உங்கள் ஜாதகத்தில் ஒருவேளை இந்த பிரச்சினை இருந்தால் உங்களை யாராலும் காப்பாற்ற இயலாது தெரியுமா?

செவ்வாய் தோஷத்தை விட உங்கள் வாழ்வில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒரு தோஷம் என்றால் அது காலசர்ப்ப தோஷமாகும்.

இந்தியாவில் ஜாதகம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. சொல்லப்போனால் நமது முந்தைய தலைமுறையினரின் தலையெழுத்தை தீர்மானித்ததே ஜாதகம்தான் என்று சொல்லலாம். இப்போதுள்ள தலைமுறையினரின் விதியையும் ஜாதகம் தீர்மானித்து கொண்டுதான் இருக்கிறது.

நமது ஜாதகத்தில் இருக்கும் இருக்கும் சில தோஷங்களும், குறைபாடுகளும் நமது வாழ்க்கையை இறுதிவரை துன்பங்கள் நிறைந்ததாக மாற்றும்.

How Does Kaalsarp Yoh Impact in Your Life?

தோஷங்கள் என்று வரும்போது அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது செவ்வாய் தோஷம்தான். ஆனால் செவ்வாய் தோஷத்தை விட உங்கள் வாழ்வில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒரு தோஷம் என்றால் அது காலசர்ப்ப தோஷமாகும். உங்கள் ஜாதகத்தில் ஒருவேளை இந்த தோஷம் இருந்தால் உங்கள் வாழ்க்கை முழுவதும் துரதிர்ஷ்டமும், போராட்டமும் நிறைந்திருக்கும். இந்த பதிவில் காலசர்ப்ப தோஷம் ஏன் ஏற்படுகிறது, அதன் விளைவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கால = மரணம்

கால = மரணம்

இந்து மதத்தில் கால என்பதன் பொருள் மரணமாகும், சர்ப்ப என்பதன் பொருள் பாம்பு ஆகும். தனித்தனியாகவே ஆபத்தான இந்த இரண்டும் ஒன்றாக இணையும்போது அதன் பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும். ஒருவரின் ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் இருந்தால் அது அவர்களின் வாழ்வில் பேரழிவை உண்டாக்கும் என கூறப்படுகிறது.

ராகு - கேதுவின் பிறப்பு

ராகு - கேதுவின் பிறப்பு

பார்க்கடலை கடைந்த போது மோகினி உருவில் இருந்த விஷ்ன்னுவால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட ராட்சஷன்தான் ஸ்வர்பானு. ஆனால் அமிர்தத்தின் ஒரு துளியை அருந்தி இருந்ததால் அவனின் உயிர் பிரியாமல் தலையும், உடலும் மிதந்தது. துண்டிக்கப்பட்ட அவனின் தலை ராகு எனவும், உடல் கேது எனவும் அவை பாம்பின் உடலுடன் இணைந்தவுடன் அழைக்கப்பட்டது. இருப்பினும் ஜோதிட சாஸ்திரத்தின் படி ராகுவும், கேதுவும் பாம்பாகவே கருதப்படுகிறார்கள்.

காலசர்ப்ப தோஷம்

காலசர்ப்ப தோஷம்

இந்த இரண்டு கிரகத்திற்கு இடையே உங்கள் ஜாதகத்தில் உள்ள மற்ற கிரகங்கள் வீழ்ந்து விட்டால் உங்கள் ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஜாதகத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆபத்துக்கள் நிறைந்த சூழ்நிலையில்தான் வாழ்வார்கள். வாழ்நாள் முழுவதும் இவர்கள் உயிர் பயத்திலேயே இவர்கள் வாழவேண்டி வரும்.

ஏன் ஆபத்தானது?

ஏன் ஆபத்தானது?

செவ்வாய் தோஷத்தை விட காலசர்ப்ப தோஷம் அதிக சோதனைகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தோஷமாகும். காலசர்ப்ப தோஷம் இருக்கும் ஜாதகம் மிகவும் துரதிர்ஷ்டமான ஜாதகமாக கருதப்படுகிறது. இந்த தோஷத்தால் வாழ்க்கை முழுவதும் துரதிர்ஷ்டம் மற்றும் கெட்ட அனுபவங்கள் நிறைந்திருக்கும். போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையையே இவர்களால் வாழமுடியும். கெட்ட நேரத்தை ஈர்க்கும் ஜாதகமாக இவர்களின் ஜாதகம் இருக்கும். இவர்கள் நாக பஞ்சமி அன்று தங்கள் வீட்டில் கால சர்ப்ப இயந்திரத்தை வைத்து பூஜை செய்ய வேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

காலசர்ப்ப இயந்திரம்

காலசர்ப்ப இயந்திரம்

இந்த எந்திரம் வீட்டில் இருப்பது கால சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து பாதுகாப்பை மட்டும் வழங்காமல் உங்கள் வீட்டிற்குள் நேர்மறை சக்திகளையும் ஈர்க்கும். காலசர்ப்ப தோஷத்தால் ஏற்படும் தடைகளை விலக்கி உங்களை வெற்றியடைய வைக்க இந்த எந்திரம் அவசியமாகும்.

