Latest Updates
-
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா?
புராணங்களின் படி உங்கள் உடலின் எந்த பாகத்தில் லட்சுமி தேவி வசித்து கொண்டிருக்கிறார் தெரியுமா?
மகாவிஷ்ணுவின் மனைவியான லட்சுமிதான் செல்வத்தை வழங்கும் கடவுளாக இந்து மக்களால் நம்பப்படுகிறது. வாழ்க்கையில் முன்னேற ஒருவருக்கு லட்சுமி தேவியின் அருள் என்பது மிகவும் முக்கியமானது.
மகாவிஷ்ணுவின் மனைவியான லட்சுமிதான் செல்வத்தை வழங்கும் கடவுளாக இந்து மக்களால் நம்பப்படுகிறது. வாழ்க்கையில் முன்னேற ஒருவருக்கு லட்சுமி தேவியின் அருள் என்பது மிகவும் முக்கியமானது. இந்து புராணங்களின் படியும், வேதங்களின் படியும் லட்சுமி தேவி எந்தெந்த இடங்களில் வசிக்க விரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் நீங்கள் செய்யும் என்னென்ன செயல்கள் உங்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்க விடாமல் செய்யும் என்பதை பற்றியும் நமது வேதங்கள் கூறியுள்ளது. உங்கள் வாழ்க்கையில் லட்சுமி தேவியின் அருள் இல்லாதபோது நீங்கள் பொருளாதாரரீதியாக பல பாதிப்புகளுக்கு உள்ளாவீர்கள். இந்த பதிவில் லட்சுமி தேவி வசிக்கும் ஐந்து புனிதமான இடங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

தாமரை
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைவருக்கும் பிடிக்காத ஒரு மலர் என்றால் அது தாமரையகத்தான் இருக்கும். அரசியல்ரீதியாக தமிழகத்தில் தாமரைக்கு முக்கியத்துவம் இல்லையென்றாலும் ஆன்மீகரீதியாக எப்பொழுதும் தாமரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த இடங்களில் தாமரை ஒன்றாகும். பத்மபிரியா, பத்மினி போன்ற லட்சுமி தேவியின் பெயர்கள் லட்சுமி தேவிக்கும், தாமரைக்கும் உள்ள தொடர்பை உணர்த்தும். லட்சமி தேவியை வணங்கும் போது எப்போதும் தாமரை மலர்களை வைத்து வழிபடுங்கள்.

கோவில்களில் தாமரை
பெரும்பாலான கோயில்களில், இறைவனுடைய ஆசீர்வாதங்களையும் செல்வத்தையும் பெறுவதற்காக மக்கள் தாமரை மலர்களை வைத்து வணங்குகிறார்கள். மஹாவிஷ்ணுவிற்கு தாமரை வைத்து வணகுவது மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் லட்சுமி தேவியின் சுவாமியாக இருக்கும் விஷ்ணுவிற்கு தாமரை வைத்து வணங்குவது உங்களுக்கு தேவியின் அருளை பெற்றுத்தரும்.

வில்வ இலைகள்
பொதுவாக வில்வ இலைகள் சிவபெருமானிற்கு வைத்து வழிபடுவதாகும். இந்த வில்வ இலையில் கூட லட்சுமி தேவி வாழ்வதாக வேதங்கள் கூறுகிறது. வில்வ இலைகள் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டது, வில்வ இலைகள் இல்லாத எந்த ஒரு சிவ பூஜையும் முழுமை பெறுவதில்லை. வில்வ இலைகளை வைத்து வழிபடும்போது உங்களின் கடந்த மூன்று ஜென்மங்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இது உங்களுக்கு லட்சுமி தேவியின் அருளை பூரணமாக பெற்றுத்தரும்.

யானையின் நெற்றி
யானையின் இரண்டு தந்தங்களுக்கு இடையில் இருக்குமிடத்தில் லட்சுமி குடியிருக்கிறார். இந்த இடம் கஜகும்பம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு தந்தங்களுக்கு இடையில் இருக்கும் நெற்றியில் லட்சுமி வசிப்பதால்தான் அவருக்கு கஜலட்சுமி என்ற பெயர் வந்தது. சில கோவில்களில் அதற்காகத்தான் யானைகள் பரமரிக்கப்பட்டு வருகிறது. யானைகள் இருக்கும் கோவில்கள் செல்வா செழிப்புடன் இருக்கும் என்பது நம்பிக்கையாகும். புகழ்பெற்ற ஸ்ரீரங்க கோவிலில் தினமும் காலையில் ரங்கநாதராக எழுந்தருளியுள்ள விஷ்ணு யானையின் முகத்தில் விழிப்பார் என்று கூறப்படுகிறது.

பசு
இந்து மத வேதங்களின் படி லட்சுமி தேவி பசுவின் பின்புறம் வசிப்பதாக கூறப்படுகிறது. பசு வழிபாடு என்பது மிகவும் புனிதமான ஒன்றாக இந்து மதத்தில் இருக்கிறது. பசுக்களை வணங்கி வழிபாடு செய்வது என்பது நமது பாரம்பரியத்தில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ச்சியாக பசுவிற்கு உணவளித்து வழிபடுபவர்களுக்கு செல்வமும் லட்சுமி தேவியின் அருளும் முழுமையாக கிடைக்குமென புராணங்கள் கூறுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி பூஜை செய்வது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகும்.

மனிதர்களின் விரல் நுனி
மனிதர்களின் திறமைகளையும், தகுதிகளையும் சோதிக்க லட்சுமி தேவி மனிதர்களின் விரல் நுனியிலும் வசிப்பார் என்று கூறபடுகிறது. இதனால்தான் தினமும் காலையில் எழுந்தவுடன் உள்ளங்கையை வளைத்து விரல் நுனியை பார்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் அன்று நாள்முழுவதும் உங்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications