Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
சிவனின் இந்த உருவத்தை வீட்டில் வைப்பது உங்கள் வீட்டில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் தெரியுமா?
வாழ்க்கையில் திருமணம் என்பது அனைவருக்குமே மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் திருமணத்திற்கு பிறகுதான் முழுமையடையும் நிலைக்கு செல்கிறது.
வாழ்க்கையில் திருமணம் என்பது அனைவருக்குமே மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் திருமணத்திற்கு பிறகுதான் முழுமையடையும் நிலைக்கு செல்கிறது. ஆனால் பலருக்கும் திருமண வாழ்க்கை அவர்கள் எதிர்பார்ப்பது போல அமைந்து விடுவதில்லை.

ஒரு ஆணும், பெண்ணும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே பிரச்சினைகள் வர பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் சிலசமயம் அவர்கள் தங்கியிருக்கும் வீடும் அதில் உள்ள பொருட்களும் கூட காரணமாகலாம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் உங்கள் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

மெயின் கேட்
உங்கள் வீட்டின் மெயின் கேட்டானது எப்பொழுதும் உங்கள் வீட்டின் மற்ற கதவுகளை விட பெரியதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அது உங்கள் திருமண வாழ்க்கையில் நிறைய பணக்கஷ்டத்தை ஏற்படுத்தும்.

ஜன்னல்கள்
நீங்கள் எழுந்தவுடன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஜன்னல்களை திறந்து வைத்துவிடுங்கள். இது உங்கள் வீட்டிற்குள் சூரிய ஒளியை மட்டும் கொண்டு வருவதில்லை, உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளையும் விரட்டுகிறது.

நுழைவாயில்
வீட்டின் நுழைவாயிலுக்கு அருகே யானை, மீன், சங்கு போன்றவை இருப்பது உங்கள் புனிதமானதாக கருதப்படுகிறது. மாறாக கத்தி, சுத்தியல் போன்ற ஆயுதங்கலோ அல்லது ஓவியங்களோ இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.

பழைய கதவுகள்
உங்களுடைய ஜன்னல்களோ அல்லது கதவுகளோ பழையதாகவும்,துருபிடித்ததாகவும் இருந்தால் முடிந்த அளவிற்கு வேகமாக அவற்றை மாற்றி விடுங்கள். ஏனெனில் அவை பணநெருக்கடியை ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

படுக்கையறை
உங்கள் படுக்கையறையை உங்களையும், உங்கள் துணையையும் தவிர வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். மற்றவர்களை உங்கள் படுக்கையறைக்குள் அனுமதிப்பது, படுக்கையில் படுக்க அனுமதிப்பது உங்கள் இருவருக்குமிடையே பிரிவுகளையும், இடைவெளியையும் ஏற்படுத்தும்.

கருப்பு கதவு
உங்கள் வீட்டில் எந்த கதவும் கருப்பு நிறத்தில் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கருப்பு நிற கதவு இருப்பது தம்பதிகளுக்கிடையே தொடர்ந்து பிரச்சினைகளை உருவாக்கும் என்று வாஸ்து கூறுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வீட்டில் என்னென்ன பொருட்களை வைக்கக்கூடாது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

கள்ளி
உங்கள் வீட்டிற்குள் கள்ளி செடிகளை ஒருபோதும் வைத்து விடாதீர்கள். அது மட்டுமின்றி முள் இருக்கும் செடிகள் எதுவுமே வீட்டிற்குள் வைக்கப்படக்கூடாது. ரோஜா செடி வைக்க விரும்பினால் அதன் முட்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு வைக்கவும்.

எதிர்மறை ஓவியங்கள்
எதிர்மறை கருத்துக்களை கூறும் ஓவியங்களை வீட்டுக்குள் வைக்கக்கூடாது. மிருகங்கள் அழுவது, மனிதன் கையில் தலையுடன் இருப்பது போன்ற ஓவியங்கள் வைப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இது தம்பதிகளுக்குள் இறுக்கத்தையும், மனஅழுத்தத்தையும் அதிகரிக்கும்.

தாஜ்மஹால்
தாஜ்மஹாலின் அழகிலோ அதன் பெருமையிலோ எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அடிப்படையில் அது ஒரு கல்லறை ஆகும். அதன் புகைப்படத்தையோ, பொம்மையையோ வீட்டில் வைப்பது அபசகுணம் என்று வாஸ்து சொல்கிறது.

விலங்குகளின் சிலைகள்
வீட்டில் விலங்குகளின் சிலை வைப்பது கௌரவமான ஒன்றாக இருக்கலாம், ஆனால் எந்த மிருகத்தை வைக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். பாம்பு, ஆந்தை, கழுகு, வௌவால், பன்றி போன்றவற்றின் சிலைகளை வீட்டில் வைக்கவே கூடாது.

உடைந்த சிலைகள்
கடவுளின் சிலையாக இருந்தாலும் அது சேதமடைந்து இருந்தாலோ அல்லது உடைந்திருந்தாலோ அதனை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் அது மிகப்பெரிய எதிர்மறை விளைவுகளை தம்பதிகளுக்கு ஏற்படுத்தும்.

நடராஜர்
நடனமாடும் வடிவமே என்றாலும் நடராஜர் என்பது சிவபெருமானின் ருத்ர வடிவமாகும். நடராஜ சிலையையோ அல்லது படத்தையோ வீட்டில் வைப்பது பிரச்சினைகளை உண்டாக்கும்.

மூழ்கும் படகு
படகு மூழ்குவது என்பது உயிர் பிரிவது மற்றும் உலகத்தின் முடிவின் அடையாளமாகும். இதுபோன்ற எதிர்மறை படங்கள் மகிழ்ச்சியாக வாழும் உங்கள் வீட்டில் எதற்கு? எனவே இதுபோன்ற படங்களை வைக்காமல் மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் படங்களை உங்கள் வீட்டில் வையுங்கள்.



Click it and Unblock the Notifications











