Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த ஓவியங்கள் உங்கள் வீட்டில் இருப்பது உங்களுக்கு பல ஆபத்துகளை ஏற்படுத்துமாம் தெரியுமா?
வாஸ்து சாஸ்திரத்தின் படி சரியான ஓவியத்தை வீட்டில் வைப்பது உங்கள் வீட்டிற்கு அமைதி, மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், நெருக்கம் போன்றவற்றை கொண்டுவரும்.
வரலாறை எடுத்துக்கூறுவதில் ஓவியங்களுக்கு என தனிப்பங்கு உள்ளது. நமது பல வரலாறுகளை நாம் ஓவியங்கள் மூலம்தான் தெரிந்து கொண்டிருக்கிறோம். ஓவியங்கள் என்பது ஒவ்வோர் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் இருக்கிறது.

ஓவியங்களில் நேர்மறை ஓவியங்கள் மற்றும் எதிர்மறை ஓவியங்கள் என்று இரண்டு உள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின் படி சரியான ஓவியத்தை வீட்டில் வைப்பது உங்கள் வீட்டிற்கு அமைதி, மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், நெருக்கம் போன்றவற்றை கொண்டுவரும். இந்த பதிவில் உங்கள் வீட்டிற்கு நன்மையை ஏற்படுத்த என்னென்ன ஓவியத்தை வீட்டில் வைக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

அதிர்ஷ்ட இடம்
நதி பாய்வது அல்லது மீன் நீந்துவது போன்ற படங்களை உங்கள் வீட்டின் அதிர்ஷ்டமான இடத்தில் வைப்பது உங்கள் வாழ்வில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும். இது போன்ற ஓவியம் உங்கள் வீட்டின் முக்கியமான இடத்தில் அல்லது நீங்கள் பணம் வைக்குமிடம் போன்ற இடங்களில் வைக்கப்பட்டால் உங்கள் வீட்டில் நிலையான செல்வம் இருக்கும். பறவைகள் பறப்பது போன்ற படங்களை இந்த இடத்தில் வைப்பது செல்வத்தின் வரவை அதிகரிக்கும்.

சூரிய உதயம்
உங்கள் வீட்டிற்குள் போதுமான சூரிய ஒளி வரவில்லை என்றால் பிரகாசமான சூரியன் இருக்கும் படமொன்றை உங்கள் வீட்டில் வையுங்கள். இது உங்கள் வீட்டிற்குள் நேர்மறை சக்திகளை அழைத்துவரும். இது ஒன்று அல்லது இரண்டு அறைகளில் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

மூங்கில் செடி
வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் வீட்டின் நுழைவாயிலில் மூங்கில் செடி இருக்கும் ஓவியத்தை வைப்பது நல்ல சகுனமாகும். இவ்வாறு வைப்பது உங்கள் வீட்டில் எப்பொழுதும் உணவுப்பஞ்சம் ஏற்படாமல் இருக்க உதவும் என்று வாஸ்து கூறுகிறது.

பஞ்சபூதங்கள்
பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பு தொடர்பான ஓவியங்களை ஒருபோதும் உங்கள் வீட்டில் மாட்டாதீர்கள். ஒருவேளை நீங்கள் அவசியம் அதனை மாட்ட வேண்டுமென்றால் அதனுடன் நீர் இருக்கும் ஓவியத்தையும் சேர்த்து மாட்டுங்கள்.

மான்
மான் கருணை, சகிப்புத்தன்மை மற்றும் நீண்ட ஆயுளின் அடையாளமாகும். நீண்ட காலம் வாழ்வதன் அடையாளமாக மான் விளங்குகிறது. உங்கள் அறையிலும், உங்கள் குழந்தைகளின் அறையிலும் மான் இருக்கும் ஓவியங்களை வையுங்கள் இது ஆரோக்கியத்தின் அடையாளமாகும்.

பைன் மரங்கள்
பைன் மரங்கள் இருக்கும் ஓவியங்களை உங்கள் வீட்டில் மாட்டுவது உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து எதிற்மறை சக்திகளையும் விரட்டும் என்று கூறப்படுகிறது. வெள்ளை பின்னணியில் இந்த மரங்கள் இருப்பது போன்ற ஓவியங்களை வைப்பது நல்லது.

வைக்கக்கூடாத ஓவியம்
தீமை, தனிமை, துக்கத்தை பிரதிபலிப்பது போன்ற ஓவியங்களை வீட்டின் எந்த அறையிலும் வைக்காதீர்கள். இது உன்னால் குடும்பத்திற்கு துரதிர்ஷ்டத்தையும், ஆரோக்கிய பிரச்சினைகளையும் கொண்டுவரும்.

பிடித்தவர்களின் படங்கள்
உங்களுக்கு பிடித்தவர்களின் படத்தை ஒருபோதும் வடகிழக்கு திசையில் வைக்காதீர்கள். இறந்தவர்களாகவே இருந்தாலும் அவர்களின் படங்களை ந்த திசையில் வைப்பது நல்லதல்ல என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

பறவைகள்
ஒருவேளை நீங்கள் பறவைகளின் ஓவியங்களை வீட்டில் வைக்க விரும்பினால் ஜோடியாக இருக்கும் பறவைகளின் ஓவியங்களை மட்டும் வையுங்கள். ஒருபோதும் தனிமையில் இருக்கும் பறவையின் ஓவியத்தை வைக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications