Latest Updates
-
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம்
4 மாத கர்ப்பமாக இருந்த ஆட்டை கதறக் கதற பாலியல் வன்புணர்வு செய்த காமக்கொடூரன்... ஆடு என்னாச்சு?
இந்தியாவில் பாலியல் வன்புணர்வுகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. அதிலும் குறிப்பாக, சிறு குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் பற்றி தினம் தினம் செய்திகளில் கட்டாயப் பதிவாகிவி
இந்தியாவில் பாலியல் வன்புணர்வுகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. அதிலும் குறிப்பாக, சிறு குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் பற்றி தினம் தினம் செய்திகளில் கட்டாயப் பதிவாகிவிட்டது.
அதுமட்டும் போதாதென்று சில காமக் கொடூரன்கள் தங்களுடைய பாலியல் காமப்பசியை தீர்த்துக் கொள்ள விலங்குகளையும் கூட விட்டு வைப்பதில்லை. அப்படி ஒரு கேட்டாலே மனதைப்ப பதற வைக்கிற சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்திருக்கிறது.

கொடூர இளைஞன்
வயதானவர் கூட இல்லை. இளைஞர் ஒருவர் தன்னுடைய கொடூரக் காமப்பசிக்கு கர்ப்பமாக இருந்த ஒரு ஆட்டுக்குட்டியை பலிகடாவாக்கி, அதன் உயிரையே குடித்துவிட்ட சம்பவம் ஒன்று நம்முடைய நாட்டில் அரங்கேறியிருக்கிறது. அது அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

எங்கு நடந்தது?
இதுபோன்ற விஷயங்கள் வேறு எங்கு நடந்திருக்கும். நம்முடைய இந்தியாவில் தான். ஆம். பீகார் மாநிலம் பாட்டா மாவட்டதில் உள்ள பர்சா பஜார் என்னும் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்தது. அந்த பகுதியில் மகாஜினி தேவி என்னும் பெண் ஒருவர் ஆசை ஆசையாக ஒரு ஆட்டை வளர்த்து வந்தார். அந்த ஆடு 4 மாதம் கர்ப்பமாக இருந்தது.

வன்புணர்வு
அப்படி 4 மாத கர்ப்பமாக இருந்த அந்த ஆட்டுக்குட்டியை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞன் மூக்குப் பிடிக்கக் குடித்துவிட்டு, அந்த ஆட்டைக் கதறக் கதற பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார். அப்படி செய்ததில் அந்த ஆடு பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதைக்கண்ட அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர், சிறுமியர்கள் ஊர் மக்களிடம் போய் சொல்லிவிட்டார்கள். உடனு ஊர் மக்கள் அந்த இடத்தில் கூடி, அந்த இளைஞனை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தார்கள்.

போலிஸ் வழக்குப் பதிவு
மகாஜினி தேவி போலீசில் புகார் கொடுத்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டை பாலியல் வன்புணர்வு செய்து, ஆடு பலியாவதற்கான காரணகர்த்தாவான அந்த இளைஞனை கைது செய்தது.

மதுவிலக்கும் மர்மமும்
ஆட்டை வன்புணர்வு செய்த இந்த இளைஞன் தினசரி கூலி வேலை செய்பவர். வன்புணர்வு செய்த அந்த இளைஞன் குடி போதையில் இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதிலென்ன மர்மம் என்றால், கடந்த மூன்றாண்டு காலமாக பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த இளைஞன் எப்படி மது அருந்தினான் என்பதே போலீசாருக்குப் பெரிய சவாலாக மாறிவிட்டது.

ஆட்டின் உடல்
ஒரு வாய் இல்லா ஜீவனான ஆட்டுக்குட்டியை பாலியல் வன்புணர்வு செய்ததால் முறையற்ற பாலியல் உறவு மற்றும் விலங்கை கொலை செய்தமை ஆகிய பிரிவுகளின் கீழ் அந்த காமக்கொடூரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இறந்து போன ஆட்டின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அந்த ஆட்டை வளர்த்த பெண்ணின் அழுகையை பார்த்த ஓர் மக்கள் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

கூட்டுப் பாலியல்
இதேபோன்று கடந்த ஆண்டு நிறைமாத கர்ப்பத்தில் இருந்த ஆட்டை எட்டு போர் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தை அடுத்து இந்த சம்பவம் பீகாரில் பெரும் அதிர்வலையை உருவாக்கியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.



Click it and Unblock the Notifications

