Latest Updates
-
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
கடகத்தில் குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்..
பிறரின் பலவீனங்களை எளிதாக அறிய சாணக்கியர் கூறும் தந்திரங்கள் என்னென்ன தெரியுமா?
அனைவருக்கும் பிடித்த மாதிரி வாழவேண்டும் என்றுதான் அனைவரும் நினைக்கிறோம். ஆனால் அந்த பாக்கியம் கடவுள்களுக்கே இன்றுவரை கிடைக்கவில்லை.
இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானவர்கள். ஒவொருவருக்கும் எப்படி தனித்தனி கைரேகை இருக்கிறதோ அதேபோல ஒவ்வொருவருக்கும் என தனிப்பட்ட குணம் இருக்கும். ஆனால் மனித வாழ்க்கையானது ஒருவரையொருவர் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தை அனைவர்க்கும் ஏற்படுத்தியிருக்கிறது.

அனைவருக்கும் பிடித்த மாதிரி வாழவேண்டும் என்றுதான் அனைவரும் நினைக்கிறோம். ஆனால் அந்த பாக்கியம் கடவுள்களுக்கே இன்றுவரை கிடைக்கவில்லை. ஆனால் முடிந்தவரை மற்றவர்களை கவர தேவையான குறிப்புகளை சாணக்கியர் தன் சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். மற்றவர்களை கவர வேண்டுமெனில் முதலில் அவர்களின் பலவீனத்தை அறிய வேண்டும். இந்த பதிவில் எப்படிப்பட்டவர்களை எப்படி கவர வேண்டுமென்று சாணக்கியர் கூறியுள்ள குறிப்புகளை பார்க்கலாம்.

பலதரப்பட்ட மனிதர்கள்
ஆச்சாரியர் சாணக்கியர் கூறும்போது நம்மை சுற்றியும் பலதரப்பட்ட மக்கள்கள் வசித்து வருகின்றனர். சிலர் பணத்தாசை பிடித்தவர்களாக இருப்பார்கள், சிலர் மூர்க்கத்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள், சிலர் புத்திசாலிகளாகவும், சிலர் முட்டாள்களாகவும் இருப்பார்கள். ஒவ்வொருவரையும் கவர ஒவ்வொரு வழி உள்ளது. அது என்னவென்று மேற்கொண்டு பார்க்கலாம்.

பேராசை பிடித்தவர்கள்
பேராசை பிடித்தவர்களை கவர்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாகும். ஏனெனில் அவர்களின் ஒரே குறிக்கோள் பணமாகாத்தான் இருக்கும். பேராசை பிடித்தவர்களை உங்கள் வழிக்கு கொண்டுவர ஒரேவழி அவர்களுக்கு தேவைக்கு அதிகமாக பணம் கொடுப்பதுதான்.

மூர்கத்தனமானவர்கள்
மூர்க்கத்தனமானவர்களை கட்டுப்படுத்தவும், வசியம் செய்யவும் ஒரே வழி அவர்களின் போக்கில் போவதுதான். இவர்களை கவரும் ஆயுதம் அமைதிதான், இவர்களிடம் கட்டளையிடாமல் கோரிக்கையாகவே நீங்கள் நினைத்தை சாதித்து கொள்ளலாம்.

முட்டாள்
ஒரு முட்டாளை கவர வேண்டுமெனில் நீங்கள் செய்ய அவசியம் தேவைப்படுவது பெருமையாகும். அவர்கள் முட்டாள்தனமாக எதனை கூறினாலும் அதை ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறுவது எப்போதும் சரியென்று நினைக்கிறவர்கள் எளிதில் உங்கள் வழிக்கு வந்து விடுவார்கள். முட்டாள்களை மயக்கும் மற்றொரு ஆயுதம் புகழ்ச்சி ஆகும். புகழ்ந்தே உங்களுக்கு வேண்டியதை அவர்களிடம் இருந்து சாதித்துக் கொள்ளலாம்.

புத்திசாலிகள்
முட்டாள்களை கவரும் அளவிற்க்கு புத்திசாலிகளை கவர்வது எளிதான காரியம் அல்ல. புத்திசாலிகளை கவர வேண்டுமெனில் அவர்களிடம் உண்மையை மட்டுமே பேசவேண்டும். உண்மையை விட பெரிய சக்தி எதுவுமில்லை.

பணத்தை முக்கியமென நினைப்பவர்கள்
பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு அவர்களுக்கு போதுமான பணத்தை வணங்கினாலே போதும் அவர்கள் உங்களின் அடிமையாக. அதன்பின் நீங்கள் நினைக்கும்படி அவர்களை ஆட்டிவைக்கலாம். சாணக்கியர் கூறும் வாழ்க்கை ரகசிங்களை மேற்கொண்டு பார்க்கலாம்.

உயர்ந்த மனிதன்
ஒரு மனிதன் சிறப்படைவது அவனின் செயல்களால்தானே தவிர அவனின் பிறப்பால் அல்ல. கல்வியே ஒருவனுக்கு மிகச்சிறந்த நண்பனாகும். அழகு, செல்வம் போன்ற அனைத்து தகுதிகளையும் பின்னுக்கு தள்ளும் சக்தி கல்விக்கு உள்ளது.

நேர்மை
அதிக நேர்மை எப்போதும் ஆபத்தைத்தான் ஏற்படுத்தும். சாணக்கியரின் கருத்துப்படி ஒருவர் அதீத நேர்மையுடன் இருக்கவே கூடாது. ஏனெனில் வளைந்த மரம் பல ஆண்டு வாழும் நேரான மரமே முதலில் வெட்டப்படும்.

பயம்
பயம் உங்களை நெருங்கினாலே அதை தாக்கி அழிக்க பழகிக்கொள்ளுங்கள். ஒரு காரியத்தை செய்ய தொடங்கும்போது அது தோல்வியில் முடியுமோ என்று அஞ்சாதீர்கள். ஏனெனில் பயமின்றி வேலை செய்பவர்களே உண்மையில் மகிழ்ச்சியானவர்கள்.

மகிழ்ச்சி
சமநிலையான மனதில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பில்லை, மனநிறைவை போல மகிழ்ச்சியை வழங்குவது எதுவுமில்லை, பேராசையை விட கொடிய நோய் எதுவுமில்லை, இரக்கத்தை விட சிறந்த குணம் எதுவுமில்லை.



Click it and Unblock the Notifications
