Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
மே மாசம் தொடங்கிடுச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கப் போகுது? யாருக்கு சிக்கல்?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
பயணங்கள் சம்பந்தப்பட்ட தொழிலில் நீங்கள் நினைத்த லாபங்கள் உங்களுக்கு கிடைக்கும். புதிய ஆட்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழிலில் உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளைக் களைவீர்கள். போட்டிகளில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான சூழல்களை உருவாக்குவீர்கள். இதுவரைக்கும் தடைபட்டு வந்த காரியங்பகளைச் செய்து முடிக்க முயற்சி செய்வீர்கள். உங்களுடைய அனைத்து எண்ணங்களும் ஈடேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

ரிஷபம்
பயணங்களின் வழியாக உங்களுக்கு நிறைய மேன்மையான சூழல்கள் உண்டாகும். வீட்டில் குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்டு வந்த கருத்து வேறுபாடுகள் குறைய ஆரம்பிக்கும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட புனித யாத்திரைகள் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உடன் பணிபுரிகின்றவர்களுடைய ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கும் நல்ல மேன்மைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்
உங்களுடைய மனதுக்குள் புதுப்புது சிந்தனைகள் உருவாகும். வீட்டிலும் வெளியிடங்களிலும் பெரியோர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். நீங்கள் செய்கின்ற முயற்சிகளில் நீங்கள் நினைத்தபடி வெற்றி உண்டாகும். பெற்றோர்கள் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மிதமான நீல நிறமாகவும் இருக்கும்.

கடகம்
நீங்பள் எந்த காரியத்தைச் செய்தாலும் கொஞ்சம் அவசரப்படாமல் இருப்பது நல்லது. எதைச் செய்தாலும் அதைப் பொறுமையாகச் செய்வது நல்லது. வாகனங்களில் பயணம் செய்கின்ற பொழுது, லைசன்ஸ் போன்ற முக்கிய ஆவணங்களை எடுத்துச் செல்வது நல்லது. அதேபோல் மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தேவையில்லாமல் தலையிடாமல் இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

சிம்மம்
தொழிலில் நீங்கள் எதிர்பாராத பண வரவுகளினால் உங்களுடைய சேமிப்புகள் கிடுகிடுவென உயரும். இதுவரைக்கும் தடைபட்டு வந்த காரியங்களை விரைந்து செய்து முடிப்பீர்கள். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய சக ஊழியர்களுடைய உதவியையும் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். உங்களுடைய பழைய நண்பர்களைச் சந்தித்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு சரியான நேரத்தில் வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

கன்னி
நீங்கள் செய்கின்ற வேலையில் கொஞ்சம் கவனமாகவே செயல்படுங்கள். நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடன் உதவிகள் வந்து சேரும். தொழில் சம்பந்தப்பட்ட புதிய இலக்குகளை நீங்கள் நிர்ணயம் செய்வீர்கள். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். நீங்கள் உரையாடுகின்ற பொழுது, உங்களுடைய பேச்சில் கூடுதல் நிதானம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

துலாம்
உங்களுடைய முக்கிய உறவினர்களுடைய ஆதரவினால் உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் நீங்கள் நினைத்தபடி உங்களு்ய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். பெரிய மகான்களுடைய தரிசனங்கள் உங்களுக்குக் கிடைக்கும். மனதுக்குள் இதுவரையிலும் இருந்து வந்த பலவிதமான குழப்பங்களும் நீங்கி தெளிவு பிறக்கும். உங்களுக்கு உயர் பதவி கிடைப்பதற்கு சாதகமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

விருச்சிகம்
உங்களுக்கு ஏற்படும் தேவையில்லாத வீண் அலைச்சல்களால் உங்களுக்கு உடல் சோர்வு ஏற்படும். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் கூடுதல் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள கணவன், மனைவிக்கு இடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.

தனுசு
உங்களுடைய துறையில் பிரபலமானவர்களுடைய நட்பு உங்களுக்குக் கிடைக்கும். தொழிலில் உங்களுடைய பங்குதாரர்களின் மூலம் உங்களுக்கு ஆதாயமும் அனுகூலங்களும் ஏற்படும். நீங்கள் திட்டமிட்ட பயணங்களினால் நீங்கள் எதிர்பார்த்த ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய உறவினர்களிடம் இருந்து உங்களுக்குத் தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. வெளியிடங்களில் நீங்கள் செய்யும் முதலீடுகளால் உங்களுக்கு நன்மை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமாகவும் இருக்கும்.

மகரம்
உங்களுடைய வேலையில் உங்களுக்கு ஏற்பட்ட மந்தத் தன்மையின் காரணமாக நீங்கள் யாரிடமேனும் தேவையில்லாத அவச் சொல்லுக்கு ஆளாக நேரிடும். தொழிலில் உங்களுடைய பங்குதாரர்களிடம் கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. மனதுக்குள் இருக்கும் கவலைகள் நீங்கும். உங்களுடைய உறவினர்களின் வருகையினால் உங்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமாகவும் இருக்கும்.

கும்பம்
பரம்பரை சொத்துக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயங்கள் ஏற்படும். பொதுக்கூட்டங்ளில் பேசுகின்ற பொழுது, நீங்கள் எதிர்பார்த்த ஆதரவுகள் உங்களுக்கு ஏற்படும். வேலையில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். நீங்கள் செய்கின்ற தொழிலில் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும். உஙகளுடைய உயர் அதிகாரியினுடைய நம்பிக்கையைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமாகவும் இருக்கும்.

மீனம்
பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது, உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். முக்கிய விவாதங்களில் நீங்கள் நினைத்தபடி முடிவுகள் கிடைக்கும். தேவையில்லாத வீண் செலவுகளால் உங்களுடைய சேமிப்புகள் குறைய ஆரம்பிக்கும். பெற்றோர்களின் வழி ஆதரவினால் உங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி ஏற்படும். தேவையில்லாத வீண் அலைச்சல்களால் உங்களுடைய சேமிப்பு குறையும். உங்களுடைய உடல் நலத்தில் உங்களுக்கு அதிக கவனம் தேவைப்படுகிறது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications