Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...
நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை அவர்களுக்கு விளக்குவதை காட்டிலும் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நமது குணத்தை பற்றி நமக்கே பல குழப்பங்கள் இருக்கும்.
நமது குணம் என்ன, நாம் எப்படிப்பட்டவர்கள் என்று அனைவரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்பவே முடிவு செய்கின்றனர். நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை அவர்களுக்கு விளக்குவதை காட்டிலும் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நமது குணத்தை பற்றி நமக்கே பல குழப்பங்கள் இருக்கும்.

உங்கள் குணத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக நீங்கள் பல சோதனைகளை செய்து பார்த்திருக்கலாம். ஆனால் அதில் பெரும்பாலனவை நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொருளை வைத்து உங்களை பற்றி கூறுவதாக இருக்குமே தவிர எதுவும் உங்கள் அறிவை சோதிப்பதாக இருக்காது. இந்த பதிவில் இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு நீங்கள் கூறும் பதிலை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

4 வகையான நபர்கள்
நீங்கள் மற்ற சோதனைகளில் கண்டுபிடிக்கும் உங்களுடைய குணம் என்பது பெரும்பாலும் தவறாகத்தான் இருக்கும். ஆனால் உளவியல்ரீதியாக பார்க்கும்போது இந்த உலகில் மொத்தம் 4 வகையான மனிதர்கள்தான் இருக்கின்றனர். அது அறிவார்ந்தவர்கள், உள்நோக்கிய மனப்பான்மை உள்ளவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள். பட சோதனைகளை போல அல்லாமல் உங்கள் ஆளுமையை உணர்த்தும் கேள்வி பதில்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

கேள்வி 1
நீங்கள் மற்றவர்களுக்கு உங்களை அறிமுகப்படுத்தி கொள்வதற்கு சிரமப்படுகிறீர்களா?
1. ஆம் 2. இல்லை

கேள்வி 2
நீங்கள் உங்கள் சிந்தனைகளில் ரொம்ப மூழ்கிவிடுகிறீர்களா உங்கள் சுற்றத்தை மறந்து விடுகிறீர்களா?
1. ஆம் 2.இல்லை

கேள்வி 3
உங்களுக்கு வரும் மெசேஜ்களுக்கும், மெயில்களுக்கும் உடனடியாக பதில் அனுப்பிவிடுகிறீர்களா?
1. ஆம் 2. இல்லை

கேள்வி 4
எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் நீங்கள் கூலாகவும், கவனமாகவும் இருக்கிறீர்களா?
1. ஆம் 2. இல்லை

கேள்வி 5
நீங்கள் எப்பொழுதும் உரையாடலை நீங்களாகவே தொடங்க மாட்டிர்கள்.
1. ஆம் 2. இல்லை

கேள்வி 6
ஆர்வத்தால் நீங்கள் எப்போதாவது வெளிப்படையான காரியங்களை செய்வீர்களா?
1. ஆம் 2. இல்லை

கேள்வி 7
மற்றவர்களை விட எப்பொழுதும் உங்களை மேலானவர்களாக நினைக்கிறீர்களா?
1. ஆம் 2. இல்லை

கேள்வி 8
ஒழுங்காக சீராக இருப்பது சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வது உங்களுக்கு கடினமாக இருக்கிறதா?
1. ஆம் 2. இல்லை

கேள்வி 9
நீங்கள் அதிக ஆற்றலும், சுயஉந்துதலும் உள்ளவர்களாக இருக்கிறீர்களா?
1. ஆம் 2. இல்லை

கேள்வி 10
மற்றவர்களை காயப்படுத்துவதை காட்டிலும் விவாதத்தில் தோற்பதே உங்களுக்கு சிறந்ததாக தோன்றுகிறதா?
1. ஆம் 2. இல்லை

அதிக ஆம் - அறிவார்ந்தவர்கள்
உங்கள் பதில்களில் அதிக ஆம் இருந்தால் நீங்கள் அனுபவத்தை விட அதிக அறிவால் வழிநடத்தப்படுகிறீர்கள், மேலும் உணர்ச்சிகள் உங்களை பாதிக்காது. உங்கள் சிந்தனைகளும், செயல்முறைகளும் தர்க்கரீதியாகவும், அறிவார்ந்த செயல்களாலும் வழிநடத்தப்படும்.

அதிக இல்லை - உள்நோக்கிய மனப்பான்மை
உங்களுடைய மனப்பான்மையால் நீங்கள் அவ்வப்போது பெரிய குழுக்களை தவிர்ப்பீர்கள். ஆனால் இதனை எப்பொழுதும் செய்யாதீர்கள், நீங்கள் எப்பொழுது ஆற்றலை அதிகரிக்க விரும்புகிறீர்களோ அப்பொழுது மட்டும் செய்யுங்கள்.

அதிக ஆம் குறைவான இல்லை - வெளிப்படையானவர்கள்
நீங்கள் எப்பொழுதும் வெளிப்படையாக நடந்து கொள்வீர்கள், நட்பாக இருப்பீர்கள் உங்களை சுற்றியிருப்பவர்கள்தான் உங்கள் ஆற்றலுக்கான ஆதாரங்கள். சொல்லப்போனால் உங்கள் நண்பர்கள் கலகலப்பிற்காக உங்களின் வருகைக்காக காத்திருப்பார்கள்.

அதிக இல்லை குறைவான ஆம் - உணர்ச்சிவப்பட கூடியவர்கள்
நீங்கள் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள், உங்களின் பலமும், பலவீனமும் அதுதான். இவர்கள் அமைதியானவர்களாக இருப்பார்கள், மூளை சொல்வதை விட இதயம் சொல்வதை கேட்டு நடப்பார்கள்.



Click it and Unblock the Notifications
