Latest Updates
-
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
விஷ்ணுவை வழிபடும் போது செய்யும் இந்த சாதாரண தவறுகள் கூட உங்கள் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்தும்...!
விஷ்ணு பகவான் அன்பே உருவான கடவுளாக இருந்தாலும் அவரை வணங்கும்போது செய்யும் சில தவறுகள் அவரின் கோபத்தை தூண்டக்கூடியதாக அமைந்துவிடுகிறது.
இந்து மதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு காக்கும் தொழிலை செய்து வருகிறார். விஷ்ணு பகவானும் அவரின் அவதாரங்களும் காலத்தால் என்றுமே அழியாதவை. இராமனாக வந்து இராவணனை வதம் செய்ததும், கிருஷ்ண பரமாத்மாவாக வந்து குருஷேத்ர போரை தலைமையேற்று நடத்தி பூமியில் தர்மத்தை நிலை நாட்டியதும் தான் இராமாயணம் மற்றும் மகாபாரதம் என்னும் இருபெரும் இதிகாசங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விஷ்ணு பகவானை வழிபடுவது நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டுவரும். அதுமட்டுமின்றி நம் வாழ்க்கையில் மேன்மையடைய விரும்பினால் அதற்கு விஷ்ணு வழிபாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

அடிப்படையில் விஷ்ணு பகவான் அன்பே உருவான கடவுளாக இருந்தாலும் அவரை வணங்கும்போது செய்யும் சில தவறுகள் அவரின் கோபத்தை தூண்டக்கூடியதாக அமைந்துவிடுகிறது. விஷ்ணு பகவானின் கோபத்தால் உங்கள் வாழ்வில் பல மோசமான விளைவுகள் ஏற்படலாம். இந்த பதிவில் விஷ்ணுவை வணங்கும் போது என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

தவறு 1
காலை நேரத்தில் விஷ்ணு பகவானை வழிபடும்போது உணவு உண்ட பிறகு வணங்கக்கூடாது. காலையில் குளித்த பிறகு விஷ்ணுவை வணங்கிய பிறகே உணவு உண்ண வேண்டும். அதேபோல குளிப்பதற்கு முன்னரும் விஷ்ணுவின் அருகே செல்லக்கூடாது.

தவறு 2
விஷ்ணு பகவானுக்கு பூக்களை வைத்து வழிபடுவது என்பது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. குறிப்பாக மஞ்சள் நிற மலர்கள் விஷ்ணுவிற்கு மிகவும் பிடித்ததாகும். ஆனால் விஷ்ணுவிற்கு வைத்து வழிபடும் மலர்களோ, பழங்களோ உங்களின் சொந்த பணத்தில் வாங்கியதாக இருக்க வேண்டும். ஒருபோதும் கடன் வாங்கியதாகவோ, திருடியதாகவோ இருக்கக்கூடாது.

தவறு 3
நீங்கள் வெளியே செல்லும் இடங்களில் பலவித எதிர்மறை சக்திகள் இருக்கலாம். எனவே நீங்கள் சென்று வந்த இடத்தில் இருந்து எந்தவித துர்சக்திகளும் தொற்றிக்கொண்டு வராமல் இருக்க கோவிலுக்கு செல்லும் முன்னரோ அல்லது வீட்டிற்குள் வழிபடும் முன்னரோ பாதங்களை தூய்மையாக கழுவி விடவேண்டும்.

தவறு 4
விஷ்ணு பகவானுக்கு பசு என்பது மிகவும் பிடித்தமான பொருளாகும். விஷ்ணு பகவானை வழிபடும் போதும் அவருக்கு பிரசாதம் வைத்து வழிபடும் போதும் பசு நெய்யை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற எண்ணெய்களையோ, உபயோகப்படுத்திய எண்ணெய்களையோ பயன்படுத்தக்கூடாது. இது விஷ்ணு பகவானுக்கு பிடிக்காத செயலாகும்.

தவறு 5
முன்பே கூறியது போல விஷ்ணுவிற்கு பிடித்த நிறம் மஞ்சள் நிறமாகும். எனவே விஷ்ணுவை வழிபடும் போது மஞ்சள் நிற உடையணிந்து வழிபடுவது உங்களுக்கு சிறந்த பலனை அளிக்கும். அதேசமயம் நீல நிற ஆடையணிந்து விஷ்ணுவை வழிபடுவது கோபத்தை அதிகரிக்கும்.

தவறு 6
கழிவறையை பயன்படுத்திய பிறகு விஷ்ணுவை வழிபட கூடாது, அதேபோல பிறர் விஷ்ணுவை வழிபட்டு கொண்டிருக்கும்போதும் விஷ்ணுவை வழிபடக்கூடாது. இது விஷ்ணுபகவானை அவமதிக்கும் செயலாகும்.

தவறு 7
விஷ்ணுவை வழிபடும் போது கைகளை கட்டி கொண்டு வணங்கக்கூடாது. அதேபோல தலையை கீழ்நோக்கியோ அல்லது உடல் பாகங்களை மறைத்து கொண்டோ வணங்குவது விஷ்ணுவை அவமதிப்பதாகும்.

தவறு 8
விஷ்ணு பூஜை மட்டுமின்றி எந்த கடவுளின் பூஜையாக இருந்தாலும் வெளிச்சம் இருக்கும் போது மட்டுமே செய்ய வேண்டும். இருட்டில் பூஜை செய்வதோ அல்லது சிலையை தொடுவதோ உங்களுக்கு பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தவறு 9
முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்காமல் எந்த பூஜையையும் செய்யக்கூடாது. அப்படி செய்வதால் உங்களுக்கு எந்த பலனும் கிடைக்க போவதில்லை. விநாயகரை தவிர்த்து செய்யப்படும் எந்த பூஜையும் முழுமையான பூஜையாக கடவுள்களால் ஏற்றுக்கொள்ளப்படாது.



Click it and Unblock the Notifications
