Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
கோவிலுக்குள் புகுந்த முதலை... மக்கள் அத பார்த்து என்ன பண்ணாங்க தெரியுமா?
கோவிலுக்குள் புகுந்த முதலையைப் பார்த்ததும் மக்கள் வழிபடத் துவங்கிய சுவாரஸ்யமான நிகழ்ச்சி பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
இந்து மத கலாச்சாரத்தில் பல்வேறு விலங்குகளையும் பறவைகளையும் வழிபடும் பழக்கம் உள்ளது. மக்கள் முழு அர்ப்பணிப்போடு இந்த விலங்குகளையும் பறவைகளையும் வழிபட்டு அவைகளுக்கு உணவு கொடுத்து வருகின்றனர்.

உண்மையில் அபாயகரமாக விளங்கும் இத்தகைய விலங்குகளை நிஜத்தில்வழிபடுவது எந்த விதத்தில் சிறந்தது? ஆனால் இந்தியர்களாகிய நாம், நம்முடைய நம்பிக்கை சார்ந்த விஷயங்களை ஒருபோதும் கைவிட நினைப்பதில்லை.

கோவிலுக்குள் முதலை
அந்த நம்பிக்கையில் சில அபாய விளைவுகள் ஏற்பட்டாலும் அதனால் நமது நம்பிக்கை பொய்ப்பதும் இல்லை. அது போல் ஒரு வழக்கு தான் இப்போது நாம் காணவிருப்பது. குஜராத் மாநிலத்தில் மஹிசாகர் மாவட்டத்தில் கொடியர் மாதா ஆலயத்தில் ஒரு முதலை நுழைந்து விட்டது.

நடு கோவில்
ஒரு மாலை நேரத்தில் கொடியர் ஆலயத்தின் பிரகாரத்தில் ஒரு முதலை நுழைந்துவிட்டது. கொடிய மாதாவை வழிபடக் கூடிய ஆலயமாக விளங்குவது இந்த கொடியர் ஆலயம். அந்த தெய்வத்தின் வாகனமாக அறியபப்டுவது முதலை. முதலைக்கும் இந்த கோயிலுக்கும் உள்ள இந்த தொடர்பால், முதலை கோயிலுக்குள் நுழைந்த செய்து அறிந்த மக்கள் முதலையைக் காண கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு வந்து வழிபட்டனர்.

மக்கள் பயம்
முதலைக்கு பசி எடுத்தால் அது தன் இரையை விட்டு வைக்காது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அங்கு கூடியிருந்த மக்கள் இதனைப் பற்றி பயமோ பதட்டமோ அடையவில்லை. முதலைக் கண்ட மக்கள் பயம் இல்லாமல் எதிர்பார்க்காத ஒரு செயலைச் செய்தனர்.
ஆம், அங்கு குழுமி இருந்த மக்கள் முதலையை சுற்றி நின்று அதற்கு ஆரத்தி எடுக்கத் தொடங்கினர். ஒரு ஆறடி முதலை இந்த கோயிலுக்கு நுழைந்ததை அறிந்த வனத்துறையினர் சிறிதும் தாமதிக்காமல் அந்த இடத்திற்கு விரைந்து வந்து சேர்ந்தனர்.

வழிபாடு
இந்த கோயிலைச் சுற்றி வசித்த மக்கள் முதலையை வனத்துறையினரிடம் ஒப்படைக்க சுமார் மூன்று மணி நேரம் தாமதித்தனர். அவர்கள் அனைவரும் அந்த முதலையை வழிபட்ட பின்பு தான் முதலையை வனத்துறையினர் மீட்டுச் சென்றதாக காடுகளின் துணைப் பாதுகாவலர் Mr. RM. பரமர் அறிக்கை வெளியிட்டார்.

வனத்துறை
முதலையை எடுத்துச் செல்லும் கடைசி நிமிடம் வரை அதனைக் காண கூட்டம் வந்து கொண்டிருந்ததாக அவர் கூறினார். மதம் குறித்த மக்களின் நம்பிக்கையை கெடுக்கக் கூடாது என்ற நோக்கத்தில் வனத்துறையினர் சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து பின்பு அவர்கள் முதலையை அங்கிருந்து அகற்றி அருகில் இருந்த ஒரு ஏரியில் விட்டு விட்டதாக அதிகாரிகள் கூறினர்.



Click it and Unblock the Notifications