Latest Updates
-
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
உங்க ராசிய சொல்லுங்க... நீங்க எந்த விஷயத்துக்கு செம காண்டாவீங்கனு நாங்க சொல்றோம்.
எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன விஷயங்கள் பிடிக்காது என்பது பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். அது பற்றிய விளக்கமான தொகுப்பு தான் இது.
நாம் பிறக்கிற போது ஏதேனும் கிரக நிலைகளுக்கு ஏற்ப ஏதாவது ஒரு ராசியின் கீழ் பிறக்கிறோம். அதனால் தான் அந்த ராசியின் பண்புகளையும் நகர்வுகளையும் வைத்து நம்முடைய குணநலன்கள் அமைகின்றன. அதை நம்மால் கணக்கிடவும் முடிகிறது. நமக்கு நம்முடைய ராசிப்படி என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது, நம்முடைய குணநலன்கள் என்ன அத்தனையையும் தெரிந்து கொள்ள முடியும். ஏன் நாம் எதை வெறுக்கிறோம் என்பதைக் கூட நம்முடைய ராசியை வைத்து சொல்லிவிட முடியுமாம்...

நமக்குப் பிடிக்காத விஷயங்களை நாம் பொறுத்துக் கொண்டே சென்றால் அது ஒரு கட்டத்தில் நம்முடைய வாழ்க்கைப் பயணத்துக்குக் குறுக்கு பெரும் தடையாகக் கூட மாறும் வாய்ப்பு உண்டு. அதனால் தான் நமக்குப் பிடிக்காத விஷயங்களைப் பற்றி புரிந்து வைத்திருப்பதும் எதை நாம் முழுமையாக வெறுக்கிறோம் என்பது பற்றியும் தெளிவாகப் புரிந்து அதை வெளியேற்றினால் வாழ்க்கை முழுவதும் சுமூகமாக இருக்கும். அதனால் எந்தெந்த ராசிகளுக்கு எந்தெந்த விஷயங்கள் சுத்தமாகப் பிடிக்காது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
நீங்கள் எப்போதுமே சிறந்ததொரு வாழ்க்கை வாழ விரும்புகிறவர்களாக இருப்பார்கள். சில சமயங்கள் சின்ன சின்ன தோல்விகள் வந்தாலும் அதை மிகழ்வோடு ஏற்றுக் கொள்வீர்கள். ஆனால் யாராவது ஏதாவது ஒரு விஷயத்தில் உங்களை இரண்டாவது இடத்துக்கோ இரண்டாம்பட்சமாகவோ தள்ளுகிறார்கள் என்றால் அதை ஒருபோதும் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எப்போதும் தான் முதலாவதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நீங்கள்.

ரிஷபம்
கொஞ்சம் சோம்பேறித் தனம் இருந்தாலும் செய்ய வேண்டிய விஷயத்தை அந்த சமயத்துக்கு ஏற்றபடி செய்து முடிப்பீர்கள். ஆனால் உங்களுடைய ஓய்வு நேரத்தில் உங்களை யாராவது தொந்தரவு செய்தாலோ அந்த நேரத்தில் ஏதாவது வேலை வந்து விட்டாலோ அது உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. கொல வெறியாகிடுவீங்க.

மிதுனம்
நீங்கள் எதையுமே நேர்மறையாக அணுகக் கூடிய ஆளாக இருப்பீர்கள். அதனால் மிக சிரமமான சூழலில் கூட அதில் உள்ள நேர்மறையான விஷயத்தைக் கண்டுபிடித்து பார்ப்பீர்கள். அதனால் யாரேனும் உங்களுக்கோ அல்லது நீங்கனாகவோ சில மோசமாக நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தால் உங்களுக்குப் பிடிக்காது. அதை முழுதாக வெறுப்பீர்கள்.

கடகம்
நீங்கள் உங்களுடைய வழக்கமாக வேலைகளையும் திட்டங்களையும் விரும்பி செய்வீர்கள். அதனால் உங்களுக்கு இயலாமையைக் கண்டால் பிடிக்கவே பிடிக்காது.

