Latest Updates
-
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா?
மாசி சனி - எந்தெந்த கிரகங்களால் எந்தெந்த ராசிகளுக்கு சாதகமும் பாதகமும் வரும்?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் சிலருக்கு காபியில் தொடங்கும். சிலருக்கு செய்தித்தாளில் ராசிபலன் பார்த்த பின்பு தான் எல்லாமே. அப்படிப்பட்டவர்களுக்காக இன்றைக்கு எந்த ராசிக்கு என்ன பலன்கள் என்று தெரிந்து கொள்வோமா... அப்படி இன்னைக்கு கும்ப ராசிக்காரர் எதிலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையில்லாத விவாதங்களையும் முன் பின் தெரியாத புதிய ஆட்களிடம் பேசுவதையும் முற்றிலும் தவிர்த்திடுவது நல்லது.

மேஷம்
உத்தியோகத்தில் உங்களுடைய சக ஊழியர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உறவினர்களின் மூலமாக வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்குப் பிடித்த பழைய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களைப் பற்றி நன்கு புரிந்து கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கிறது.

ரிஷபம்
நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உங்களுடைய உதவியினால் மற்றவர்கள் பயன் பெறுவார்கள். செய்கின்ற தொழிலில் சில சில மாற்றங்களைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளுடைய பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வீட்டுக்குத் தேவையான நவீன சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மிதுனம்
உத்தியோகத்தில் இருக்கின்றவர்கள் தங்களுடைய மூத்த அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்வீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் உங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்கும். வாகனத்தை பழுது பார்ப்பதற்கான சிறு விரயச் செலவுகள் உண்டாகும். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கடகம்
தொழிலில் உங்களுடைய பழைய பங்குதாரரை மாற்றி புதிய பங்குதாரரை சேர்ப்பீர்கள். இதன் மூலம் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய மறைமுகமான எதிர்ப்புகள் குறையும். உங்களுடைய பழைய நினைவுகளால் வீண் கவலைகள் உண்டாகும். உங்களுடைய திறமைகள் வெளிப்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சக ஊழியர்களுடைய ஆதரவுகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட உண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

சிம்மம்
உங்களுடைய புதிய புதிய முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். பணம் சேமிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். அரசு அதிகாரிகளின் உதவியினால் உங்களுடைய சில செயல்களை மிக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி
வியாபாரங்களில் உங்களுக்கு ஏற்ற இறக்கங்கள் உண்டாகும் நாள். உடல் சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்பு அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய மேலதிகாரிகளிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. செய்கின்ற தொழிலில் அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் தேவையில்லாத விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கிறது.

துலாம்
வெளியூரிலிருந்து சுப செய்திகள் கிடைக்கும். தொழிலில் சில மாற்றங்கள் செய்ய முற்படுவீர்கள். நம்பிக்கையுடன் புதிய முயுற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணியில் இருந்து வந்த சின்ன சின்ன இடையூறுகள் விலக ஆரம்பிக்கும். குடும்பத்தின் சூழ்நிலையை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. வாகனப் பயணங்களில் கொஞ்சம் நிதானமாக இருப்பது அவசியம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீலநிறமாகவும் இருக்கும்.

விருச்சிகம்
உங்களுடைய சொத்துப் பிரச்னைகளுக்கு உங்களுக்கு சாதகமான சுமூகமான தீர்வுகள் உண்டாகும். வியாபாரங்களில் உங்களுக்கு போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக தடைபட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். எதையும் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமாகவும் இருக்கும்.

தனுசு
தொழில் முனைவோருக்கு இடையே போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். குடும்ப உறுப்பினர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். எதிர்பாராமல் உண்டாகும் செலவுகளினால் உங்களுடைய சேமிப்புகள் குறைய ஆரம்பிக்கும். தொழிலில் புதிய நபர்களுடைய நட்பு உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மகரம்
குடும்பத்தில் என்ன தேவை என்பதை உணர்ந்து அதை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். வெளியூரக்கு பயணங்களை மேற்கொள்வதால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனதுக்குள் தன்னம்பிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும். தொழிலில் உங்களுடைய சாதகமான சூழல்கள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம்அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

கும்பம்
உங்களுடைய பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்வுகள் கிடைக்கும். நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்த பணியை முழு மனதோடு செய்து முடிப்பீர்கள். உங்களுடைய எதிர்பாராத தனவரவுகள் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களுடைய செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

மீனம்
சில நேரங்களில் உங்களுக்கு மன அமைதியற்ற நிலைகள் ஏற்பட வாய்ப்புண்டு. மற்றவர்களுடைய பிரச்னையில் தலையிடுவதை தவிர்த்துவிடுங்கள். அதன்மூலம் தேவையில்லாத அவப்பெயர் உண்டாகலாம். பொருள் சேர்க்கை கிடைக்க கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எந்த காரியமாக இருந்தாலும் அதை சிந்தித்து செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications