Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் தெரியுமா?
பகவத் கீதையில் கூறியுள்ளபடி இந்த பிரபஞ்சமே அவருள்தான் இருக்கிறது. அவரின் அடையாளங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியை வழங்கக்கூடியதாகும்.
இந்து கடவுள்களில் மிகவும் முக்கியமானவர் கிருஷ்ணர்தான். வாழ்க்கையில் அன்பு மற்றும் பாவபுண்ணியங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் சிறந்த ஆசானாக கிருஷ்ணர் கூறப்படுகிறார். இவரின் போதனைகள் அடங்கிய பகவத்கீதை ஒருவரின் வாழ்க்கையை நல்வழியில் செலுத்தக்கூடியதாகும்.

பகவத் கீதையில் கூறியுள்ளபடி இந்த பிரபஞ்சமே அவருள்தான் இருக்கிறது. அவரின் அடையாளங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியை வழங்கக்கூடியதாகும். சிலசமயம் அவரின் அடையாளங்கள் நமது உடலில் இருக்க வாய்ப்புள்ளது, அவ்வாறு இருப்பின் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்கும். இந்த பதிவில் உங்கள் உடலில் இருக்கக்கூடிய கிருஷ்ணரின் அடையாளங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பிறை நிலா
பகவான் கிருஷ்ணர் பிறை நிலவு அடையாளத்தை தன் பாதத்தில் வைத்திருந்தார். சிவபெருமானும் தனது நெற்றியில் இந்த அடையாளத்தை கொண்டிருந்தார். ஒருவேளை உங்கள் உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களின் எதிர்காலம் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

மீன் சின்னம்
கிருஷ்ணருக்கு உள்ளங்கையிலும்,பாதத்திலும் மீன் அடையாளம் இருந்தது. மீன் என்பது விஷ்ணுவின் மறுபிறவி என்று கூறப்படுகிறது. இது உங்கள் உடலில் இருந்தால் உங்கள் வாழ்க்கை கௌரவம் மிக்கதாக இருக்கும்.

சங்கு
கிருஷ்ணரின் அடையாளங்களில் சங்கும் ஒன்றாகும். அவர் கையில் மட்டுமின்றி அவர் உடலிலும் சங்கு இருந்தது. இது உங்கள் உடலில் இருந்தால் உங்களுக்கு செழிப்பான வாழ்க்கை காத்திருக்கிறது.

வில் மற்றும் அம்பு
உங்கள் உடலில் வில் மற்றும் அம்பு போன்ற அடையாளங்கள் இருத்தல் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திப்பீர்கள் ஆனால் இறுதியில் வெற்றி உங்களுடையதாய் இருக்கும். எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் நீங்கள் நினைத்ததை அடைந்தே தீருவீர்கள்.

முக்கோணம்
உங்கள் உடலில் முக்கோண சின்னம் இருந்தால் உங்கள் வாழ்க்கை சுவாரசியங்கள் நிறைந்தகாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் பல வித்தியாசமான அனுபவங்களை பெறுவீர்கள். செல்வத்திற்கு எந்த குறையும் இல்லாமல் வாழ்வீர்கள். மேலும் இந்த சின்னம் இருப்பவர்கள் அனைவரையும் வசீகரிப்பவராகவும், அனைவருக்கும் பிடித்தவராகவும் இருப்பார்கள்.

சக்கரம்
உங்கள் உடலில் சக்கர சின்னம் இருந்தால் நீங்கள் நீண்ட மற்றும் பெரிய பயணத்தை மேற்கொள்வீர்கள். அவர்கள் பல பயணங்களை மேற்கொண்டு இறுதியில் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவார்கள். மேலும் இவர்கள் அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கை புஜம்
கை புஜத்தில் மச்சம் இருப்பவர்கள் அமைதியானவர்களாகவும், கண்ணியமானவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமனதாக இருக்கும்.

முதுகு
முதுகில் மச்சம் இருப்பவர்கள் நம்பத்தகுதியற்றவர்கள் என்று சாமுத்ரிகா சாஸ்திரம் கூறுகிறது. அவர்களுடன் பழகும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

கன்னம்
இடது அல்லது வலது கன்னங்களில் மச்சம் இருப்பவர்கள் ஆழமான சிந்தனையாளர்களாக இருப்பார்கள். இவர்கள் உலகத்துடன் தன்னை தொடர்புபடுத்திக்கொள்வதில் ஆர்வமற்றவர்களாக இருப்பார்கள்.

காது
காதில் மச்சம் இருப்பது மிகவும் அபூர்வம் மற்றும் அதிர்ஷ்டமாகும். காதில் மச்சம் இருப்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் ஆசைப்படும் அனைத்தும் எந்த சிரமமும் இன்றி எளிதில் கிடைத்துவிடும்.

கண்கள்
கண்களில் மச்சம் இருப்பவர்கள் மிகவும் நேர்மையானவராக இருப்பார்கள். மற்றவர்களிடம் எதையும் மறைக்காத இவர்கள் நம்புவதற்கு பூரண தகுதி உடையவர்கள் ஆவர்.



Click it and Unblock the Notifications