காலசர்ப்ப தோஷம் எப்படி உருவாகிறது?

காலசர்ப்ப தோஷம் எப்படி உருவாகிறது?

வேதங்களில் கூறப்பட்டுள்ள குறிப்புகளின் படி ராகு, கேது தவிர்த்து மீதமுள்ள ஏழு கிரகங்களும் இந்த இரண்டு கிரகங்களுக்குள் இருக்கும்போது அதாவது நிலாவின் வடக்கு மற்றும் தெற்கு முனைகளுக்கு இடையில் அமைவது காலசர்ப்ப தோஷம் என்று அழைக்கப்படுகிறது. தொடர்ச்சியான கிரக நிலைகளின் மாறுபாட்டால் ராகு மற்றும் கேதுவின் இடங்களும் மாறிக்கொண்டே இருக்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு ஏற்படும் துன்பத்தின் அளவும் மாறுபடும். ராகு மற்றும் கேது இருக்கும் இடத்தை பொறுத்து கால சர்ப்ப தோஷம் மொத்தம் 7 வகைப்படும்.

அனந்த காலசர்ப்பம்

அனந்த காலசர்ப்பம்

இந்த நிலை ராகு லக்கினத்தில், கேது 7 வது வீட்டிலும் இருப்பதாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் செய்யும் சூழ்ச்சிகளால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தவறான திருமணம், சொத்துக்களில் இழப்பு போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

குளிகை காலசர்ப்பம்

குளிகை காலசர்ப்பம்

ராகு 2 வது இடத்திலும் கேது 8 வது இடத்திலும் இருப்பதாகும். இதனால் பாதிக்கப்பட்ட ஆண்/பெண் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பணக்கஷ்டம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.

வாசுகி காலசர்ப்பம்

வாசுகி காலசர்ப்பம்

ராகு 3 வது இடத்திலும் கேது 9 வது இடத்திலும் இருக்கும் நிலை இதுவாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உடன்பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களால் அதிக துன்பங்களுக்கு ஆளாவார்கள். நீதிமன்ற தீர்ப்புகள் இவர்களுக்கு ஒருபோதும் சாதகமாக இருக்காது.

சங்பால் காலசர்ப்பம்

சங்பால் காலசர்ப்பம்

ராகு 4 வது இடத்திலும் கேது 10 வது இடத்திலும் இருக்கும் போது ஏற்படுவதாகும். இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு அசையா சொத்துக்களில் தீரா பிரச்சினைகள் ஏற்படும். அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து கொள்ள போதுமான பணமும் அவர்களுக்கு கிடைக்காது.

பத்ம காலசர்ப்பம்

பத்ம காலசர்ப்பம்

ராகு 5 வது இடத்திலும் கேது 11 வது இடத்திலும் இருக்கும் ஒரு நிலையாகும். இவர்களுக்கு சந்ததி தொடர்பான பிரச்சினைகள் எழும். இவர்கள் லாட்டரி, பங்குச்சந்தை போன்ற வேலைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

மஹாபத்ம காலசர்ப்பம்

மஹாபத்ம காலசர்ப்பம்

ராகு 6 வது இடத்திலும் கேது 12 வது இடத்திலும் இருப்பதால் ஏற்படும் நிலையாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் எப்போதும் உறவுகளில் தோற்றுகொண்டே இருப்பார்கள். மனைவியின் நம்பிக்கையை பெறுவது என்பது இவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும்.

தக்ஷக காலசர்ப்பம்

தக்ஷக காலசர்ப்பம்

ராகு 7 வது இடத்திலும் கேது 1 வது இடத்திலும் இருக்கும் போது ஏற்படுவது இது. இந்த பாதிப்பு உள்ளவர்களை உறவுகள், தொழில், வாழ்க்கை என அனைத்திலும் தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும். இவர்களுக்குள் தற்கொலை எண்ணம் அடிக்கடி எழும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion