Latest Updates
-
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
இந்த மூனு ராசிக்கு வர்ற அதிர்ஷ்டத்த பார்த்து மத்தவங்களுக்கு வயிறு எரியப் போகுது...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும்.

எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
உங்களுடைய மனதில் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். வெளியாட்களின் மூலமாக உங்களுக்கு லாபங்கள் உங்களுக்கு உண்டாகும். முக்கியப் பணியில் உள்ளவர்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். பொது காரியங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். புனித யாத்திரைகள் செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். முக்கிய விவாதங்களில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

ரிஷபம்
உங்களுடைய பேச்சுத் திறமையினால் பெரும் புகழ் அடைவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு வெற்றி உங்களைத் தேடி வரும். உங்களுடைய ஞானத் தேடல் சம்பந்தமான ஆராய்ச்சி நீங்கள் நினைத்த முடிவை உங்களுக்குக் கொடுக்கும். உங்களுடைய முழுமையான நிர்வாகத் திறமையை வெளிப்படுத்துவீர்கள். கல்வி பயில்கின்ற மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கி நிற்கும். வாகனங்களில் பயண்ஙகள் மேற்கொள்ளும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மிதுனம்
உங்களுடைய சகோதரர்கள் உங்களுக்குச் சாதகமான நடந்து கொள்வார்கள். உங்களுடைய புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகளால் உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் உண்டாகும். மனக் குழப்பங்கள் அதிகரிக்கும். தொழில் செய்யும் இடத்தில் தேவையில்லாத பேச்சுக்கள் மற்றும் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

கடகம்
உங்களுக்கு பணியிடத்தில் கௌரவப் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கூட உருவாகலாம். பெற்றோர்களுடைய சொத்துக்களின் மூலம் உங்களுடைய சேமிப்புகள் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். அடிப்படை கல்வி பயில்கின்ற மாணவர்களுக்குச் சாதகமான நாளாக அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

சிம்மம்
புதிய தொழிலை நீங்கள் அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகளை அமைப்பீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்புக்கள் உ்ஙகளைத் தேடி வரும். கால்நடைகளை வளர்ப்பதற்கான சின்ன சின்ன விரயச் செலவுகள் ஏற்படும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். பண வரவுகள் பெரும் இழுபறிகளுக்கு இடையில் ஒருவழியாக வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி
கால்நடைகளின் மூலம் உங்களுக்குப் பெரும் லாபங்கள் கிடைக்கும். வீட்டில் உள்ள கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து உங்களுக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூா பயண்ஙகளால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்கள் மூலமாக உங்களுக்குப் பய வரவு வந்து சேரும். பெரியோர்களுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

துலாம்
புதிதாக வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான வாய்ப்புகளை உங்களைத் தேடி வரும். வீட்டில் பிள்ளைகளுடைய செயல்பாடுகளால் பெருமை அடைவீர்கள். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு பெருமையும் நல்ல முன்னேற்றமும் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களால் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
தொழில் சம்பந்தமாக தேவையில்லாத அலைச்சலும் மனச்சோர்வும் உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான பொருளாதார முன்னேற்றங்கள் உண்டாகும். செய்கின்ற தொழிலில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். அதனால் லாபமும் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 9 ஆகவும் அதிர்ஷ்ட திசை தென்கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறம் இளம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

தனுசு
நீங்கள் மனதில் நினைத்த காரியங்களை மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய உயர் அதிகாரிகளால் பெரிதும் பாராட்டப்படுவீர்கள். உங்களுடைய எண்ணங்களிலும் சிந்தனைகளிலும் மாற்றங்கள் ஏற்படும். வீடு மற்றும் மனை வாங்குவது குறித்த ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொது விவாதங்களில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

மகரம்
நண்பர்களிடம் தேவையில்லாத வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பொதுக் கூட்டங்களில் பேசுகின்ற பொழுது, கொஞ்சம் நிதானப் போக்கினைக் கடைபிடிப்பது நல்லது. மற்றவர்களுடைய செயல்பாடுகளை விமர்ச்சிக்காமல் இருப்பது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தாமல் இருக்கும். முக்கிய காரியங்களில் ஏதேனும் முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தால் கொஞ்சம் நிதானமாக இருங்கள். மனதுக்குள் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கும்பம்
வர்த்தகம் சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு கூடுதல் லாபம் உண்டாகும். வீட்டின் பொருளாதார நிலை உயரும். உங்களுடைய உயர் அதிகாரிகளுடன் கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். எதிர்காலம் சம்பந்தப்பட்ட திட்டங்களை வகுப்பது நல்லது. உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மீனம்
பணியில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். பொதுக் கூட்டங்களில் பேசுகின்ற பொழுது, எதிர்பார்த்த ஆதரவு கிடைப்பது கொஞ்சம் கடினமானதாக இருகு்கும். உங்களுடைய செய்தொழிலில் புதிய முதலீட்டாளர்கள் உருவாவார்கள். உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். கோவில் சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்வதில் உங்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications