For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகன் சுய இன்பம் செய்வதை நிறுத்த பெட்ரூம், பாத்ரூமில் சிசிடிவி கேமரா பொருத்திய பெற்றோர்..

|

ஒரு குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருப்பது என்பது சாமானியப்பட்ட விஷயம் கிடையாது. ஏனெனில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் கவனத்திற்குரியது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் குழந்தைகள் வளரும் போது அவர்களுடன் பெற்றோரும் சேர்ந்து மாற வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் குழந்தைகளுக்கு முதல் ஆசிரியர்கள் அவர்களின் பெற்றோர்கள் தான். வெறுமனே கல்வி சொல்லிக் கொடுப்பதும் நல்ல குணநலன்களை சொல்லிக் கொடுப்பதும் மட்டும் ஒரு பெற்றோரின் கடமை இல்லை.

Image Courtesy

Bedroom And Bathroom

வளர்ச்சி பருவத்தில் உடலில் ஏற்படும் மாறுதல்களையும் அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்க வேண்டும். ஏனெனில் இந்த டீன் ஏஜ் பருவம் என்பது பெரும் மாற்றத்தை கொடுக்க கூடிய பருவம். உடல் அளவில் மட்டுமல்ல மனதளவிலும் அதற்கு அவர்கள் தயாராக வேண்டும். ஆனால் நிறைய பெற்றோர்கள் இதை புரிந்த பாடில்லை. அந்தவகையில் ஒரு பெற்றோர் தன் மகனின் சுய இன்ப செயலை தடுக்க என்ன செய்துள்ளார்கள் என்று பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கையும் களவுமாக பிடித்தல்

கையும் களவுமாக பிடித்தல்

தன் மகனின் அறைக் கதவை தட்டாமல் உள்ளே சென்ற தந்தைக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தன் மகன் சுய இன்பம் காண்பதை பார்த்த அவன் தந்தை அவனை கண்டபடி திட்டியுள்ளார். இதனால் அந்த பையன் பயந்து ஒளிந்துள்ளார்.

தன்னுடைய நிலையை போஸ்ட் செய்துள்ளான்

தன்னுடைய நிலையை போஸ்ட் செய்துள்ளான்

15 வயதை அடைந்த அந்த பையன் அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா பகுதியை சார்ந்தவன். பெற்றோர்கள் தன்னிடம் நடந்து கொண்ட நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் அதை போஸ்ட் செய்துள்ளான். நான் சுய இன்பம் காண்பதை தடுக்க என் பெற்றோர்கள் என் அறையிலும் நான் பயன்படுத்தும் குளியலறையிலும் கேமராக்களை பொருத்தி உள்ளார்கள் என்றும் கூறியுள்ளான்.

MOST READ: உங்க ராசிப்படி உங்க உடம்புக்குள்ள இருக்கிற அதீத ஆற்றல் என்னனு தெரியுமா? இத படிங்க...

தினசரி கண்காணிப்பு

தினசரி கண்காணிப்பு

பொருத்தியதோடு மட்டுமல்லாமல் தினசரி அந்த கேமராக்களை கண்காணிப்பு செய்வோம் என்றும் மிரட்டியுள்ளனர். தினமும் உன் நடவடிக்கைகளை மானிட்டர் செய்து கொண்டே இருப்போம். சுய இன்பம் காண்பது தவறு, இனி அப்படி செய்தால் தண்டனைகள் கடுமையாக இருக்கும் என்று அவனை பயமுறுத்தி உள்ளார்கள்.

தகுந்த நடவடிக்கை

தகுந்த நடவடிக்கை

சமூக வலைத்தளங்களில் பேசப்பட்ட இந்த நிகழ்ச்சி பிறகு போலிசாரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த பையனுக்கு செக்ஸ் கல்வி குறித்து சொல்லிக் கொடுக்கவும், டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கற்றுக் கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதே நேரத்தில் அவரின் பெற்றோர்க்கும் டீன் ஏஜ் பருவம் பற்றிய புரிதலை எடுத்துக் கூறியுள்ளனர் மருத்துவர்கள்.

MOST READ: ராகியை தினமும் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன மாதிரியான பிரச்சினை வரும்?

செக்ஸ் கல்வி

செக்ஸ் கல்வி

இப்பொழுது மூலை மூலைக்கு செக்ஸ் கல்வி குறித்து குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு வருகிறது. உண்மையில் இந்த புரிதல் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கும் அவசியம் தெரிந்து இருக்க வேண்டும். பள்ளியில் செக்ஸ் கல்வி சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ஒவ்வொரு பெற்றோர்களும் டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். இது ஒரு இயற்கையான மாற்றம் என்பதை புரிய வையுங்கள். அது குறித்து பயத்தை உண்டாக்காதீர்கள்.

நாம் எல்லாரும் பிறக்க காரணமாக இருந்த தாயின் உடலமைப்பை பற்றி சொல்லிக் கொடுக்க வெட்கப்பட வேண்டியதில்லை. அதே மாதிரி ஒவ்வொரு தந்தையும் டீன் ஏஜ் பருவத்தில் மகனுக்கு ஒரு நண்பனாக இருங்கள். செக்ஸ் பற்றிய சரியான புரிதல் அவர்களுக்கு அவசியம். பெண்னை புரிந்து கொண்ட ஆணும், ஆணை புரிந்து கொண்ட பெண்ணும் இருந்தால் மட்டுமே பாலியல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Parents Install CCTV In Son's Bedroom And Bathroom For This Reason

Parenting in the right way can be tough as you need to make sure that you are not feeding your child's brain with filthy stuff, since you as parents are their first teachers! Here is a case of a teenager who shared a bizarre incident of how his parents behaved when they caught him masturbating.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more