சிம்மம்
உங்களுக்கு எப்போதுமே சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாக இருக்க வேண்டும். அதுதான் பிடிக்கும் என்பது எங்களுக்கு நன்கு தெரியும். ஆனால் அப்படி நீங்கள் நினைக்கிற பொழுது ஏதேனும் விஷயத்தில் யாராவது உங்களை மையப்படுத்தாமல் புறக்கணித்தால் செம காண்டாயிடுவீங்க. சரிதான?

கன்னி
எதுவுமே நிறுவன மையப்பட்ட முறையில் ஒரு ஒழுங்குமுறையோடு இருந்தால் தான் உங்களுக்கு மகிழ்ச்சி. ஏதேனும் அதில் குழப்பமோ அல்லது ஒழுங்குமுறையோ இல்லாமல் இருந்தால் அதைப் பார்த்து உங்களுடைய ரத்தம் கொதிக்க ஆரம்பிக்கும்.

துலாம்
உங்களுடைய அடையாளமே உங்களுக்கு எது நல்லது, எது நல்லது என்று பிரித்துப் பார்க்கத் தெரிந்த குணம் தான். எல்லா விஷயங்களுமே சரியாக இருக்காது தான். ஆனாலும் தவறான விஷயங்கள் பற்றி உங்களுக்குப் பிடிக்காது. அதனால் தவறான விஷயங்களைக் கண்டு எப்போதுமே தட்டிக் கேட்பீர்கள்.

விருச்சிகம்
எப்போதும் உங்களுடைய சுதந்திரத்தை விரும்பக் கூடியவர் நீங்கள். அதனால் எந்த மாதிரியான தடைகளும் கட்டுப்பாடுகளும் உங்களுக்குச் சுத்தமாகப் பிடிக்காது. கட்டுப்பாடுகளை முழுமையாக வெறுப்பவர்கள் நீங்கள்.

தனுசு
எதுவுமே தடையில்லாமல் அதேசமயம் த்ரில்லாகவும் இருப்பதை அனுபவித்து மகிழக்கூடியவர்கள் நீங்கள். அதனால் எப்போதும் ஒரே மாதிரி வழக்கமான விஷயங்களையும் மட்டும் செய்து கொண்டிப்பவர்களையும் அந்த விஷயங்களையும் வெறுப்பீர்கள்.

மகரம்
எதையுமே சின்ன சின்ன வார்த்தைகளாக, மிக கொஞ்சமாக மட்டுமே பேசக்கூடியவர்கள் நீங்கள். அதனால் உங்களுடைய வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு சென்று விடுவீர்கள். அதனால் பொய் சொல்பவர்களைக் கண்டாலே உங்களுக்குப் பிடிக்காது. அதேபோல் சத்தியத்தை மீறுகிறவர்களையும் உங்களுக்குச் சுத்தமாகப் பிடிக்காது.

கும்பம்
நீங்களும் மகர ராசிக்காரர்களைப் போலவே, எதையுமே சின்ன சின்ன வார்த்தைகளாக, மிக கொஞ்சமாக மட்டுமே பேசக்கூடியவர்கள் நீங்கள். அதனால் உங்களுடைய வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு சென்று விடுவீர்கள். அதனால் பொய் சொல்பவர்களைக் கண்டாலே உங்களுக்குப் பிடிக்காது. அதேபோல் சத்தியத்தை மீறுகிறவர்களையும் உங்களுக்குச் சுத்தமாகப் பிடிக்காது. அன்பு செலுத்துவீர்கள். அதை புரிந்து கொள்ளவில்லை என்றால் யாராக இருந்தாலும் தூக்கி வீசிவிடுவீர்கள்.

மீனம்
சொல்வதை செய்ய வேண்டும் எ்னறு நினைப்பீர்கள். அதனாலேயே உங்களுக்கு சொல்வதை செய்ய திராணியற்றவர்களைப் பிடிக்காது. சொன்ன சொல்ல காப்பாற்றவில்லை என்றால் செம கடுப்பாகி விடுவீர்கள்.



Click it and Unblock the Notifications
