Latest Updates
-
ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: மே 10 முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
வெயிலால் எரியும் சருமத்தை கூலாக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் போடுங்க.. -
இன்ஸ்டாகிராம் 'போலி லவ் குரு' கும்பல் வேட்டை: தம்பதிகளுக்கு போலீஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை! -
Mothers Day 2026: வேலைக்கு செல்லும் அம்மாக்களுக்கான சில ஆரோக்கிய டிப்ஸ்! -
இன்ஸ்டாகிராம் ஜோதிடர் பெயரில் பகீர் மோசடி! ஆன்மீக வலை விரித்து பெண்களை மிரட்டிய கொடூரம்! -
மொறுமொறுப்பான.. சோயா பாப்கார்ன் - எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
குரு-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: மே 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும்! -
கொளுத்தும் கோடையில் கற்றாழை வெச்சு.. இப்படி ஒருவாட்டி குழம்பு செய்யுங்க.. மீன் குழம்பு மாதிரி இருக்கும்.. -
மே 8 கிரகப்பிரவேசம்: உங்கள் புதிய வீட்டில் செல்வம் கொழிக்க இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க! -
World Asthma Day 2026: ஆஸ்துமா குணமாக இந்த கசாயத்தை 30 நாட்கள் குடிங்க..- கூறும் ஆயுர்வேத டாக்டர்!
இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் பரம்பரை சொத்துனாலே ஏன் பஞ்சாயத்து வருதுனு தெரியுமா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது?

எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.

மேஷம்
வியாபாரிகளுக்கு நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு கிடைக்கும். வீட்டுக்கு உறவினர்களின் வருகையினால் மனம் மகிழ்ச்சி அடையும். நிர்வாகத்தில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்வதின் மூலம் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். தொழிலில் பங்குதாரர்களுடைய துணையால் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

ரிஷபம்
நீங்கள் செய்கின்ற செயல்களில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். நிர்வாகம் தொடர்பான முடிவுகளில் கொஞ்சம் சிந்தித்துச் செயல்படுங்கள். வீட்டில் பெரியவர்களுடன் உரையாடுகின்ற பொழுது, பேச்சில் கூடுதல் கவனம் தேவை. நீங்கள் எதிர்பார்த்த சில காரியங்களில் கொஞ்சம் காலதாமதமாக இருக்க வேண்டும். நீங்கள் எடுத்துச் செல்லும் உடைமைகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்
வணிகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுடைய புதிய முதலீடுகளால் உங்களுக்கு நன்மையே உண்டாகும். உங்களுடைய உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை நீங்கள் பெறுவீர்கள். வாகனங்களைப் பழுது பார்ப்பீர்கள். உங்களுடைய பழைய நண்பர்களைச் சந்திக்க நேரிடும். போட்டிகளில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான சூழல்கள் உண்டாகும். நீங்கள் எதிலும் அவசரப்படாமல் பொறுமையாகச் செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமாகவும் இருக்கும்.

கடகம்
தேவையில்லாத வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பெற்றோர்களின் ஆதரவினால் உங்களுடைய தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வெளிநாடு சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பில் ஈடுபடுவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். புனித யாத்திரைகள் மற்றும் ஆன்மீகய் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

சிம்மம்
உங்களுடைய வீட்டில் பிள்ளைகளின் ஆதரவினால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மகான்களுடைய தரிசனங்கள் உண்டாகும். பரம்பரை சொத்துக்களால் உங்களுக்குச் சுப விரயச் செலவுகள் ஏற்படும். வாகனங்கள் சம்பந்தப்பட்ட தொழிலில் நினைத்த லாபங்கள் கிடைக்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் கூடுதல் பொறுமையுடன் நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.

கன்னி
மனதில் இருக்கும் கவலைகள் குறைந்து மனம் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். வீட்டில் உள்ள குழந்தைகளால் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். பயணங்களால் உங்களுக்கு அனுகூலங்கள் ஏற்படும். பரம்பரை சொத்துக்களால் வீண் விரயச் செலவுகள் ஏற்படும். விவாதங்களில் நீங்கள் நினைத்த முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். இதுவரைக்கும் தடைபட்டுக் கொண்டிருந்த செயல்களை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

துலாம்
தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் எதிலும் கொஞ்சம் அதிக துணிச்சலுடன் ஈடுபட்டு லாபமும் அதனால் மனம் மகிழ்ச்சியும் அடைவீர்கள். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் செயல்படுங்கள். வீட்டில் சுப செய்திகள் வந்து சேரும். தேவையில்லாத வீண் அலைச்சல்களால் உங்களுடைய உடல் சோர்வு அடையும். தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளைக் களைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமாகவும் இருக்கும்.

விருச்சிகம்
மனதுக்குள் தோன்றும் புதுவிதமான வித்தியாசமான எண்ணங்கள் உங்களுக்குள் வந்து போகும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது உங்களுக்கான லாபங்கள் அதிகரிக்கும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வந்து போகும். புதிய நபர்களின் அறிமுகத்தினால் தொழிலில் நீங்கள் நினைத்தபடி லாபம் கிடைக்கும். நண்பர்களிடம் கேளிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமாகவும் இருக்கும்.

தனுசு
வீட்டில் பெற்றோர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். பிரபலமான ஆட்களுடைய நட்பு உங்களுக்குக் கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் மேன்மையான சூழல்கள் உண்டாகும். சுய தொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். குடும்பத்தில் கொஞ்சம் கலகலப்பான சூழல்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளிடம் கொஞ்சம் அமைதியாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

மகரம்
தொழில் சம்பந்தமாக உங்களுடைய பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும். உயர் பதவியில் இருக்கின்றவர்களுக்கு சாதகமான நாளாக இன்று அமையும். சுய தொழில் செய்கின்றவர்கள் புதிதாக சில யுக்திகளைக் கையாண்டு லாபம் அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

கும்பம்
பெற்றோர்களின் உறவினர்களின் வழியாக மனம் மகிழ்ச்சி ஏற்படும். நீங்கள் பணிபுரியும் இடங்களில் உங்களுடைய சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு மேன்மையான சூழல்கள் அமையும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய யுக்திகளைக் கற்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமாகவும் இருக்கும்.

மீனம்
உங்களுடைய தேவையற்ற வீண் செலவுகளால் உங்களுடைய சேமிப்பு கரையத் தொடங்கும். வேலையில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கத் தொடங்கும். முக்கியமான உயர் பதவி கிடைப்பதற்கான உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். புதிய நபர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்த்திடுங்கள். கூட்டாக செய்கின்ற தொழிலில் உள்ள பங்குதாரர்கள் மூலமான தொழிலில் பல புதிய அபிவிருத்திகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் பச்சை நிறமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications