இந்த ரெண்டு ராசிக்காரங்களும் வாயாலயே சட சுடறதுல பெரிய ஆளுங்க...

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

By Mahibala

ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

horoscope

எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உழைப்புக்குற்ற அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டி்ல சகோரதரர்களின் ஆதரவு கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்கும். காது சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

பயணங்களின் மூலம் நினைத்த காரியத்தை வெற்றியுடன் முடிப்பீர்கள். சிந்தனையின் போக்கினில் மாற்றம் உண்டாகும். உடல் சோர்வின் காரணமாக எடுத்த காரியத்தை நிறைவேற்ற கால தாமதமாகும். நினைவாற்றலில் மந்தத்தன்மை ஏற்படும். சுப செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும். பெற்றோர்கள் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

முக்கியப் பொறுப்பில் பணியில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். போட்டிகளில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களுடன் வெளியூா் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பணியில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருந்தது.

கடகம்

கடகம்

வீட்டில் உள்ள பிள்ளைகளின் மூலம் உங்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். நிர்வாகத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். தொழிலில் லாபம் உண்டாகும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையால் பேரும் புகழும் உண்டாகும். பொது சுவைகளில் ஈடுபடுகிறவர்கள் எதிர்பார்க்காத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அதனால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களால் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பொது காரியங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு புகழ் உண்டாகும். பெற்றோரின் உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

 கன்னி

கன்னி

கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்த வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் வந்து சேரும். விலையுயர்ந்த பொருள்களை கையாளுகிற போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

துலாம்

துலாம்

பிள்ளைகளின் மூலமாக வீட்டில் சாதகமான சூழல்கள் உண்டாகும். பரம்பரை சொத்துக்களில் இருநு்து வந்த பிரச்னைகள் நீங்கி,சுமூகமான நிலை உண்டாகும். எதிர்பார்க்காத இடங்களில் இருந்து பணவரவு உண்டாகும். தொழில் சம்பந்தமாக நீங்கள் செய்த முயற்சிகள் பெரும் வெற்றியைத் தரும். உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் நீங்கி முன்னேற்றம் அடைவீர்கள். பெரியவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு சுமூகமான தீர்வை எட்டுவீர்கள். உங்களுடைய உழைப்புக்கேற்ற முன்னேற்றம் நிச்சயம் உண்டாகும்.அரசு சம்பந்தப்பட்ட தாமதமாகி வந்த பணிகள் விரைவில் முடியும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

தனுசு

தனுசு

நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு பேரும் புகழும் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். உங்களுடைய சிந்தனையின் போக்கில், கொஞ்சம் மாற்றம் ஏற்படும். நண்பர்களின் மூலமாக, உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். உங்களுடைய முழு அறிவுத் திறமையையும் வெளிப்படுத்துவார்கள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 9ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதாநிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கும் இருக்கும்.

 மகரம்

மகரம்

வாடிக்கையாளர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். அதனால் உங்களுடைய தனலாபம் அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். எதையும் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றலால் அனுகூலங்கள் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களின் மூலமும் லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

வேலை சம்பந்தப்பட்ட விஷங்களில் உள்ள ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வீட்டில் உள்ளவர்களிடம் விவாதங்களைத் தவிர்த்து அனுசரணையோடு நடந்து கொள்ளுங்கள். விலையுயர்ந்த உடைமைகளில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். மனதுக்குள் தோன்றும் தேவையற்ற எண்ணங்களினால் மனச்சோர்வு ஏற்படும். உறவினர்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மீனம்

மீனம்

பொது காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மனதில் தேங்கியிருந்த கவலைகளை தூக்கி எறிந்துவிட்டு மகிழ்ச்சியாக பயணிப்பீர்கள். தள்ளிப்போய்க் கொண்டிருந்த திருமண முயற்சிகள் கைகூடும். வரன்கள் வந்துசேரும். வாகனச் சேர்க்கை ஏற்படும். திறமையின் காரணமாக புதிய பொறுப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக, எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, July 8, 2019, 6:00 [IST]
Desktop Bottom Promotion