Latest Updates
-
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா? -
வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த செடிகள் போதுமா? பணவரவை அள்ளித்தரும் வாஸ்து ரகசியம் இதோ! -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
மசாலா கோதுமை தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவருமாம் -
ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: மே 10 முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
வெயிலால் எரியும் சருமத்தை கூலாக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் போடுங்க.. -
இன்ஸ்டாகிராம் 'போலி லவ் குரு' கும்பல் வேட்டை: தம்பதிகளுக்கு போலீஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை!
உங்கள் ராசிப்படி உங்களுடைய காதல் வாழ்க்கை எப்படி, யாரால் அழியப்போகிறது தெரியுமா?
நமது சுகதுக்கங்களை சமமாக பகிர்ந்து கொள்ள அனைவருக்குமே ஒரு துணை அவசியம். வாழ்க்கையை அழகாக்கும் துணை அமைவது என்பது வரமாகும்.
நமது வாழ்க்கையை தீர்மானிப்பதில் நாம் பிறக்கும் நொடி முதலே நமது பிறந்த ராசி முக்கிய இடத்தை வகிக்க தொடங்கிவிடுகிறது. நமது வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஏதாவது ஒருவகையில் நம்முடைய பிறந்த ராசி காரணமாக இருக்கும் என்று நம் முன்னோர்கள் வகுத்த ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அனைவருக்குமே வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு தருணம் என்றால் அது காதல் ஏற்படும் தருணம்தான்.

நமது சுகதுக்கங்களை சமமாக பகிர்ந்து கொள்ள அனைவருக்குமே ஒரு துணை அவசியம். வாழ்க்கையை அழகாக்கும் துணை அமைவது என்பது வரமாகும். அப்படி நம் வாழ்க்கையை அழகாக்கும் துணையை கடவுள் கண்டிப்பாக நமக்காக அனுப்புவார். ஆனால் நம்மிடம் இருக்கும் சில குணங்களாலேயே அந்த துணையை நாம் இழக்க நேரிடும். இந்த பதிவில் ஒவ்வொரு ராசியினரும் அவர்களின் காதல் வாழ்க்கையை எப்படி இழப்பார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்
உங்கள் காதல் வாழ்க்கையை நீங்கள் தவறான நபர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் சிதைத்து கொள்வீர்கள். நீங்கள் அவர்களுக்காக எல்லாவற்றையும் செய்யும்போது அவர்களுக்கு நீங்கள் மிகவும் அவசியம் என்று எண்ணுவீர்கள். ஆனால் உண்மையில் அவர்கள் உங்களை பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. உங்களை சுயஅழிவிற்கு நீங்கள்தான் காரணம்.

ரிஷபம்
நீங்கள் எந்த பிரச்சினையிலும் சிக்கி கொள்ளக்கூடாது என்று பாதுகாப்பாக இருப்பதே உங்களின் காதல் வாழ்க்கையை அழித்துவிடும். உங்களின் கடந்த கால நிராகரிப்புகளால் நீங்கள் எப்பொழுதும் எந்தவொரு ரிஸ்க்கையும் எதிர்கொள்ள தயங்குகிறீர்கள். உங்களுக்கு பழக எளிதாக இருப்பவர்களிடம் மட்டுமே நீங்கள் பழக முயல்வீர்கள். ஆனால் உங்களுக்கு தேவை எளிதான உறவு அல்ல உங்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் உறவுதான்.

மிதுனம்
நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பது பற்றியும், உங்களின் உண்மையான தேவை என்பது பற்றியும் உங்களுக்கு நீங்களே பொய் கூறி கொள்வதால் நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையை இழக்கிறீர்கள். சரியான முடிவு எடுக்கும் திறன் இல்லாததால் நீங்கள் பல நல்ல வாய்ப்புகளை இழந்து விடுகிறீர்கள். பெரும்பாலும் தவறானவற்றை தேர்ந்தெடுத்து விடுவோமோ என்ற பயம்தான் உங்களின் காதல் வாழ்க்கையை அழிக்கிறது.

கடகம்
உங்களின் தேவை என்ன என்பதை உங்கள் துணையிடம் கேட்காமல் இருப்பதாலேயே நீங்கள் உங்கள் காதலை அழித்து கொள்கிறீர்கள். அழகான உறவின் அடையாளமே சமமாக கொடுத்து சமமாக வாங்கி கொள்வதுதான், ஆனால் நீங்கள் எப்பொழுதும் கொடுப்பதை மட்டுமே செய்துவிட்டு என்ன வேண்டும் என்பதை கேட்காமல் இருப்பது உங்கள் துணையை சங்கடப்படுத்தும். சுயநலமாக இருப்பது எப்படி என்று நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

சிம்மம்
உங்களின் உணர்ச்சிகளை மறைத்து கொள்வதாலேயே நீங்கள் உங்களுடைய காதல் வாழ்க்கையை இழப்பீர்கள். உங்கள் உணர்ச்சிகள் உங்கள் பலவீனப்படுத்துவதாக நீங்கள் நினைக்கிறீர்கள். அழுவதும், உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதும் சாதாரணமானவைதான் என்று உங்களுக்கு புரிவதில்லை. உங்களுக்கு இவற்றை வெளிப்படுத்தவும் தெரிவதில்லை. எனவே அதிக உணர்ச்சிவசப்படுவபர்கள் மீது நீங்கள் எளிதில் ஈர்ப்பு கொள்கிறீர்கள். ஆனால் அவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் திறன் உங்களிடம் இருக்காது.

