இந்த 7 பேர் வீட்டில் சாப்பிடுவது உங்களை நரகத்திற்கு அழைத்து செல்லும் தெரியுமா?

கருட புராணத்தின் படி நாம் யாருடன் பழக வேண்டும், யாருடன் பழகக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி சிலரின் இல்லங்களில் சாப்பிடுவது நமது பாவக்கணக்கை அதிகரிக்கும்.

கருட புராணம் என்பது வேத வியாசரால் இயற்றப்பட்ட 18 நூல்களில் மிகவும் முக்கியமான நூலாகும். 279 அத்தியாயங்களையும் 18000 ஸ்லோகங்களையும் கொண்டது. இது ஒருவர் வாழும்போது எப்படி தர்மத்தை கடைபிடித்து வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்பதையும், மரணத்திற்கு பிறகான நமது வாழ்க்கையையும் உணர்த்துகிறது.

Garuda Puran: One Should Never Eat In These People home

கருட புராணத்தின் படி நாம் யாருடன் பழக வேண்டும், யாருடன் பழகக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி சிலரின் இல்லங்களில் சாப்பிடுவது நமது பாவக்கணக்கை அதிகரிக்கும். தவறான இவர்களின் இல்லத்தில் சாப்பிடுவது அவர்களின் பாவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்வதற்கு சமம். இவர்கள் இல்லத்தில் சாப்பிடுவது மட்டுமின்றி இவர்களுடன் பழகுவதே பாவம்தான். இந்த பதிவில் பழக தகுதியற்ற அவர்கள் யார் யாரென பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருடன்

திருடன்

ஒரு குற்றவாளியின் வீட்டில் எப்போதும் உணவருந்த கூடாது. திருடனின் இல்லத்தில் சாப்பிடும் போது அவன் செய்த பாவத்தின் மூலம் ஏற்படும் விளைவுகளை நாமும் அனுபவிக்க வேண்டும். தீயவழிகளில் செல்வது மட்டுமல்ல அதனால் கிடைக்கு பலனை அனுபவிப்பதும் பாவமான செயல்தான் என்று கருட புராணம் கூறுகிறது. மேலும் அந்த திருடனால் நீங்களும் ஒருநாள் பாதிக்கப்படலாம்.

மோசமான பெண்

மோசமான பெண்

தெரிந்தே மோசடி, விபச்சாரம் மேலும் அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சமூகத்தின் பார்வையில் மட்டுமல்ல கடவுளின் பார்வையிலும் கொடுமையான பாவமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட பெண்ணின் வீட்டில் ஒருபோதும் சாப்பிடக்கூடாது. இதனால் கடவுளின் பார்வையில் நீங்களும் அவரின் பாவத்தில் பங்கெடுப்பதாக கருதப்படும்.

கடன்காரர்

கடன்காரர்

அநியாய வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் கொடுமையாளர்களாக கருதப்படுகிறார்கள். அடுத்தவர்களின் சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கி கொண்டு காரியம் சாதிக்கும் இவர்கள் அடுத்து உங்களை கூட இலக்காக்க தயங்கமாட்டார்கள். அவர்கள் வீட்டில் நீங்கள் உணவருந்தவுது உங்களின் எதிர்காலத்தில் பெரிய பாதிப்புகளை உண்டாக்கும் என்று கருட புராணம் கூறுகிறது.

மூர்க்க குணமுடையவர்

மூர்க்க குணமுடையவர்

தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த இயலாதவர்களிடம் இருந்து எப்போதும் விலகியே இருங்கள். குறிப்பாக கோபத்தில் வன்முறையில் இறங்குபவர்களிடம் எப்பொழுதும் விலகியே இருங்கள். அவர்கள் இல்லத்தில் உணவருந்துவது மட்டுமின்றி பழகுவதையே தவிர்த்து விடுங்கள்.

துஷ்டர்கள்

துஷ்டர்கள்

துஷ்ட குணமுடையவர்கள் மற்றவர்களை சுரண்டுவதன் மூலம் பணம் சம்பாதிக்கின்றனர். மற்றவர்களின் உழைப்பை உறிஞ்சி பிழைக்கும் இந்த குணமுடையவர்களிடம் எப்போதும் பழகாதீர்கள், அவர்கள் செய்யும் உதவியையும் ஏற்காதீர்கள். ஏனெனில் அவர்களின் அனைத்து செயல்களுக்கும் பின்னாலும் ஒரு சுயநலம் இருக்கும்.

புறம் பேசுபவர்கள்

புறம் பேசுபவர்கள்

அனைத்து தீர்வுகளிலும் பிரச்சினையை காண்பவர்கள் புறம் பேசுபவர்கள். அவர்கள் குறைகளை மட்டுமே கண்டறிந்து மற்றவர்களின் மனங்களை புண்படுத்தக்கூடியவர்கள். அவர்கள் விளையாடும் மனவிளையாட்டு எப்போதும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது, அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். இவர்களிடம் பழகுவதை முடிந்தளவு தவிர்க்கவும்.

ஏழைகள்

ஏழைகள்

இந்த பட்டியலில் இவர்களின் பெயர்கள் இருக்க காரணம் பொருளாதாரத்தில் தாழ்ந்ததவர்களின் இல்லத்தில் சாப்பிடக்கூடாது என்பதல்ல. தனது சொந்த தேவைகளையே பூர்த்தி செய்ய கஷ்டப்படும் ஒருவர் விருந்தினரின் தேவைகளை பூர்த்தி செய்ய எவ்வளவு கஷ்டப்படுவார். இறகு அவர்களை மனதளவில் காயப்படுத்தக்கூடும். அவர்களிடம் இருந்து நாம் எடுத்து கொள்வதை காட்டிலும் அவர்களுக்கு கொடுப்பதே சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, January 28, 2019, 18:00 [IST]
Desktop Bottom Promotion