Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
எந்த காரியத்தையும் தொடங்கும் முன் இந்த செயல்களை செய்தால் அது வெற்றியாக முடியும் என்கிறார் சாணக்கியர்
ஒரு புதிய செயலையோ, வியாபாரத்தையோ தொடங்கும்போது நமக்குள் பல போராட்டங்கள் நடக்கும். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நமக்கே சரியான தெளிவு இருக்காது.
சாணக்கியரின் திறமை பற்றியும், ஞானத்தை பற்றியும் நாம் நன்கு அறிவோம். அவரின் அறிவுரைகள் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியவை ஆகும். இந்தியாவின் மிகச்சிறந்த நூல்களில் அவரின் சாணக்கிய நீதியும், அர்த்தசாஸ்திரமும் மிகவும் முக்கியமானதாகும் .

ஒரு புதிய செயலையோ, வியாபாரத்தையோ தொடங்கும்போது நமக்குள் பல போராட்டங்கள் நடக்கும். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நமக்கே சரியான தெளிவு இருக்காது. இந்த பிரச்சினைகளுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் வழிகளை கூறியுள்ளார். இந்த பதிவில் ஒரு செயலை தொடங்கும் முன் செய்ய வேண்டியது என்னவென்று சாணக்கியர் எதை கூறுகிறார் என்று பார்க்கலாம்.

நேர்மறை எண்ணங்கள்
சாணக்கியரின் கருத்துப்படி ஒரு செயலை தொடங்கும் முன் அதன் காலம் மற்றும் இடத்தை நன்கு சோதித்து கொள்ள வேண்டும். அதற்கு தேவையான பணம் மற்றும் தனக்கு துணையாக இருப்பவர்கள் யார் என்பதையும் நன்கு சிந்திக்க வேண்டும்.

திறன்
ஒரு செயலை தொடங்கும் முன் அல்லது செய்வதற்கு ஒப்புக்கொள்ளும் முன் உங்களுடைய திறமை என்னவென்பதை நீங்கள் உணரவேண்டும். உங்களின் திறமைக்கு மீறிய செயல்களை ஒப்புக்கொள்வது உங்களை பிரச்சனையில் சிக்கவைக்கும்.

நாவடக்கம்
சாணக்கியரின் கருத்துப்படி உங்கள் காரியத்தின் வெற்றியும், தோல்வியும் உங்கள் நாக்கை நீங்கள் எப்படி உபயோகிக்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் இருக்கிறது. மற்றவர்களிடம் எவ்வளவு பொறுமையாகவும், அழகாகவும் பேசுகிறீர்களா உங்கள் காரியம் அவ்வளவு வெற்றிகரமாக முடியும்.

எதிரிகளை நண்பராக்குதல்
இது கூறவருவது மிகவும் எளிமையான உண்மையாகும். மற்றவர்களிடம் நீங்கள் மென்மையாக நடந்து கொண்டால் உங்களின் எதிரியும் உங்களின் நண்பர்களாக வாய்ப்புள்ளது. இது உங்கள் வெற்றியின் வாய்ப்பை அதிகரிக்கும்.

உடலை கவனித்து கொள்வது
கடவுள் மனிதர்களுக்கு அளித்திருக்கும் மிகப்பெரிய பரிசு எதுவென்றால் அது நமது உடல்தான். எனவே எந்தவொரு செயலையும் தொடங்கும் முன் அதற்கு உங்கள் உடல் தயாராக இருக்கிறதா என்பதை சோதித்து பார்த்து கொள்ளவும்.

மனைவி
எந்தவொரு புதிய செயலையும் தொடங்கும் முன் ஒருவர் கண்டிப்பாக தன் மனைவியுடன் ஆலோசிக்க வேண்டும். உங்கள் மனைவி உங்கள் வாழ்க்கையின் துணை ஆவார். எனவே எந்தவொரு முக்கியமான முடிவையும் எடுக்கும் முன் மனைவியிடம் ஆலோசிக்க வேண்டியது அவசியமாகும்.

ரகசியங்கள்
புது வியாபாரத்தை தொடங்கும் முன்னர் உங்களின் யோசனைகளை ரகசியங்களாக உங்களுக்குள்ளேயே வைத்து கொள்ளுங்கள். அனைவரிடமும் உங்களின் யோசனைகளை கூறுவது உங்களின் தோல்விக்கு காரணமாக அமையலாம்.

கடினமாக இருக்க வேண்டும்
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் சில கடினமான முடிவுகளை துணிந்து எடுக்க வேண்டும். இதற்காக சிலசமயம் மற்றவர்களிடம் நீங்கள் கடுமையாக நடந்து கொள்ள நேரும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் யோசிக்காமல் அப்படி நடந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
