துக்குரிய செய்தியாக மாற்றம் பெரும். அதன் நம்பகத்தன்மை குறித்து விவாதங்கள் அரங்கேறும்.

அவ்வாறான ஒரு வழக்கைக் கொண்ட ஒரு வீடியோவை இப்போது பார்க்கலாம். அதில் ஒரு நபர் தனது மகனைக் கொண்டு எடுக்கப்பட்ட விடியோவில் அவனுடைய பிம்பம் ஒரு வித பயத்தை உண்டாக்கக் கூடியதாக இருப்பதாகக் கூறியுள்ளார். இதன் முழு விவரத்தை அறிந்துக் கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

வழக்கமான வீடியோ
இது ஒரு வழக்கமான வீடியோவாக இருந்திருக்கலாம். ஒரு தம்பதி தனது குழந்தையை வைத்து ஒரு வீடியோவை பதிவு செய்திருந்தனர். பதிவு செய்யப்பட்ட வீடியோவை அவர்கள் காணும்போது, அவர்களின் குழந்தையின் பிரதிபலிப்பில் எதோ தவறு இருப்பதாக உணர்ந்தார்கள். அதனால் வீடியோவை மறுமுறை சோதித்து பார்த்தனர்.

என்ன தெரிந்தது?
அந்த வீடியோவில் இருந்தது என்னவென்றால்... அந்த வீடியோவில் காணப்பட்டது, அந்தக் குழந்தை தனது தாயை நோக்கி திரும்பும்போது, கண்ணாடியில் அவனுடைய பிரதிபலிப்பு நேரடியாக அவனுடைய கண்கள் கேமராவைப் பார்ப்பது போல் இருந்தது. அவனுடைய கண்களின் நிறம் கருப்பாக மாறி, பின் இயல்பு நிலைக்கு திரும்பியது,

எடிட் செய்யப்பட்டதா?
பயப்பட வேண்டாம் நண்பர்களே.. இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது... இந்த வீடியோவைப் பார்க்கும்போது பல தரப்பட்ட உணர்வுகள் எழுகின்றன. ஆனால் அந்த குட்டு இங்கே வெளியாகிவிட்டது. இந்த வீடியோ அந்தக் குழந்தையின் தந்தையால் வேண்டுமென்றே எடிட் செய்யப்பட்டது. அவர் தொழில் ரீதியாக ஒரு வீடியோக்ராபர்.

பயம்
உண்மையில் அந்த வீடியோ பயத்தை உண்டாக்குகிறது என்பது உறுதி. இந்த வீடியோ பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications