Latest Updates
-
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா? -
வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த செடிகள் போதுமா? பணவரவை அள்ளித்தரும் வாஸ்து ரகசியம் இதோ! -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
கோபம் வந்ததால் 2 கிலோ கல்லும் பாட்டில் மூடியும் சாப்பிட்ட விநோத மனிதர்... இப்படியுமா யோசிப்பாங்க?
தனக்கு பெருங்கோபம் வரும்போதெல்லாம் கற்களை எடுத்து சாப்பிட்டு 2 கிலோ சேர்த்து வைத்த விநோத மனிதரைப் பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம். அதுபற்றிய முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.
பல்வேறு கொடூரமான கதைகளையும் மனிதர்களையும் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்படியுமா மனுஷன் யோசிப்பான் என்று நாம் வாய் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவுக்கு ஒரு விநோதமான மனிதர் யோசித்திருக்கிறார்.

அவர் என்ன செய்தார் தெரியுமா? எப்போதெல்லாம் அதிகமாக கோபம் வருகிறதோ அந்த சமயங்களில் அதற்கான மருந்தாக கற்களையும் பாட்டில் மூடிகளையும் காயின்களையும் சாப்பிட்டு வந்திருக்கிறார். அவரைப் பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

குலைநடுங்க வைக்கும் செயல்
எப்போதெல்லாம் தனக்குப் பெருங்கோபம் உண்டாகிறதோ அந்த சமயங்களில் கொஞ்சம் கொஞ்சமாக கல், பாட்டில் மூடிகள், காசுகள் ஆகியவற்றை விழுங்கியிருக்கிறார். இதை வேறு யாரிடமும் சொல்லாமலே இருந்திருக்கிறார். இப்படி சாப்பிடுவதனால் அந்த தன்னுடைய பெருங்கோபம் தீர்ந்து போவதாக கருதியிருக்கிறார்.

எங்கே நடந்தது?
எல்லா ஊர்களிலும் சில முட்டாள்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அதிலும் சிலரைப் பார்த்து சிரித்தும் கோபப்பட்டும் கூட இருப்போம். ஹலோ நீங்களும் கோவப்பட்டு இந்த ஆளு மாதிரி கோபம் தீர கல்லை சாப்பிட்டுறாதீங்க. இவ நம்ம ஊர்க்காரர் கிடையாது. இந்த விநோதமான மனிதர் யார் என்று பார்த்தால் இவர் தென்கொரியாவைச் சேர்ந்தவர்.

வயிற்று வலி
இவர் அவ்வப்போது சாப்பிட்ட கல், மூடிகள் எல்லாம் அவ்வப்போது வெளியேறிருக்கும் என்று நினைத்திருப்பார் போல. திடீரென ஒரு நாள் அவருக்கு தீராத தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டிருக்கிறது. உடனே தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி, கதறியிருக்கிறார்.

மருத்துவப் பரிசோதனை
மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது, இவர் மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதன்பின் அவருடைய அடி வயிற்றில் தொட்டுப் பார்த்தபோது சிறிய அளவில் ஏதோ கற்கள் போல தென்பட்டிருக்கிறது. அதன்பின் ஸ்கேன் செய்து பார்த்ததில் தான் பேரதிர்ச்சி மருத்துவர்களுக்குக் காத்திருந்தது.

அவர் சொன்ன காரணம்
நீங்கள் கற்களை ஏதாவது எப்போதாவது விழுங்கினீர்களா என்று மருத்துவர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் தான் மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எப்போதெல்லாம் தனக்கு கோபம் வருகிறதோ அப்போதெல்லாம் அதை அடக்குவதற்காக அருகில் இருக்கும் கல், பாட்டில் மூடி, அல்லது தன்னுடைய பாக்கெட்டில் இருந்து ஏதேனும் காயின்களை எடுத்து வாயில் போட்டுக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார். எவ்வளவு முறை சாப்பிட்டார் என்பது அவருக்கே கணக்கு தெரியவில்லை.

அறுவை சிகிச்சை
உடனே இதை தாமதித்தால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று உணர்ந்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்தார்கள். இது மிகவும் சவாலான சிகிச்சையாகவே அவர்களுக்கு இருந்தது. கற்கள் எங்கெல்லாம் சென்று அடைந்திருக்கின்றன என்பதே குழப்பமாக இருந்தது. கேஸ்டிரோதெரபி மூலம் பொருளை வெளியேற்ற முடிவு செய்தனர்.
வெவ்வேறு அறுவை சிகிச்சை வழிமுறைகளைப் பயன்படுத்தி, வாய்வழியாக மிக மெல்லிய டியூபை வயிற்றுக்குள் செலுத்தி உடலின் உள்ளுறுப்புக்களில் ஆராயத் தொடங்கினார்கள்.

எவ்வளவு கிடைத்தது?
அறுவை சிகிச்சையின இறுதியில் மருத்துவர்கள் வெளியே எடுத்த பொருள்களைப் பார்த்து அவர்களே அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார்கள். ஏனென்றால் கிட்டதட்ட 2 கிலோவுக்கு மேல் கற்களும் காயின் மற்றும் பாட்டில் மூடிகளும் வெளியே எடுக்கப்பட்டிருந்தன.

பிழைத்தாரா?
இவ்வளவு சோதனைகளையும் கடந்து இந்த விநோத விசித்திர மனிதனின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லாமல் மிக வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து அவரை காப்பாற்றியிருக்கிறார்கள். புண்கள் ஆறுவதற்காக ஒன்பது நாட்கள் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு முழுமையாக குணமடைந்ததும் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கோபம் வருவதெல்லாம் சரி தான். அதற்காக இப்படியெல்லாம் ஒரு மனிதன் யோசிப்பான்.



Click it and Unblock the Notifications