Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்..! அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..?
மருத்துவத்தில் பலவித அதிசயங்கள் நடக்கும். இவர் உயிர் பிழைக்கவே மாட்டார் என எண்ணினால் அவர்தான் உடனடியாக உயிர் பிழைத்து தெம்பாக நடமாடுவார். இவருக்குலாம் எதுவுமே ஆக்காதுப்பா..! இரும்பு மாதிரி உடம்பு" இப்படி யாரை சொல்கிறமோ அவர்தான் கூடிய சீக்கிரத்திலே . இப்படி நாம் ஒன்று நினைக்க, அதுவாக ஒன்று நடப்பது மிக இயல்பே. ஆனால், ஒரு சிலருக்கு வாயை பிளக்க கூடிய அளவிற்கு பல அதிசயங்கள் நடக்கின்றன.

"இட் ஐஸ் எ மெடிக்கல் மிராக்கிள்" என்றே நாம் இதனை சொல்ல வேண்டும். இது போன்ற விஷயங்கள் நம்மை சுற்றி பல நடக்கின்றன. அந்த வகையில் இங்கே ஒருவருக்கு 15 பீர் பாட்டிலை உடலில் செலுத்தி உயிரை காப்பாற்றி உள்ளனர். இது மருத்துவ துறையில் புதுவித அனுபவம் என்றே கூறலாம். இந்த நிகழ்வு எங்கே, யாருக்கு, எப்படி நிகழ்ந்த்து என்கிற சுவாரசியமான தகவலை இந்த பதிவில் பார்ப்போம்.

யார் அவர்..?
குளுக்கோஸ் பாட்டில் நம் உடலில் ஏற்றி தான் பார்த்திருப்போம். ஆனால், இந்த 15 பீர் பாட்டில் விஷயம் சற்று வேடிக்கையாக தான் இருக்கும். வியட்நாம் நாட்டை சேர்ந்த நகுய் வான் நாட் என்கிற 48 வயதை நிரம்பிய ஒருவருக்கு தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவரின் 15 பீர் பாட்டிலை செலுத்தி தான் உயிரை மீட்டெடுத்தனர்.

காரணம்..?
நாட் என்பவரின் ரத்தத்தில் அதிக அளவு மெத்தனால் (methanol) என்கிற வேதி பொருள் கலந்துள்ளதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன் அளவு 1119 மடங்கு அதிகமாக உள்ளது என மருத்துவர்கள் கண்டறிந்தனர். இந்த நிலை கொஞ்சம் நேரம் நீடித்தால் கூட அவருக்கு மரணம் ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.

மருத்துவர்களின் முடிவு..!
இப்படி உடலில் அதிக அளவு மெத்தனால் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்த பின்னர் இதை சரி செய்வதற்கான வழி முறையை ஆராய்ந்தார்கள். அப்போது தான் இவர்களுக்கு பீர் உதவியது.
ஆரம்பத்தில் 1 லிட்டர் பீரை அவரின் உடலில் மருத்துவர்கள் செலுத்தினர். இருப்பினும் இந்த வேதி பொருளின் அளவு குறையவில்லை.

அடுத்த முயற்சி..!
இதனால் ஒவ்வொரு பீர் பாட்டிலையும் இவரின் உடலில் குளுக்கோஸ் ஏற்றுவது போல ஏற்றினர். 10 பீர் பாட்டிலை ஏற்றிய பின்னரும் இவர் சுய நினைவுக்கு வரவில்லை. இறுதியாக 15 ஆவது பீர் பாட்டிலில் தான் இவர் சுய நினைவுக்கு வந்தார்.

என்ன தந்திரம்..?
யாரவது பீரை குடிக்காமல் உடலில் ஏற்றுவார்களா..? என்கிற உங்களின் கேள்விக்கு பதில் இதோ. அதாவது, மதுவில் பொதுவாகவே இரு வகை உண்டு. ஒன்று எத்தனால் (ethanol) கொண்ட மதுபானம். மற்றொன்று மெத்தனால் (methanol) கொண்ட மதுபானம்.
இவற்றில் மனித உடலானது முதலில் எத்தனாலை கல்லீரலின் மூலம் மாற்றம் பெற செய்யும். ஆனால் இவருக்கோ அதிக அளவில் மெத்தனால் உடலில் சேர்ந்துள்ளதால் பீர் பாட்டிலை உடலில் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஏன்..?
இவ்வாறு பீரை உடலில் செலுத்துவதன் மூலம் இந்த மெத்தனால் அளவு குறைய தொடங்கும். எனவே, கல்லீரலுக்கும் பாதிப்பு ஏற்படாது.
நாட், சுய நிலைக்கு மீண்டும் வர 15 பீர் பாட்டில்கள் தேவைப்பட்டதே ஆச்சர்யமான ஒன்று என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வியப்பான மருத்துவம்..!
இப்படிப்பட்ட வியப்பான மருத்துவத்தை இதுவரையிலும் மருத்துவ துறையில் செய்ததில்லை. இதுவே முதல் முறை என்பதால் சற்று புதிதாகவும், விந்தையாகவும் உள்ளது என மருத்துவ வட்டாரத்தில் குறிப்பிடு கின்றனர்.

தற்போதைய நிலை..!
15 பீர் பாட்டிலை ஏற்றிய பின்னர் சுய நினைவிற்கு வந்த நாட், 3 வார காலத்திற்கு பிறகு பழைய படி அவரின் வேலைகளை செய்ய இயலும். மேலும், இந்த புது வித மருத்துவத்தை துரிதமாக மேற்கொண்ட மருத்துவர்களுக்கு அதிக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.



Click it and Unblock the Notifications