Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
வீட்டில் இந்த பொருட்கள் உங்கள் வீட்டிற்கு தீயசக்திகளை அழைத்து வருவதோடு உங்கள் ஆயுளையும் குறைக்கும்..
அழகுக்காகவோ அல்லது சென்டிமென்ட்டுக்காகவோ நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் சில பொருட்கள் உங்கள் வாழ்வில் பெரிய துரதிர்ஷ்டத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும்.
வாழ்க்கையில் அதிர்ஷ்டம் வருவதும் சரி, துரதிர்ஷ்டம் வருவதும் சரி உங்கள் விதியின் கைகளில் பாதி இருந்தால் உங்கள் கைகளில் பாதி இருக்கிறது. ஏனெனில் நீங்கள் தெரிந்தோ, தெரியமா, தெரியாமலோ செய்யும் சில தவறுகள் உங்கள் வாழ்க்கையில் தீராத துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் செயல் என்னும்போது அதில் ,முதலிடத்தில் இருப்பது வீட்டில் இருக்கும் பொருட்கள்தான். அழகுக்காகவோ அல்லது சென்டிமென்ட்டுக்காகவோ நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் சில பொருட்கள் உங்கள் வாழ்வில் பெரிய துரதிர்ஷ்டத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும். இந்த பதிவில் உலகின் பல கலாச்சாரங்களில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் வீட்டில் இருக்கும் பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

ஆடும் நாற்காலி
உங்கள் வீட்டில் இருக்கும் பழைய நாற்காலிகள் திடீரென அசைந்தால் உங்களுக்கு என்ன தோன்றும், அதற்கான காரணம் தெரியும் வரை உங்களால் எந்த வேலையும் செய்யமுடியாது. அவ்வாறு திடீரென அது அசையும்போது உங்களுக்கு தெரியும் ஏன் படங்களில் மற்றவர்களை பயமுறுத்த இந்த நாற்காலிகளை பயன்படுத்துகிறார்கள் என்று. பண்டைய கலாச்சாரங்களின் படி இப்படி காலியான ஆடும் நாற்காலியை வீட்டில் வைத்திருப்பது தீயசக்திகளை நீங்களே உங்கள் வீட்டுக்கு அழைப்பது போன்றதாகும்.காற்று இல்லாதபோது அந்த நாற்காலி தானாக நகர்ந்தால் உங்கள் வீட்டிற்குள் தீயசக்தி ஏற்கனவே புகுந்து விட்டது என்று அர்த்தம்.

பச்சை நிற பெயிண்ட்
இந்த நம்பிக்கைக்கு பின்னால் பல வலிமையான காரணங்கள் உலகம் முழுவதும் உள்ளது. ஏனெனில் 18ஆம் நூற்றாண்டில் பச்சை நிற பெயிண்டானது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஹைட்ரஜன் ஆர்சனிக் என்னும் பொருளால் தயாரிக்கப்பட்டது. ஆர்சனிக் என்பது விஷம் என்பது பலரும் அறியாத ஒன்று. இந்த ஆர்சனிக் கலந்த பெயிண்ட் அடிக்கப்பட்ட வீடு மற்றும் தொழிற்சாலைகளில் இருந்தவர்கள் திடீரென நோயில் விழுந்தார்கள். அதில் பலரும் இறந்தும் போனார்கள். பின்னர் 1822ல் தான் இதற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர்தான் பச்சை நிறத்திற்கு மாற்று கண்டறியப்பட்டது. ஆனால் இன்றும் பச்சை நிறம் கெட்ட சகுனமாகத்தான் இருக்கிறது.

ஓடாத அல்லது உடைந்த கடிகாரம்
உங்கள் வீட்டில் ஒருபோதும் உடைந்த அல்லது ஓடாத கடிகாரத்தை வைக்கக்கூடாது. ஏனெனில் அது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் வெறுமையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஓடாத கடிகாரம் கெட்ட சகுனமாகும். உங்கள் கடிகாரம் உடைந்த அல்லது நின்று போன நேரம் உங்களுக்கு தீமைகள் ஏற்படபோவதற்கான அறிகுறி ஆகும்.

கள்ளிச்செடி
செடிகளை விரும்புபவர்களுக்கு இது கெட்ட செய்தியாகும். விறைப்பான மற்றும் முட்கள் இருக்கும் செடிகள் உங்களை சுற்றி எதிர்மறை சக்திகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். முட்கள் நிறைந்த கள்ளி மற்றும் அதுபோன்ற செடிகள் உங்கள் வீட்டில் பிரச்சினைகள் மற்றும் உறவுகளுக்கிடையே குழப்பங்களை உண்டாக்கக்கூடும். செடிகள் வளர்க்க ஆசைப்பட்டால் ரோஜா, செம்பருத்தி போன்ற மென்மையான மலர்செடிகளை வளருங்கள்.

கலைந்த படுக்கை
பழங்காலம் முதலே நிலவும் மூடநம்பிக்கைகளில் ஒன்று கலைந்த படுக்கை உங்களுக்கு தூக்கமில்லாத இரவுகளை வழங்கக்கூடும். எனவே எந்த குறுக்கீடுகள் ஏற்பட்டாலும் காலை எழுந்தவுடன் படுக்கை மற்றும் தலையணையை சரிசெய்து ஒழுங்காக வைக்கவும். இது உங்களுக்கு நிம்மதியான உறக்கத்தை வழங்கும்.

திறந்த குடை
இது நீங்கள் கேள்விப்படாத ஒன்றாக இருக்கலாம். பண்டைய எகிப்தில் வீட்டிற்குள் குடையை ஒருபோதும் திறக்கமாட்டார்கள் அப்படியே திறந்தாலும் அதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பார்கள். பண்டைய காலங்களில் நீங்கள் வாங்கும் பொருட்களை குடைக்குள் வைத்து கொண்டுவருவது நீங்கள் அவற்றை கடவுளிடம் இருந்து மறைப்பது போலாகும். இது அந்த சமயத்தில் பாவச்செயலாக கருதப்பட்டது. கடவுளின் பாதுகாப்பு உங்களுக்கு போதவில்லை என நீங்கள் கூறுவதாக அர்த்தப்படுகிறது. நீங்கள் வீட்டிற்குள் குடையை திறப்பது பொறாமை கொண்ட ஆன்மாவின் கோபத்தை தூண்டும்.

வாடிய செடிகள்
உங்கள் வீட்டில் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால் ஒருபோதும் உங்கள் வீட்டில் இருக்கும் செடிகள் வாடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டிற்குள் இறந்த பொருட்களை வைத்திருப்பது தீயசக்திகளை நீங்களே அழைப்பது போலாகும். சுருங்கி மற்றும் கருகி இருக்கும் இலைகளும், தண்டுகளும் உங்கள் வீட்டிற்கு அழகிய உருவத்தை வழங்காது.

காலாவதியான காலண்டர்
உங்கள் வீட்டிற்குள் காலாவதியான காலண்டரை வைத்திருப்பது உடைந்த கடிகாரம் உங்கள் வாழ்க்கையில் என்ன பாதிப்பை ஏற்படுத்துமோ அதே பாதிப்பை ஏற்படுத்தும். வாஸ்துவின் படி காலத்தை காட்டும் பொருட்கள் எப்பொழுதும் வீட்டில் சரியாக இருக்க வேண்டும், இல்லையெனில் உங்கள் வீட்டில் துரதிர்ஷ்டம், தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துவதுடன் உங்கள் ஆயுளையும் குறைக்கக்கூடும். எனவே ஒருபோதும் கடந்த கால நாட்காட்டியை வீட்டில் வைத்திருக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications











