இந்திய-சீன கலாச்சாரத்தின் படி இந்த எண்கள் உங்களுக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டத்தை வழங்குமாம் தெரியுமா?

இந்த உலகத்தில் எண்கள்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. சில எண்கள் அதிர்ஷ்டமான எண்களாகவும், சில எண்கள் துரதிர்ஷ்டமான எண்களாகவும் இருக்கிறது.

இந்த உலகத்தில் எண்கள்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. சில எண்கள் அதிர்ஷ்டமான எண்களாகவும், சில எண்கள் துரதிர்ஷ்டமான எண்களாகவும் இருக்கிறது. இந்தியாவில் எண்களை பற்றிய மூடநம்பிக்கைகள் அதிகமுள்ளது. வீடு, தொலைபேசி எண், வாகனத்தின் எண் அனைத்தயுமே அதிர்ஷ்டமான எண்களா என்று பார்த்து வாங்கும் பழக்கம் நம்மிடம் உள்ளது.

these numbers can be lucky for you

இந்த பழக்கம் நம்மிடம் மட்டும் இல்லை. சீனர்களிடமும் இருக்கிறது. நம்முடைய ஜோதிட கணிப்பும், சீனர்களின் ஜோதிட கணிப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். இந்திய மற்றும் சீனர்களின் கணிப்புப்படி எந்தெந்த எண்கள் அதிர்ஷ்டமான எண்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிர்ஷ்ட எண் 2

அதிர்ஷ்ட எண் 2

உலகம் முழுவதும் பல கலாச்சாரங்களில் எண் 2 அதிர்ஷ்டமான எண்ணாக கருதப்படுகிறது. அதற்கு காரணம் அதன் ஜோடி கூட்டுத்தொகையாகும், அதாவது 1+1=2. இதன்மூலம் அனைத்து நல்ல செய்திகளும் ஜோடியாக வரும். எப்பொழுதும் ஒரு பொருளுடன் இன்னொரு பொருள் சேர்ந்து வருவது அதிக இன்பத்தைத்தான் கொடுக்கும்.

அதிர்ஷ்ட எண் 6

அதிர்ஷ்ட எண் 6

சீன கலாச்சாரத்தில் 6 மிகவும் அதிர்ஷ்டமான எண்ணாகும் அதற்கு காரணம் அது உச்சரிக்கப்படும் விதமாகும். ஆம், இது ஒலி பொருத்தத்திற்கான சிறந்த உதாரணமாகும். மாண்டரின் படி இது லியு என்று அழைக்கப்படும். இதற்கு உராய்வின்றி மென்மையான என்பது அர்த்தமாகும். எனவே 6 அதிர்ஷ்டமான எண்ணாக கருதப்படுகிறது. இது எந்த தடைகளும் இன்றி சீராக காரியத்தை முடிக்கும் என்பது நம்பிக்கையாகும்.

எண் 6-க்கான ஆர்வம்

எண் 6-க்கான ஆர்வம்

6 ஆனது அதன் முக்கியத்துவம் காரணமாக அனைவராலும் விரும்பப்படுகிறது, பல ஆறுகள் இருப்பது மேலும் அதிர்ஷ்டம் என்று கருதப்படுகிறது. உதாரணத்திற்கு சீனாவில் ஒரு வாகனத்தின் எண்ணில் நிறைய 6 இருந்தால் அதனை வாங்குபவர் அதிக பணம் செலுத்த வேண்டும். அதற்கு காரணம் அதில் அதிர்ஷ்ட எண் 6 அதிகமிருப்பதுதான்.

எண் 8

எண் 8

8 ஆனது இந்தியா மற்றும் சீனா இரண்டு கலாச்சாரங்ளிலும் அதிர்ஷ்டமான எண்ணாக கருதப்படுகிறது. கிரேக்கர்களை பொறுத்தவரை எண் 8 முடிவிலியை குறிக்கிறது, மேலும் இது ஒரு தனித்துவமான சமச்சீர்நிலையைக் கொண்டுள்ளது. இந்தியர்களை பொறுத்தவரை 8 ஆனது சனிபகவானை பிரதிபலிக்கும் எண்ணாகும்.

எண் 8 செல்வத்துக்கானது

எண் 8 செல்வத்துக்கானது

சீன கலாச்சாரத்தில் ஒலி பொருத்தத்திற்கான மற்றொரு உதாரணம் 8 ஆகும். கன்டோனியா மொழியில் இதனை உச்சரிக்கும் போது அது " செல்வம்" மற்றும் " செழிப்பை" உணர்த்துவதாக உள்ளது. இது அதிர்ஷ்டத்திற்கு மிகவும் நெருக்கமான எண்ணாகும். எனவே 8 அதிகமாக இருப்பது உச்சத்திற்கு அழைத்து செல்லும் என்பது அவர்களின் நம்பிக்கை.

சீனாவில் 8-ன் முக்கியத்துவம்

சீனாவில் 8-ன் முக்கியத்துவம்

சீனர்கள் எண் 8-க்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம் 2008 ஒலிம்பிக் ஆகும். 2008 ஒலிம்பிக் சீனாவில் இருக்கும் பீஜிங்-ல் நடந்தது. அவர்களின் முக்கியமான நாளை அவர்கள் 08-08-08 அன்றுதான் தொடங்கினர். மேலும் நிகழ்ச்சியை சரியாக 08:08:08 மணிக்குதான் தொடங்கினர்.

அதிர்ஷ்ட எண் 7

அதிர்ஷ்ட எண் 7

சீனர்கள் எண் 7-ஐ அதிர்ஷ்ட எண்ணாக கூறக் காரணம் இதன் ஒலி வாழ்க்கை மற்றும் வளர்ச்சியுடன் தொடர்புடையது என்பதால்தான். அவர்களை பொறுத்தவரை 7 நல்ல சகுனமாக கருதப்படுகிறது. 7 என்பது ஒற்றுமைக்கான குறியீடாகும். நீங்கள் 7 ஆம் தேதியில் நிச்சயதார்த்தமோ அல்லது திருமணமோ செய்ய நேர்ந்தால் அது உங்களை அதிர்ஷ்டமாகும்.

கடவுளுடன் தொடர்பு

கடவுளுடன் தொடர்பு

பாரம்பரியமாக, பல கலாச்சாரங்களில் 6 ஆம் எண் மனிதகுலத்தை குறிக்கிறது, இதன் காரணமாக, எண் 7 என்பது மனிதகுலத்தின் மையமாக மேலே உள்ள கடவுளுடன் நேரடி தொடர்பைக் கொண்டுள்ளது.

எண் 7 முடிவற்றது

எண் 7 முடிவற்றது

எண் 7 ஆனது உணமையிலேயே முடிவற்றது. 7 ஆனது இந்த பிரபஞ்சத்தை குறிக்கிறது. மேலும் இது சொர்க்கத்தில் இருக்கும் 7 ராஜ்ஜியங்களையும் குறிக்கிறது. கடவுள் இந்த பிரபஞ்சத்தை 7 நாளில் உருவாக்கியதாக கூறப்படுகிறது. 7 அதிசயங்கள், 7 கடல்கள் என இந்த பட்டியலுக்கு எல்லையே இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, July 17, 2019, 16:35 [IST]
Desktop Bottom Promotion