Latest Updates
-
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும்
அரசு வேலைக்காக முயற்சி பண்றீங்களா? இந்த சின்ன சின்ன பரிகாரம் பண்ணுங்க... இந்த வருஷமே கிடைச்சிடும்
அதிர்ஷ்ட காரனுக்கு மட்டும் தான் அரசாங்க வேலை என்பார்கள் பெரியவர்கள். அதிலும் அரசாங்க வேலை பார்ப்பவர்களுக்குத் தான் பொண்ணு கொடுக்கவும் ரெடியாக இருப்பார்கள். அதற்காகத்தான் சில ஜோதிட பரிகாரங்கள் இங்கே கொ
எல்லாருக்கும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பது ஒரு வேண்டுதலாக இருக்கும். ஏனெனில் வேலையின் மூலம் வாழ்க்கையில் ஈஸியாக செட்டில் ஆக முடியும். அந்த வகையில் நிரந்தர வேலை என்றால் யாருக்கும் பிடிக்காமல் இருக்காது . நிறைய பேர்கள் இன்றளவும் அதே மாதிரியான அரசாங்க வேலையைத் தான் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் அரசாங்க வேலை என்பது அவ்வளவு எளிதாக கிடைக்க கூடியது கிடையாது. அதற்காக நீங்கள் நிறைய தேர்வுகளைக் கடக்க வேண்டியிருக்கும்.

அதில் பாஸ் ஆகி வருவதற்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதனால் தான் அதிர்ஷ்ட காரனுக்கு மட்டும் தான் அரசாங்க வேலை என்பார்கள் பெரியவர்கள். அதிலும் அரசாங்க வேலை பார்ப்பவர்களுக்குத் தான் பொண்ணு கொடுக்கவும் ரெடியாக இருப்பார்கள். அதற்காகத்தான் சில ஜோதிட பரிகாரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் படி நீங்கள் செய்து வந்தால் சீக்கிரமே அரசாங்க வேலை கிடைத்து வாழ்வில் செட்டிலாகி விடலாம்.

சிவன் வழிபாடு
ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் சிவலிங்கத்திற்கு நீராபிஷேகம் செய்து வர வேண்டும். அரிசி மற்றும் பால் அபிஷேகம் செய்யுங்கள். இந்த மாதிரி செய்து வந்தால் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் தடைகள் நீங்கும். சிவனின் இதயம் குளிர்ந்து சீக்கிரம் பக்தராகிய உங்களுக்கு வேலையை அளிப்பார். அப்படியே அவரிடம் அரசாங்க வேலை கிடைக்க வேண்டிக் கொள்ளுங்கள்.

ஆஞ்சநேய வழிபாடு
செவ்வாய் கிழமைகளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள். ரோஜாப் பூ மற்றும் குங்குமம் கொண்டு வழிபட்டு வாருங்கள். ஆகாயத்தில் பறப்பது போன்று இருக்கும் அனுமன் படத்தை வழிபடுங்கள். அனுமன் மந்திரத்தை தினந்தோறும் ஜெபிக்க வேண்டும். ஹனுமான் எந்திரத்தை கூட வீட்டில் மாட்டலாம்.

கணபதி வழிபாடு
தும்பிக்கை வலது பக்கம் அமைந்த விநாயகரை வாங்கி வழிபடுங்கள். அதிலும் சதுர்த்தி நாளில் வழிபடுவது நல்லது. தினமும் விநாயகர் சிலைக்கு வழிபாடு செய்து வாருங்கள். அரசாங்க வேலை கைகூடி வரும்.

பசுவிற்கு உணவளித்தல்
நமது இந்து சடங்குப் படி பார்த்தால் பசுவிற்கு உணவளித்தல் மிகவும் சிறந்தது. வேலைக்கு இண்டர்வியூ போவதற்கு முன் பசுவிற்கு சப்பாத்தி மற்றும் வெல்லம் சாப்பிட கொடுங்கள். கோதுமை மாவு பண்டங்கள் கொடுப்பது நல்லது. இதுவும் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.

சனி பகவான் வழிபாடு
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சனி பகவான் வழிபாடு மேற்கொள்ளுங்கள். அதிலும் "ஓம் ஷியாம் சனிஸ்வராய நமக" என்று 108 தடவை ஜெபிக்க வேண்டும். இப்படி ஜெபிப்பதால் அரசாங்க வேலைக்கு இடையூறாக இருக்கும் கிரக நிலையை மாற்றும். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கும்.

இண்டர்வியூக்கு முன்
இண்டர்வியூ போவதற்கு முன் தயிர் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். இது உங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்க நேர்மறை எண்ணங்களை உருவாக்கும்.

மந்திரம்
இண்டர்வியூ போவதற்கு முன் "ஓம் நமோ பகவதி பத்மாவதி ரிதி சித்தியே தயனி" என்று 108 மந்திரத்தை ஜெபியுங்கள். இதுவும் உங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்க உதவியாக இருக்கும்.

அரச மரம்
ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து மற்ற கிழமைகளில் அரச மரத்தை வழிபட்டு வாருங்கள். காரணம் அரசமரத்தில் நம் முன்னோர்களின் ஆன்மா இருப்பதாக நம்பப்படுகிறது. சனிக்கிழமைகளில் அரச மரத்தடியில் விளக்கேற்றி வாருங்கள்.



Click it and Unblock the Notifications