கன்னி
நீங்கள் உங்களுக்கு ஏற்ற பொருத்தமான துணையை தேர்ந்தெடுப்பதாலேயே உங்கள் காதல் வாழ்க்கையை இழக்கிறீர்கள். யாரும் உங்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலாது என்னும் எண்ணம் உங்கள் மூளைக்குள் இருக்கும். ஒருவர் உங்கள் மீதுள்ள காதலை எவ்வளவுதான் முயன்று வெளிப்படுத்தினாலும் உங்களுக்கு அதில் திருப்தி ஏற்படாது. முதலில் தன்னிறைவு அடைவது எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள், பிறகு மற்றவர்கள் உங்களை திருப்திப்படுத்துவதை பற்றி யோசிக்கலாம்.

துலாம்
உங்களுடைய காதல் அழிய உங்களுடைய முட்டாள்த்தனம்தான் காரணம். ஏனெனில் ஒருவரின் உண்மை முகம் என்னவென்று தெரியாமலேயே அவர்களை காதலிக்க தொடங்கிவீர்கள். அனைவருக்குள்ளும் நல்ல குணங்கள் இருக்க வேண்டும் என்று நீங்கள் நம்ப வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் விரும்பும் அனைவரும் நல்லவர்கள் அல்ல என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் நேசிப்பவர்கள் நல்லவர்கள் அல்ல என்று உங்களுக்கு தெரிந்தாலும் அது உங்கள் கண்களுக்கு தெரியாது.

விருச்சிகம்
உங்களின் காதல் வாழ்க்கை பாழாக காரணம் நீங்கள் யாரையும் உங்களை நெருங்கி வர அனுமதிக்காதுதான். நீங்கள் நம்பும் ஒரே ஆள் நீங்கள் மட்டும்தான், இந்த தன்னம்பிக்கை இருக்க வேண்டியதுதான், ஆனால் நீங்கள் மட்டுமே உங்களுக்கு துணையாக இருக்க முடியாது என்ற உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் உங்கள் மீது காட்டும் அன்பை அவர்களின் பலவீனம் என்று நினைப்பதை முதலில் நிறுத்துங்கள்.

தனுசு
நீங்கள் மட்டுமே எப்போதும் வலிமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் உங்களின் எண்ணம்தான் உங்களின் காதல் வாழ்க்கையை சிதைக்கிறது. உங்களின் வெளிப்புற தோற்றம் மட்டுமல்ல, உங்களின் இதயமும் பலபேரை ஈர்க்கும். உங்களுக்கு நீங்கள் மட்டுமே உதவி செய்து கொள்ள முடியும் என்று எண்ணாதீர்கள், சிலசமயம் மற்றவர்களின் உதவியும் உங்களுக்கு தேவைப்படும். அதற்குத்தான் கண்டிப்பாக துணை இருக்க வேண்டும். எனவே தனியாக இருந்தால் மட்டும்தான் வலிமையாக இருக்க முடியும் என்ற எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள். வாழ்க்கை அழகாக இருக்கும்.

மகரம்
மற்றவர்கள் தன்னை பற்றியும், தன் துணையை பற்றியும் என்ன நினைப்பார்கள் என்று அதிகமாக சிந்திப்பதே உங்களின் காதல் வாழ்க்கையை சிதைத்துவிடும். நீங்களும், உங்கள் துணையும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அதுதான் உங்களின் அடிப்படை தேவை.

கும்பம்
உங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் இதயத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப உங்கள் துணையை பயன்படுத்துவதுதான் உங்களின் காதல் வாழ்க்கை அழிய காரணம். இப்படி செய்வது ஒருபோதும் உங்களுக்கு திருப்தியை தராது. தொடர்ந்து ஆட்களை மாற்றிக்கொண்டே இருந்தாலும், எத்தனை பேர் உங்கள் மீது அன்பு கொண்டு உங்களை விரும்பினாலும் உங்களுக்கு போதாது.

மீனம்
உங்களை ஏற்கனவே காயப்படுத்தியவர்கள் போல் உள்ளவர்கள் பின்னரே மீண்டும் மீண்டும் செல்வதன் மூலம் நீங்கள் உங்களுடைய காதல் வாழ்க்கையை சிதைத்து கொள்கிறீர்கள். ஒரே காரியத்தை திரும்ப திரும்ப செய்து வேறு மாதிரியான முடிவுகளை எதிர்ப்பார்த்தால் எப்படி நடக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர்தான் உங்களின் தோல்விக்கு முக்கிய காரணம். ஏனெனில் நீங்கள் தேர்ந்தேடுப்பவரை விட சிறந்தவரை பெரும் தகுதி உள்ளது உங்களிடம்.



Click it and Unblock the Notifications