Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
வீட்டுகிட்ட ஏலியனை பார்த்தேன் - ஒரு பைத்தியம் மோடிக்கு அனுப்பிய சுவாரஸ்ய கடிதம்... இதோ உங்களுக்காக
ஏலியன்களை நேரில் பார்த்ததாக மோடிக்கு கடிதம் அனுப்பிய சுவாரஸ்யமாக கதை சொல்லியதோடு அதிலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு மோடிக்கு மின்னஞ்சல் ஒ்னறையும் புணுவில் ஒருவர் எழுதியிருக்கிறார்.
ஏலியன்கள் இருப்பதாகவும் அவர்கள் அவ்வப்போது பறக்கும் தட்டுக்களில் பறந்து கொண்டிருப்பதாகவும் வேற்றுகிரக வாசிகள் பூமிக்குள் ஊடுருவி விட்டதாகவும் அதை பார்த்ததாகவும் அவ்வப்போது வதந்திகள் பரவி வருகின்றனவே தவிர, நாம் யாரும் ஒருபோதும் ஏலியன்களைப் பார்த்ததில்லை.

நம் எல்லோருக்குமே அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் ஏலியன்களை சந்தித்து விட வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதும் உண்மை தான். ஆனால் ஒருவுர் தன் வீட்டுக்குப் பக்கத்தில் ஏலியனைப் பார்த்ததாக சொல்கிறார்.

வேற்றுகிரகவாசிகள்
ஏலியன்களைப் பற்றி நமக்கு எப்போதுமே ஒருவித ஆவலும் எதிர்பார்ப்பும் இருந்து கொண்டே இருக்கிறது. அவர்களுடைய முகம் எப்படியிருக்கும், கண்கள் எப்படியிருக்கும், எப்படி முழிப்பார்கள், அதைவிட எல்லோருக்கும் இருக்கும் மிக ஆச்சர்யமான கேள்வி என்னவென்றால் ஏலியன்கள் என்ன மொழியில் பேசுவார்கள் என்பது தான். ஆம். நினைத்துப் பார்க்கவே ஆச்சர்யமா இருக்கிறது. அப்படி ஏலியன்களை நாம் நேரில் பார்த்தால்? எப்படியிருக்கும்?
ஆமாங்க அப்படி ஒருவர் தான் ஏலியனை நேரில் பார்த்ததாகவும் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடியின் அலுவலகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். இதனால் பிரதமர் அலுவலகமே சமீபத்தில் இந்த கடிதத்தால் அல்லோகலப்பட்டிருக்கிறது.

எங்கே நடந்தது?
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கோதாரூட் என்னும் இடத்தில் வாழ்ந்து வரும் ஒருவர்தான் இப்படி ஒரு பீதியை கிளப்பியிருக்கிறார். ஆம். தான் தன்னுடைய வீட்டில் இருக்கும்போது, வீட்டுக்கு வெளியே ஏதோ இயல்புக்கு மாறான செயல்பாடுகள் நடந்ததாகவும் வெளியே வந்து ஜன்னலின் வழியே எட்டிப் பார்த்த போதுதான் தெரிந்தது அது ஏலியனாகிய வேற்றுகிரக வாசிகள் என்பது தெரிந்தது என்றும் பிரதமர் மோடிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

விசாரணை
இப்படி பிரதமர் அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலால் பிரதமர் அலுவலகமே அல்லோகலப்பட்டது. இப்படி ஒரு மின்னஞ்சலை அனுப்பியது யார் என்ற விசாரணையில் ஈடுபட்டது பிரதமர் அலுவலகம். உடனே இந்த தகவல் புணே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் புணே காவல்துறை விசாரித்து யார் என்று கண்டுபிடித்தது.

அவர் ஒரு பைத்தியம்
தன் வீட்டு அருகே ஏலியனைப் பார்த்ததாகச் மின்னஞ்சல் அனுப்பியவர் புனேவில் கோதாரூட் பகுதியில் உள்ள ஒருவர் தான் அனுப்பியிருக்கிறார் என்றும் அவர் ஒரு மனநிலை தெளிவில்லாத நபர் என்றும், அவருக்கு மூளையில் ரத்த அழுத்தக் குறைபாடு இருப்பதாகவும் தெரிய வந்தது.

வெளிச்சம்
வீட்டுக்கு வெளியே சம்பந்தமே இல்லாமல் ஏதோ ஒரு பெரிய வெளிச்சத்தைக் கண்டதாகவும் அதை பார்த்துவிட்டு தான் ஏலியன் என்று (வேற்றுகிரகவாசிகள்) என்று அவர் நம்பியிருக்கிறார் என்பது தெரிய வந்தது. இப்படி அவ்வப்போது ஏதேனும் சத்தம் வெளிச்சத்தைக் கண்டால் இ.வர் இப்படி ஏதாவது பேய், பிசாசு என்று பிதற்றிக் கொண்டிருப்பாராம்.



Click it and Unblock the Notifications
